அல்லு அர்ஜூனுக்கு வில்லனாகிய சமுத்திரக்கனி

அல்லு அர்ஜூனுக்கு வில்லனாகிய சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samuthirakani to play a villain in Allu Arjuns Telugu movieபல படங்களில் நாயகனாக நடித்தாலும் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் சமுத்திரகனி.

தற்போது தெலுங்கு சினிமாவிலும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளாராம்.

திரி விக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் ஆமு வைகுந்தபுரமுலோவி என்ற படத்தில் தான் இந்த வில்லன் வேடத்தை ஏற்றுள்ளார்.

தமன் இசையமைத்து வரும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் நாயகிகளாக நடிக்கின்றனர்.

அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு (பொங்கல்) இப்படம் திரைக்கு வருகிறது.

Samuthirakani to play a villain in Allu Arjuns Telugu movie

பிகில் டைரக்டர் அட்லிக்கு பிடித்த அஜித் படங்கள் இதோ…

பிகில் டைரக்டர் அட்லிக்கு பிடித்த அஜித் படங்கள் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Atlee talks about Ajith and his favorite moviesபிகில் பட டைரக்டர் அட்லி சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுட்ன் கலந்துரையாடினர்.

அப்போது பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் கேட்டனர்.

அப்போது அட்லியின் மனைவி பிரியாவும் ஒரு கேள்வி கேட்டார்.

ஏய் பாப்பா… நீ படம் முடிச்சிட்டு என்கூட நேரம் செலவழிக்காம இன்டர்வியூ கொடுத்துக்கிட்டு இருக்க?

அட்லீ: இதோ வந்துட்டேன் பாப்பா… 5 நிமிடங்கள். இதோ… இதோ… என பதிலளித்துள்ளார்.

ஒரு ரசிகர் அஜித்தைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்க என கேட்டுள்ளார்.

அஜித் சார் மீது பெரிய மரியாதை உள்ளது. அவர் நடித்த படத்தில் என்னுடைய சமீபத்திய விருப்பங்கள் ‘விஸ்வாசம்’ மற்றும் ‘நேர்கொண்ட பார்வை’ படங்கள் என தெரிவித்துள்ளார்.

Director Atlee talks about Ajith and his favorite movies

கனவுப் படத்தை கைவிடும் கமல்; மருதநாயகமாக மாறும் விக்ரம்.?

கனவுப் படத்தை கைவிடும் கமல்; மருதநாயகமாக மாறும் விக்ரம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram replaces Kamal in mega dream project Marudhanayagamஉலகநாயகன் கமல்ஹாசன் தன் கனவு படமான மருதநாயகம் படவேலைகளை 1997-ல் தொடங்கினார்.

இந்த படத்தை இங்கிலாந்து ராணி தொடங்கி வைக்க, கலைஞர் கருணாநிதி, ரஜினிகாந்த உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அப்போதே படத்தின் 30 நிமிட காட்சிகளை பிரம்மாண்டமாக படமாக்கியிருந்தார்.

ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகரிக்கவே படத்தை கைவிட்டனர்.

வருடங்கள் செல்ல செல்ல இந்த படம் குறித்து கமலிடம் கேட்கப்பட்டது. அவரும் நிச்சயம் படத்தை முடிப்பேன் என தெரிவித்தார்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல் பணிகள் இருப்பதால் மருதநாயகத்தை படத்திலிருந்து கமல் விலகுவதாக தகவல்கள் வருகின்றன.

கமலுக்கு பதில் விக்ரம் நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதில் எந்த தகவலும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

Vikram replaces Kamal in mega dream project Marudhanayagam

அசுரன் தெலுங்கு ரீமேக்; தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ்

அசுரன் தெலுங்கு ரீமேக்; தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Venkatesh roped in for Asuran Telugu remakeகலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ படம் கடந்த அக்டோபர் 4ந்தேதி வெளியானது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தைப் பார்த்த தமிழ், தெலுங்கு திரை பிரபலங்கள் பலரும் பாராட்டினர்.

இந்த நிலையில் ‘அசுரன்’ பட தெலுங்கு ரீமேக்கில் தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.

தாணு மற்றும் சுரேஷ் பாபு இணைந்து தயாரிக்கின்றனர்.

அசுரன் இயக்குநர் யார்? என்பது தான் இன்னும் தெரியவில்லை.

Actor Venkatesh roped in for Asuran Telugu remake

நவம்பரில் ஆக்சனை களமிறக்கும் சுந்தர் சி & விஷால் கூட்டணி

நவம்பரில் ஆக்சனை களமிறக்கும் சுந்தர் சி & விஷால் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishals Action movie release date updatesஆம்பள, மத கஜ ராஜா ஆகிய படங்களுக்குப் பிறகு விஷாலை வைத்து 3வது முறையாக சுந்தர்.சி இயக்கியுள்ள படம் ‘ஆக்‌ஷன்’.

இதில் விஷாலுடன் தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு போன்றோர் நடித்துள்ளனர்.

ஹிப்ஹாப் ஆதி இசையமைக்க டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்தரன் தயாரித்துள்ளார்.

துருக்கி நாட்டில் இதன் பெரும்பாலான காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

இப்பட டீசர் ஏற்கெனவே வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற நிலையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இப்பட டிரெய்லர் வெளியானது.

அத்துடன் இப்படத்தை நவம்பர் மாதம் வெளியிட உள்ளதாக டிரைலரில் தெரிவித்துள்ளனர்.

Vishals Action movie release date updates

நவம்பர் 10ல் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ பர்ஸ்ட் லுக்

நவம்பர் 10ல் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriyas Soorarai Pottru first look will be released on 10th Nov2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பாக சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இப்படத்தை சுதா கொங்கரா இயக்க ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

படத்தின் சூட்டிங் முடிவடைந்த நிலையில் தற்போது பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை நவம்பர் 10ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Suriyas Soorarai Pottru first look will be released on 10th Nov

More Articles
Follows