பொது நலன் கருதி விழாவில் புயலை கிளப்பிய தமிழ் ராக்கர்ஸ்

pothu nalan karuthiபொது நலன் கருதி பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் திருமுருகன் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

சீயோன் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இவருடன் சிறப்பு விருந்தினர்களாக பிடி. செல்வகுமார், மிஷ்கின், வசந்தபாலன், உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டார்.

அப்போது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் நடத்துபவர்களை கண்டுபிடிக்க முடியவில்லையா அல்லது கண்டுபிடித்து விட்டு அமைதியாக இருக்கிறீர்களா என தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு இயக்குனர் வசந்தபாலன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மலையாளம், தெலுங்கு உள்ளிட் மற்ற மொழி படங்கள் வெளியாகி 6 மாதம் ஆனால் கூட அந்த இணையத்தில் படங்கள் இல்லை. ஆனால் தமிழ் படம் மட்டும் உடனே வெளியாகிறது என ஆவேசத்துடன் பேசினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் மிஷ்கின், தமிழ் ராக்கர்ஸை பிடிப்பதற்காக இரவு பகலாக விஷால் உழைத்ததை தான் நேரில் பார்த்ததாக கூறினார்.

பின்னர் படக்குழுவினரை வாழ்த்தினார்.

Overall Rating : Not available

Latest Post