ரஜினி பட வில்லன் ராம் நடிக்கும் ‘டேக் டைவர்ஷன்’.; பாராட்டி வாழ்த்திய கார்த்திக் சுப்பராஜ்

ரஜினி பட வில்லன் ராம் நடிக்கும் ‘டேக் டைவர்ஷன்’.; பாராட்டி வாழ்த்திய கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை டு பாண்டிச்சேரி பயணத்தில் நடக்கும் கதையாக உருவாகி வரும் படம் ‘டேக் டைவர்ஷன்’.

இப்படத்தை இயக்குநர் சிவானி செந்தில் இயக்கியுள்ளார்.

இப்படத்திற்காக தேவா ஒரு கானா பாடலை பாடிக் கொடுத்து படக்குழுவினரை வாழ்த்தியது அனைவருக்கும் தெரியும்.

தேவா பாடிய அந்தப் பாடலைக் கேட்டு மிகவும் உற்சாகமான சாண்டி ,அந்தப் பாடலுக்கு ஒன்றரை நாளில் நடனம் அமைத்துக் கொடுத்து படக்குழுவினருக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

அடுத்த படியாக படத்துக்குப் பலம் சேர்க்கும் அம்சமாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இன்று வெளியிட்டார்.

முதல் பார்வையில் காட்சிகளைப் பார்த்துப் பாராட்டியதுடன் படக்குழுவினரையும் வாழ்த்தினார்.

இதேபோல் பர்ஸ்ட் லுக்கை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் நடன இயக்குநர் சாண்டியும் வெளியிட்டார்கள்.

இப்படி வரிசையாக திரையுலகினரின் ஊக்கப்படுத்துதல்களால் மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு.

“வாழ்க்கைப் பயணத்தில் நாம் போக நினைக்கும் இடத்தை சென்றடைய பல மாற்றுப் பாதைகள் நம்மை திசைதிருப்பும், ஆயினும் விடாமல் போராடினால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையே நகைச்சுவையுடன் திரையில் காட்டியிருக்கிறோம்” என்கிறார் இயக்குநர் சிவானி செந்தில்.

ரஜினியின் ‘பேட்ட’, ‘சதுரங்க வேட்டை’ படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் அறிமுக நாயகனாக சிவகுமார், நாயகியாக பாடினி குமார் நாயகியாக நடித்துள்ளார். இரண்டாம் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார்.

ஜான் விஜய் தான் வில்லன். விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜோஸ் பிராங்க்ளின். இவர் ஏற்கெனவே ‘நெடுநல்வாடை’, ‘என் பெயர் ஆனந்தன்’ படங்களின் மூலம் நல்லதொரு அறிமுகம் பெற்றிருப்பவர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு ஈஸ்வரன் தங்கவேல். இவர் ஏற்கெனவே நான்கு படங்களில் பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பு – விது ஜீவா.

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

Rajini villain plays important role in Take Diversion

விஷால் & ஆர்யாவின் ‘எனிமி’ பட டிரைலர் குறித்து இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.

விஷால் & ஆர்யாவின் ‘எனிமி’ பட டிரைலர் குறித்து இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆனந்த் சங்கர் எழுதி இயக்க மினி ஸ்டுடியோஸ் சார்பாக வினோத் குமார் தயாரிக்கும் படம் எனிமி.

இப்படத்தில் ஆர்யாவும் விஷாலும் நாயகர்களாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் மிருணாளினி ரவி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ் இன்னும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் டிரெய்லர் நாளை (24.07.2021) வெளியாகவுள்ளது.

ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் எனிமி படத்திற்கு சாம் சி.எஸ். பின்னணி இசையை அமைத்துள்ளார்.

இப்படத்தின் பின்னணி இசையைக் கேட்ட இயக்குநரும் தயாரிப்பாளரும் உற்சாகமடைந்துள்ளனர். படகுழுவினர் அனைவரும் பாராட்டியுள்ளனர்.

மேலும், டிரைலர் மற்றும் இப்படத்தில் சாம் சி எஸ் ஸின் பின்னணி இசை ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் நிச்சயம் கவரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகரும், படத்தொகுப்பை ரேமண்ட் டெரிக் கிரஸ்டாவும் செய்கிறார்கள்.

Music Director Sam CS about Enemy movie trailer

‘சூர்யா 39’ படத்திற்கு சூப்பர் டைட்டில் வைத்த ஞானவேல்.; வழக்கறிஞராக மிரட்டல் லுக்.!

‘சூர்யா 39’ படத்திற்கு சூப்பர் டைட்டில் வைத்த ஞானவேல்.; வழக்கறிஞராக மிரட்டல் லுக்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று நடிகர் சூர்யா தன் 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இதனை முன்னிட்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்திற்கு ‘எதற்கும் துணிந்தவன் ‘ என தலைப்பு வைத்து வீடியோ மற்றும் 3 லுக் போஸ்டர்கள் வெளியானது.

இன்று சூர்யா தனது 2 டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரித்து, நடித்து வரும் சூர்யா 39 படத்திற்கு ‘ஜெய் பீம்’ என தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரில் சூர்யா வழக்கறிஞர் தோற்றத்தில் தோன்றியுள்ளார்.

இந்த படத்தை ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கி வருகிறார்.

‘கர்ணன்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

ஷான் ரோல்டன் இசையமைக்க எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தலைப்பை இயக்குனர் ரஞ்சித் பதிவு செய்து இருந்தார் என்பதும் அவரே இந்த தலைப்பை கொடுத்துள்ளார்.

Suriya 39 title and first look announced

‘சுந்தரா டிராவல்ஸ் 2’ படத்தில் முரளி வடிவேலு கேரக்டர்களில் நடிக்கும் காமெடியன்ஸ்

‘சுந்தரா டிராவல்ஸ் 2’ படத்தில் முரளி வடிவேலு கேரக்டர்களில் நடிக்கும் காமெடியன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அசோகன் என்பவர் இயக்கத்தில் முரளி – வடிவேலு, ராதா, வினுசக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ‘சுந்தரா டிராவல்ஸ்’. (2001)

இது ‘ஈ பறக்கும் தாலிகா’ என்ற மலையாள படத்தின் ரீமேக்காகும்.

தற்போது நடிகர் முரளி உயிருடன் இல்லை. வடிவேலுவும் படங்களில் அவ்வளவாக நடிப்பதில்லை.

இந்த நிலையில் இப்படத்தின் பார்ட் 2 படம் அடுத்த ஆகஸ்ட் மாதம் துவங்கப்படவுள்ளதாம்.

இதில் யோகிபாபு & கருணாகரன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல் பாகத்தின் இயக்குனர் அசோகன் இந்த படத்தையும் இயக்க உள்ளார்.

yogi babu karunakaran

Super hit film Sundara Travels sequel announced

‘ரௌத்திரம்’ பழக ரித்விகாவை அன்புக்கரசியாக மாற்றிய டைரக்டர் அரவிந்த்சாமி

‘ரௌத்திரம்’ பழக ரித்விகாவை அன்புக்கரசியாக மாற்றிய டைரக்டர் அரவிந்த்சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய நடிகையும், பிக் பாஸ் வெற்றியாளருமான நடிகை ரித்விகா, Netflix நிறுவனத்தின் தமிழ் ஆந்தாலஜி படமான ‘நவராசா’ படத்தில், பிரபல நடிகரும், அறிமுக இயக்குநருமான அரவிந்த் சுவாமியுடன் பணியாற்றியது, மிகச்சிறந்த அற்புதமான அனுபவம் என்று கூறியுள்ளார்.

“நவரசா” ஆந்தாலஜி திரைப்படம், இந்திய தொன்மை விதிகளாக கூறப்படும், மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறுகிறது.

இதன் ஒரு பகுதியாக, நடிகர் அரவிந்த் சுவாமி இயக்கத்தில் உருவாகியுள்ள “ரௌத்திரம்” கதையில் ‘அன்புக்கரசி’ வேடத்தில் நடிகை ரித்விகா நடித்துள்ளார்.

நவரசங்களுல் கோபத்தின் உணர்ச்சியை இக்கதை சித்தரிக்கிறது. “நவராசா” 2021 ஆகஸ்ட் 6 ஆம் தேதி Netflix இல் உலகளவில் திரையிடப்படவுள்ளது.

அரவிந்த் சுவாமியுடன் இணைந்து பணிபுரிந்த, தனது அனுபவத்தைப் பற்றி ரித்விகா கூறியதாவது..

அரவிந்த் சுவாமி போன்ற புகழ்பெற்ற நடிகருடன் பணிபுரிவது, என் வாழ்வில் மிகபெருமையயான தருணம்.

ஒரு நடிகராக இல்லாமல் இயக்குநராக அவரை அருகில் இருந்து பார்த்தது, மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு காட்சியை உருவாக்குவதில் அனைத்து தொழில் நுட்ப சாத்தியங்களையும் பயன் படுத்துவதில், தேர்ந்தவராக இருந்தார்.

சினிமா குறித்த அவரது நுணுக்கமான அறிவும் அதை உருவாக்கத்தில் அவர் பயன்படுத்திய முறையும் அபாரமானது. இப்படத்திற்காக காட்சிகள் மற்றும் வசனங்களை ஒத்திகை செய்யும் ஆன்லைன் கூட்டங்களில் கலந்துகொண்டது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது என்றார்.

மணி ரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சபாகேசன் இணைந்து நிறுவிய Justickets நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, “நவராசா” ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று 190 நாடுகளில் வெளியாகிறது.

RIYTHVIKA REMINISCES WORKING WITH ARVIND SWAMI ON NETFLIX’S UPCOMING TAMIL ANTHOLOGY ‘NAVARASA’

Riythvika recollects fond memories of working with debutant director Arvind Swami for Netflix’s Tamil anthology film ‘Navarasa’.

Attachments area

ஆந்தாலஜி நவரசா-வில் ‘இன்மை’ உங்களை ஆச்சர்யப்படுத்தும் – சித்தார்த்

ஆந்தாலஜி நவரசா-வில் ‘இன்மை’ உங்களை ஆச்சர்யப்படுத்தும் – சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்மை என்ற சொல்லின் பொருள் பற்றாக்குறை அல்லது ஏதும் இல்லாதது என்பதை குறிக்கும்.

நவரசா திரைப்படத்தில் பயத்தின் உணர்வை மையமாக கொண்டு உருவாகியுள்ள “இன்மை” படத்தை, இயக்குநர் ரதீந்திரன் பிரசாத் உருவாக்கியுள்ளார்.

Netflix ல் வரவிருக்கும் ஒன்பது பகுதி ஆந்தாலஜி திரைப்படமான, நவரசாவின் ஒரு பகுதியாக உருவாகியுள்ள “இன்மை” படத்தில், தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்கள் மூலம் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் சித்தார்த், தனது நடிப்பால், பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்துள்ளார்.

தமிழின் மிக முக்கிய ஆளுமைகள் ஒன்றிணைந்து ‘நவரசா’ திரைபடத்தினை உருவாக்கியுள்ளனர்.

“நவரசா” ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது.

இன்மை பகுதி குறித்து நடிகர் சித்தார்த் கூறியதாவது…

மணி ரத்னம் மற்றும் ஜெயேந்திரா அவர்கள் எனக்கு ‘இன்மை ’ வாய்ப்பை வழங்கியபோது நான் மிக மிக மகிழ்ச்சியடைந்தேன். நவரசங்களில் ஒரு உணர்வை குறிக்கும் இன்மை என்பதின் அர்த்தம், பற்றாக்குறை அல்லது ஏதும் இல்லாதது என்பதாகும்.

இன்மை என்ற வார்த்தையைக் கேட்கும்போதே மக்களின் ஆர்வம் அதிகரிக்கும். COVID ஆல் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள, திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும் ஒரு முன்னெடுப்பாக, இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இயக்குநர் ரதீந்திரன் பிரசாத் மற்றும் நடிகை பார்வதி திருவோத்து ஆகிய திறமையாளர்களுடன் இணைந்து பணியாற்றியது, ஒரு அற்புதமான அனுபவம் என்றார்.

மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறும் “நவரசா” ஆந்தாலஜி படத்தினை Madras Talkies மற்றும் Qube Cinema Technologies இணைந்து தயாரித்துள்ளனர்.

“நவரசா” Netflix தளத்தில் பிரத்தியேகமாக வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று 190 நாடுகளில் வெளியாகிறது.

SIDDHARTH TALKS ABOUT THE MEANING OF INMAI

The word Inmai means – deprivation or lack of something.

Attachments

More Articles
Follows