‘புஷ்பா 2’ பூஜையில் அல்லு அர்ஜூன் மிஸ்ஸிங்.; அட நம்ம ஹீரோஸ் போல ரீசன் சொல்லலப்பா

‘புஷ்பா 2’ பூஜையில் அல்லு அர்ஜூன் மிஸ்ஸிங்.; அட நம்ம ஹீரோஸ் போல ரீசன் சொல்லலப்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்த ‘புஷ்பா’ படம் கடந்த ஆண்டு டிசம்பரில் ரிலீசானது.

இதில் ராஷ்மிகா மந்தனா, பஹத் ஃபாசில், தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ், மைம் கோபி நடிக்க இந்தப் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற “ஓ சொல்றியா மாமா…. மற்றும் ஏ சாமி ஏ சாமி…” ஆகிய இரண்டு பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது

இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளி்லும் வெளியாகி வரவேற்பை பெற்றதால் 2ஆம் பாகத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த நிலையில் ‘புஷ்பா2’ படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது.

ஆனால் இதில் நடிகர் அல்லு அர்ஜுன் கலந்துக் கொள்ளவில்லை.

நியூயார்க்கில் அமெரிக்கா – இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் அல்லு அர்ஜுன் பங்கேற்றுள்ளார்.

76-வது சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் கிராண்ட் மார்ஷல் விருந்தினராக இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துபவராக அல்லு அர்ஜூன் அழைக்கப்பட்டு இருக்கிறாராம்.

இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அல்லு அர்ஜுன் விழாவில் கலந்து கொண்டிருப்பதால் இதுபோன்ற காரணத்தை நாம் ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் உள்ளூரிலேயே இருந்தும் சில நடிகர்கள் தங்கள் படத்தின் பூஜைக்கு கூட வராமல் இருப்பது இங்கே கண்டிக்த்தக்கது.

Allu Arjun not participated in Pushpa 2 pooja

‘சினம்’ கொண்டாலும் சிம்புக்கு பின்னால் வரும் அருண்விஜய்

‘சினம்’ கொண்டாலும் சிம்புக்கு பின்னால் வரும் அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான ‘தமிழ் ராக்கர்ஸ்’ படம் கடந்த வாரம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இதனையடுத்து அறிவழகன் – அருண் விஜய் கூட்டணியில் உருவான மற்றொரு படமான ‘பார்டர்’ படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்தனர் ரசிகர்கள்.

இந்த நிலையில் அருண் விஜயின் மற்றொரு படமான ‘சினம்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர்.

இந்த படத்தை ஜி என் ஆர் குமரவேலன் இயக்கியுள்ளார். சபீர் இசையமைத்துள்ளார்.

அருண் விஜய்யின் தந்தையும் நடிகருமான விஜயகுமாரின் மூவி சிலைட்ஸ் பிரைவேட் லிமிடெட் புரோடக்சன் ஹவுஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

இது கிரைம் திரில்லர் படமாக தயாராகியுள்ளது. பாரி வெங்கட் என்ற சப்-இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார் அருண்விஜய்.

இந்த படம் செப்டம்பர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக புதிய போஸ்டரை வெளியிட்டு பட குழு அறிவித்துள்ளது.

இதற்கு முந்தைய நாளில் செப்டம்பர் 15ஆம் தேதி சிலம்பரசன் நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

சிம்பு நடித்துள்ள இந்த படத்தை கௌதம் மேனன் இயக்க ஐசரி கணேஷ் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 2ல் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

Simbu and Arun Vijay movies release updates

Movie Wood OTT-யில் வருடத்திற்கு ரூ 99.; இந்தியாவின் முதல் சிங்கிள் ஷாட் படம் ‘யுத்த காண்டம்’

Movie Wood OTT-யில் வருடத்திற்கு ரூ 99.; இந்தியாவின் முதல் சிங்கிள் ஷாட் படம் ‘யுத்த காண்டம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் முதல் பிராப்பர் சிங்கிள் ஷாட் ஆக்‌ஷன் மூவி என்ற அறிவிப்போடு உருவாகியுள்ள ‘யுத்த காண்டம்’ என்கிற திரைப்படம் பல சர்வதேச விருதுகளையும் வென்றிருக்கிறது.

இந்தப்படம் கடந்த ஆகஸ்ட்—15ஆம் தேதி மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுள்ளது.

‘கன்னிமாடம்’ புகழ் ஸ்ரீராம் கார்த்திக் இதில் நாயகனாக நடித்துள்ளார்.

கிரிஷா குரூப், சுரேஷ் மேனன், போஸ் வெங்கட், யோக் ஜேபி என சிறந்த நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். குமரன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை, பாரடைஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளம் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியாகும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தங்களது தளத்தில் கொண்டுள்ளது.

அந்த வகையில் மலையாளத்தில் உருவாகி, கேரளாவில் கம்யூனிஸ்ட்களின் எதிர்ப்பை சம்பாதித்த ‘பிப்ரவரி-29’ என்கிற படமும் ஆக-18ல் இதே மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது.

மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளத்தில் வருடத்திற்கு வெறும் 99 ரூபாய் மட்டுமே கட்டணமாக செலுத்தி இந்த தளத்தில் வெளியாகும் அனைத்து படங்களையும் பார்த்துக்கொள்ள முடியும்.

இல்லாவிட்டாலும் விரும்பும் படங்களை 5 ரூ முதல் 50 ரூ வரை கட்டணம் செலுத்தி பார்க்கின்ற வசதியும் இந்த தளத்தில் (மட்டுமே) உண்டு.

தெளிவு பாதையில் நீச தூரம், விண்வெளி பயணக்குறிப்புகள், உலக திரைப்பட விழாவில் விருது பெற்ற இன்ஷா அல்லா என சிறிய பட்ஜெட்டில் உருவான மிகச்சிறந்த படங்களையும் இதில் பார்த்து ரசிக்கலாம்.

அதுமட்டுமல்ல ரசிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என தங்களது அபிமான நடிகர்களின் சிறந்த படங்களையும் இதில் பார்க்க முடியும்.

தியேட்டர்களில் ரிலீஸாகும் வாய்ப்பு கிடைக்காத சிறிய படங்களை வசூல் பங்கீடு என்கிற முறையில் இந்த மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளத்தில் வெளியிடும் வசதியும் உண்டு. சிறிய பட்ஜெட் படங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடைய முடியும்.

First Single Shot Yuddha Kaandam; Movie Wood OTT Rs 99 per year

பான் இந்தியா தொடரில் ‘வாரிசு’ பட நடிகர் கணேஷ் வெங்கட்ராம்.; பிரதமர் மோடி பார்வையிட்டார்.

பான் இந்தியா தொடரில் ‘வாரிசு’ பட நடிகர் கணேஷ் வெங்கட்ராம்.; பிரதமர் மோடி பார்வையிட்டார்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில், கான்டிலோ பிக்சர்ஸ் மற்றும் டிடி நேஷனல் ஆகியவை இந்தியாவின் புகழப்படாத
நாயகர்களின் எழுச்சியூட்டும் கதைகளைக் காண்பிக்கும் ‘ஸ்வராஜ்’ என்ற மாபெரும் படைப்பை அறிமுகப்படுத்தியுள்ளன.

இந்த தொடர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. விரைவில் ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம் போன்ற அனைத்து மொழிகளிலும் விரைவில் பிரபலமான ஓடிடி தளத்திலும் பார்க்கலாம்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்புக் காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சர்களுடன் அண்மையில் பார்வையிட்டார்.

இந்த தொடரில் நடிப்பது பற்றி கணேஷ் கூறுகையில்…

“ஒரு நடிகராக, இந்திய வரலாற்றில் இருந்து ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் இருந்துகொண்டே இருந்தது.

ஒரு துணிச்சலான இதயம், ஒரு போர்வீரன் என்று நடித்த அனுபவம் உண்மையிலேயே நிறைவாக இருந்தது. “இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு பான் இந்தியா படமும் உருவாக்குவாதற்கான சாத்திய கூறுகள் இந்தியாவிலேயே உள்ளது.

மொழி மற்றும் கலாச்சார தடைகளை மெதுவாக உடைத்து வரும் ஓடிடி-க்கு நன்றி. வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்கவும், தங்களைப் பரிசோதித்து கொள்ளவும், வெவ்வேறு மொழிகளில் பணியாற்றவும் விரும்பும் என்னைப் போன்ற நடிகர்களுக்கு இது ஒரு சிறந்த நேரம்.

நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் சொல்லப்படாத வீரம் பற்றிய பல கதைகள் உள்ளன. அதை இளம் தலைமுறையினர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, ‘பொன்னியின் செல்வன்’ நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றை சித்தரிக்கும் முக்கியமான படைப்பாக இருப்பதால், அதைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன்.

அதேபோல் வேலு தம்பி நான் மட்டுமே படித்த ஒரு கதாபாத்திரம் & இந்த கதைகளைத் திரையில் பார்ப்பது பார்வையாளர்களுக்கும் ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்” என்றார்.

மேலும் ‘சபரி’ என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பன்மொழி படமாக ‘சபரி’ வெளிவருகிறது.

இதை தொடர்ந்து தற்போது விஜய் நடிக்கும் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

Ganesh Venkatram plays Velu Thambi historical hero in PAN INDIA Series

BREAKING இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறைத் தண்டனை.; தீர்ப்பு விவரம் இதோ..

BREAKING இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறைத் தண்டனை.; தீர்ப்பு விவரம் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஆனந்தம்’ என்ற அருமையான குடும்ப படத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி.

இதனையடுத்து ‘ரன், சண்டக்கோழி, பையா, ஜீ, அஞ்சான்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

கமல்ஹாசன் நடித்த ‘உத்தம வில்லன்’ படத்தையும் தயாரித்துள்ளார்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு லிங்குசாமி இயக்கிய ‘தி வாரியர்’ என்ற திரைப்படம் அண்மையில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.

இந்த நிலையில் இவர் மீது பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கு இன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளது

‘எண்ணி ஏழு நாள்” என்ற படத்திற்காக பெற்ற கடனை திரும்ப செலுத்தவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது

இந்த தீர்ப்பில் இயக்குனர் லிங்குசாமி & அவரது சகோதரர் சுபாஷ் ஆகியோருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம்.

லிங்குசாமி தரப்பில் மேல் முறையீடு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Lingusamy gets jail for six months

மகனுக்காக ஒன்றிணைந்த தனுஷ் & ஐஸ்வர்யா ரஜினி.; இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

மகனுக்காக ஒன்றிணைந்த தனுஷ் & ஐஸ்வர்யா ரஜினி.; இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் தனுஷ்.

இவர் 18 வருடங்களுக்கு முன்பே நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு யாத்ரா & லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன் தன் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார் தனுஷ். இது இந்திய திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் இருவரும் தங்கள் குழந்தைகளை அவ்வப்போது பார்த்து வந்தனர். தனித்தனியாக புகைப்படங்களை இணையங்களில் பதிவிட்டும் வந்தனர்.

இந்த நிலையில் இவர்களின் மூத்த மகன் யாத்ராவின் பள்ளியில் விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

விளையாட்டு குழு கேப்டனாக SPORTS CAPTAIN பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் கலந்து கொண்டு மகனை வாழ்த்தினர்.

இவர்களுடன் இளைய மகன் லிங்கா மற்றும் பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ் குடும்பத்தினரும் கலந்துக் கொண்டுள்ளனர்.

தனுஷ் – ஐஸ்வர்யா இணைந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதனைப் பார்த்து ரஜினி – தனுஷ் ரசிகர்களும் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.

Dhanush and Aishwarya Rajini attend school event of their son Yathra

More Articles
Follows