தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ மற்றும் ‘இது டைகரின் கட்டளை’ பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து இந்த இசை வெளியீட்டு விழாவை நேரில் காண 1000 இலவச பாஸ்களை ரசிகர்களுக்கு வழங்குவதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாற்கான பதிவு இன்று மதியம் 1 மணிக்கு தொடங்கியது.
ஆனால், இலவச பாஸுக்கான புக்கிங் தொடங்கிய 15 நொடிகளில் தீர்ந்தது விட்டது.
இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
Rajini’s ‘Jailer’ audio launch free passes exhausted out in just 15 seconds