சூட்டிங்க்கு வரல.. பணத்தையும் திருப்பி தரல.; யோகிபாபு மீது புகாரளித்த தயாரிப்பாளர்

சூட்டிங்க்கு வரல.. பணத்தையும் திருப்பி தரல.; யோகிபாபு மீது புகாரளித்த தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகிபாபு.

யோகிபாபு மீது சினிமா தயாரிப்பாளர் ஒருவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கம் பகுதி பழனியப்பா நகரை சேர்ந்தவர் ஹாஷீர் (48). விருகம்பாக்கம் சின்மயா நகரில் திரைப்பட நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார்.

இவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: நான் தயாரிக்கும் ‘ஜாக் டேனியல்’ என்ற படத்தில் நடிப்பதற்காக நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிடம் பேசினேன்.

இப்படத்தில் நடிக்கசம்பளமாக ரூ.65 லட்சம் பேசி, முன் பணமாக ரூ.20 லட்சம் யோகிபாபு பெற்றுக்கொண்டார். பின்னர் படப்பிடிப்பு தொடங்கியதும் யோகிபாபுவை அழைத்தபோது, அவர் வரவில்லை.

படப்பிடிப்புக்கு வராமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் காலம் தாழ்த்தி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். புகாரின்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

producer files police complaint against actor yogi babu

நடிப்பு ராட்சசன் டி.எஸ்.பாலைய்யா 109வது ஆண்டு பிறந்தநாள் பதிவு

நடிப்பு ராட்சசன் டி.எஸ்.பாலைய்யா 109வது ஆண்டு பிறந்தநாள் பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“அசோகரு நம்ம மகருங்களா?”…என்று கேட்கும் காதலிக்க நேரமில்லை விஸ்வநாதன் ஆகட்டும்,

பிலிப்பைன்ஸ் போயிருக்கான் என்று சொன்னால், “என்னது புலிகிட்ட பேசிட்டு இருக்கானா”?ன்னு தனக்கு தோன்றியதை கேட்கிற ஊட்டிவரை உறவு, வேதாசலம் ஆகட்டும்..

ஒரு கட்டத்தில் சினிமாவில் வித்தியாச வித்தியாசமான தொழிலதிபர் வேடங்களில் பாலையா நடித்தார் என்பதைவிட, அந்த பாத்திரங்களாகவே வாழ்ந்தார்.

காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் கதை சொல்லும் சீன் எவ்வளவு பிரபலமோ, அதற்கு நிகரானது ஊட்டி வரை உறவு படத்தில் காதலியை பற்றி சொல்ல ஆரம்பித்த மகன் சிவாஜியை ஒட்டியபடியே பாலையா செய்யும் அட்டகாசம்.

அந்த காட்சியையெல்லாம் பார்க்கும்போது தமிழ் சினிமா உண்மையிலேயே பேரதிஷ்டம் செய்த ஒன்றுதான் என்று தோன்றும்.

பாலையாவின் நடிப்பை வில்லன், குணச்சித்திரம் என இருகூறுகளாக போட்டால் அதில் எது அட்டகாசம் என்பது கண்டுபிடிப்பது கஷ்டம்.

எம்கேடி பாகவதர்-பியு சின்னப்பா சகாப்தத்தில் துவம்சம் செய்த பாலையாவை பலருக்கும் தெரியாது.

1936 லிருந்து 1950 வரை, சதிலீலாவதி, அம்பிகாபதி, மீரா, மந்திரிகுமாரி என பல புகழ் பெற்ற படங்களை இயக்கியவர் அமெரிக்கரான எல்லீஸ் ஆர்.டங்கன்..

எம் கே ராதா எம்ஜிஆர் பாலையா என பெரிய பட்டாளத்தையே ‘சதிலீலாவதி’ படத்தில் அறிமுகப்படுத்தியவர். உலக சினிமாக்களை கரைத்து குடித்தவர்.

அவரிடம் ஒருமுறை, நீங்கள் பெரிய அளவில் பார்த்து வியக்கும் நடிகர் யார் என கேட்டபோது சொன்னார், அவர் வேறு யாருமல்ல, டிஎஸ் பாலையாவைத்தான்.

“மனுசனாய்யா அவன் என்ன ரோல் கொடுத்தாலும் அசத்துற அவ்ளோ டேலன்ட்டான ஆளு….” என்று விளக்கமும் கொடுத்தார் டங்கன். இந்த காலகட்டத்தில் சிவாஜி திரைப்பட உலகில் அறிமுகம் ஆகவில்லை.

ஸ்டண்ட்டை தொடாமல் வெறும் உடல் மொழியாலும் வசனத்தாலும் மட்டுமே படு பயங்கரமான வில்லத்தனத்தை அசால்ட்டாக செய்து காட்டியவர் ஜாம்பவான் பாலையா.

ஆர்பாட்டம் இல்லாமல் கழுத்தறுக்கும் கலையை படங்களில் அற்புதமாக நிலைநிறுத்துவதில் அவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது .

எம்ஜிஆரின் அந்தமான் கைதி (1952)படம்.. கதையில், சொந்த தங்கையின் மகளையே மணந்து பெண்டாள துடிப்பார் காமுகனான கே.சாரங்பாணி. தாய் மாமனின் முறையற்ற செயலை தட்டிக்கேட்டு போராடுவார், அண்ணனான எம்ஜிஆர்.

இத்தனைக்கும் நடுவில் நின்று வில்லனுக்கு தூபம் போட்டு மேலும் மேலும் ஏற்றிவிட்டு சகல சாசகங்களையும் செய்வார் பாலையா. சாராங்கபாணியே சோர்ந்துபோனாலும் பாலையா சோரவே மாட்டார்.

எதைப்பற்றியும் கவலைப்படாத பாத்திரம் அது.. காரணம் முதலாளி கே சாரங்கபாணியை சாக்கு வைத்து எம்ஜிஆரின் தங்கையை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று துடியாய்த் துடிப்பார்.

அறிஞர் கதை வசனம் எழுதிய வேலைக்காரி (1949) படத்திலும் இப்படித்தான்.

அடுத்து கெடுக்கும் படலம்..
பணம் பாழாக்கும் படலம்..
மானம் பறிக்கும் படலம்..
கண் குத்தும் படலம்..

இப்படி நான்கு வகை பழிவாங்கல் பற்றி நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமியிடம் பாலையா விவரிப்பதை கேட்கவே வேண்டுமே… படத்தை பார்த்தவர்களால் மட்டுமே உணரமுடியும்..

இன்று வரை எல்லோராலும் பேசப்படுகிற புகழ்பெற்ற வசனமான கத்தியை தீட்டாதே.. உன் புத்தியை தீட்டு என்பதை வேலைக்காரி படத்தில் பேசியவரும் பாலையாதான்..

கே.ஆர் ராமசாமி- பாலையா காம்பினேஷன் என்றதும் நினைவுக்கு வரும் செல்லப்பிள்ளை (1955). “மதனா எழில் ராஜா, நீ வாராய் என்று செமை ஹிட் பாடல்,

சாவித்திரி ஆடிய படியே பாட, அருகில் பாலையா கிடார் வகையறாவில் ஒரு இசைக்கருவியை கொண்டு அவ்வளவு ஸ்டைலாக வாசிப்பார்.

பாட்டுக்கு நடுவே திடிரென்று துப்பாக்கியுடன் புகுந்து இருவரையும் மிரட்டி கேஆர்.ராமசாமி பேசும் வசனங்கள் ரேடியோ விரும்பிகளுக்கு பாதாம் அல்வா மாதிரி என்பது தனிக்கதை.

ஆட்டம் போடும் பாலையாவை ரசிக்கவேண்டும் என்றால் கவிதா படத்தில் மணக்கும் மை லேடி பாடலை சொல்லியே ஆக வேண்டும்.

ஜெயலலிதாவின் சொந்த சித்தியான வித்யாவதியுடன் பாலையா ஆடும் காஷ்வலான டான்ஸ்.. கலக்கலான ரகம்.

இருந்த இடத்திலேயே ஆடுவதும் வில்லத்தனம் செய்வதும் என ஒரு தனி கலையை தனக்கென வைத்திருந்தார் பாலையா.

“எங்கு பார்த்தாலும் ஒரே தண்ணீர் தண்ணீர்..

இருபுறமும் கரைபுரண்டோடுகிறது காவிரி வெள்ளம்

ஆற்று வெள்ளத்திலே பொம்மி.. உயிரையும் பொருட்படுத்தாமல் படாரென்று குதித்தேன்.

படபடவென்று நீந்தினேன். ஒரு சுழல் என்னை அமுக்கியது. பூவென்று ஊதினேன்.. தூக்கினேன் பொம்மியை சேர்த்தேன் கரையில்..”.

– மதுரை வீரன் (1956) படத்தில் எம்ஜிஆர் காப்பாற்றிய பானுமதியை தான் காப்பாற்றியதாக உதார் விட்டு தளபதி பாத்திரத்தில் பாலையா பேசிய மேற்படி வசனம்.. அவரது சினிமா பக்க ஹைலைட்களில் டாப் ஃபைலில் ஒன்றே என்றே சொல்லவேண்டும்.

கலைஞர் வசனம் எழுதிய எம்ஜிஆர் நடித்த புதுமைப்பித்தன் (1957) படத்தை தனது வில்லத்தனத்தால் பாலையா புரட்டி போட்ட விதம், படத்தைப் பார்த்து பார்த்து வியந்துகொண்டே போகவேண்டியதுதான்.

பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பணம் படைத்தவன், பாமாவிஜயம் போன்ற படங்களில் பாலையாவின் நடிப்பாற்றலை சொல்ல தனி புத்தகம்தான் தேவை.

“என் பாட்டுக்கு இந்த பாண்டியநாடே அடிமை” என எகிறும் திருவிளையாடல் ஹேமநாத பாகவதர்,

வண்டில இன்னைக்கு ஆட்டம் ஜாஸ்தியா இருக்கே என கலாய்ததபடி ரயில் பயணத்தில் தெறிக்கவிடும் தில்லானா மோகனாம்பாள் தவில் வித்வான்..

யாரால் மறக்கமுடியும். இன்றைய தலைமுறைகூட அசந்துப் போகிறார்கள் இந்த பாத்திரங்களை பார்த்து

தில்லானாவில் நகுமோ கானலேனிக்கு சிவாஜி எப்படி நாதஸ்வரத்தை அப்படியொரு முகபாவனைகளோடு வாசித்தாரே அதற்கு குறைவில்லாமல் அட்சர சுத்தமாக இவரின் கைகள் தவுலில் கைகள் பேசிய விதத்தைத் கண்டு தவில் கலைஞர்களே வியந்து போனதெல்லாம் தனி வரலாறு

பாலையா எக்கச்செக்கமா தூள் கிளப்பிய இன்னாரு படம் சிவாஜியின் தூக்குதூக்கி.

கள்ளக் காதலனாய் வடநாட்டு சேட்டு பாத்திரத்தில் வந்து நம்பிள் நிம்பிள் என கலப்பு பாஷையில் பாலையா பிய்த்து உதறியவிதம், அதேபோல் பெற்றால்தான் பிள்ளையா படத்தில் மெட்ராஜ் பாஷையில் பாலையா கலக்கிய விதம்..

வந்தவாசி சீனிவாசா தியேட்டரில் முதல் முறையாக பார்த்த படம். லேசில் விவரிக்கமுடியாதவை…

பணம் படைத்தவனில் கலப்புமணம் செய்ததால் மகன் எம்ஜிஆரை வீட்டை விட்டு விரட்டிவிட்டு பேரன் பிறந்திருக்கிறான் என்று தெரிந்ததும், பிஞ்சுவை பார்க்கத்துடிக்கும் அந்த கட்டங்கள்..

நிஜவாழ்வில் அப்படி ஒரு கட்டத்தில் தள்ளப்பப்பட்ட அனைவரையும், கண் கலங்க வைத்த பாலையாவின் மாஸ்டர் பீஸ் காட்சிகளில் ஒன்று அது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த ஒரு இயக்குனர், காதலிக்க நேரமில்லை படத்தை மறுஆக்கம் செய்ய அனுமதி கேட்டு டைரக்டர் ஸ்ரீதரை நேரில் அணுகியிருக்கிறார்.

ஹீராவோ யாரைப் போடப் போகிறீர்கள் என்று ஸ்ரீதர் கேட்க, அதற்கு இயக்குநர் ரவிச்சந்திரன் முத்துராமன் ரோலுக்கு இன்னாரை போடப்போகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

கடுப்பான ஸ்ரீதர், காதலிக்க நேரமில்லை படத்தின் ஹீரோ யார் தெரியுமா? முதலில் போய் டைட்டில் கார்டை பார்த்துவிட்டு வாருங்கள் என்று அனுப்பியிருக்கிறார்.

நீங்களும் போய் டைட்டில் கார்டை பாருங்கள்.

திருநெல்வேலி மண்ணின் மைந்தனான டி.எஸ்.பாலையா அவர்களின் 109 ஆவது பிறந்தநாள் இன்று.

(நன்றி:-ஏழுமலை வெங்கடேசன் FB)

Actor TS Balaiyaa 109 Birth Anniversary flash back

ROBOT LOVE MY3.. மீண்டும் இணைந்தது ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ கூட்டணி

ROBOT LOVE MY3.. மீண்டும் இணைந்தது ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மை3” சீரிஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இந்த சீரிஸில் முன்னணி நட்சத்திரங்களான ஹன்ஷிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஜனனி ஐயர், அஷ்னா ஜவேரி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ மற்றும் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற காமெடி பிளாக்பஸ்டர் வழங்கிய, பிரபல இயக்குநர் ராஜேஷ் எம் இந்த “மை3” சிரீஸை இயக்கியுள்ளார்.

ரொமான்டிக் காமெடி ஜானரில், ரோபோவின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

இந்த சீரிஸுக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளர் கணேசன் இசையமைத்துள்ளார். அஷிஷ் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மை3” தயாரிப்பை Trendloud நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

“மை3” டைட்டில் அறிவிப்பை ஹன்ஷிகா மோத்வானி, முகேன் ராவ் இணைந்து பிக்பாஸ் ஹவுஸ் நிகழ்ச்சியில் அறிவித்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.

“ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு நடிகை ஹன்ஷிகா & இயக்குநர் ராஜேஷ் உடன் இணைந்து இந்த வெப் சீரிஸில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajesh and Hanshika teams up for MY3

சூர்யா கைவசம் 6 படங்கள்.. கங்குவா முதல் ரோலக்ஸ் வரை..; ஆறுமே அசத்தல்

சூர்யா கைவசம் 6 படங்கள்.. கங்குவா முதல் ரோலக்ஸ் வரை..; ஆறுமே அசத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் தற்போது ‘கங்குவா’ என்ற படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.

கிட்டத்தட்ட 10 விதமான கெட்டப்புகளில் சூர்யா தோன்றுவார் எனக் கூறப்படுகிறது. சூர்யா பிறந்த நாளில் இந்தப் படத்தின் வீடியோ கிளிப்ஸ் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

‘கங்குவா’ படத்தை முடித்த பின்னர் சூர்யா கைவசம் கிட்டத்தட்ட ஐந்து படங்கள் உருவாக ரெடி ஆகி வருகிறது.

இதை முடித்துவிட்டு சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம்.. வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படம்.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் கேரக்டர் மட்டும் ஒரு படம்..

இவை இல்லாமல் ‘இரும்பு கை மாயாவி’ என்றொரு படம்.. மேலும் சந்துமாடேடி ஒரு படம் என 5 படங்களை சூர்யா கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Suriya lineup projects updates

65 ஆண்டுகள் ப்ளாஷ்பேக்..: சினிமாவில் PRO பணியை தொடங்கி வைத்த MGR – RMV

65 ஆண்டுகள் ப்ளாஷ்பேக்..: சினிமாவில் PRO பணியை தொடங்கி வைத்த MGR – RMV

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சினிமாவை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க இன்று பல மீடியாக்கள் இருந்தாலும் 65 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் தொடர்பாளர்களை இந்தப் பணியை செய்து வந்தனர்.

ஒரு படம் பற்றிய தகவல்களை மீடியாக்களிடம் கொண்டு சேர்க்க திரைத்துரைக்கும் மீடியாக்களுக்கும் பாலமாக இருப்பவர்தான் இந்த பி ஆர் ஓ (எ) மக்கள் தொடர்பாளர்கள்.

இவர்கள் கொடுக்கும் செய்திகளையே மீடியாக்கள் தங்களது நாளிதழ்கள் இணையதளங்கள் யூடியுப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர்.

முதல் முதலாக தமிழ் திரைப்படம் துறையில் ‘பொதுஜனத் தொடர்பாளர் (பி.ஆர்.ஓ) என்ற பணி புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் ‘நாடோடி மன்னன்’ படத்தில் மூலம் 22/ஆகஸ்ட் 1958 இன்றுதான் உதயமானது.

தமிழ் திரைப்பட துறையில் ‘நாடோடி மன்னன்’ படத்தின் மூலம் முதல் பொதுஜனத் தொடர்பாளர் (பி.ஆர்.ஒ) பிலிம் நியூஸ் ஆனந்தன் உதயமானதற்கு காரணமாக இருந்தவர்கள். இவர்களே…

*புரட்சித்தலைவர் எம்ஜிஆர்*.

*இசையமைப்பாளர் எஸ் எம் சுப்பையா நாயுடு*.

*ஆர்.எம் வீரப்பன்*.

*வித்வான் வே.லட்சுமணன்*.

*திரைப்பட துறையில் பி.ஆர்.ஓ என்ற பணிக்கு ஆணிவேராக இருப்பதற்கு இந்த நான்கு பேர் தான் காரணம்*.

ஆனந்தன்

Cinema PRO profession started in 1958

‘ஜாலிவுட்’டில் பங்கேற்ற ‘ஜெயிலர்’ நடிகர்.; ஐசரி கணேஷ் உருவாக்கிய தீம் பார்க்.!

‘ஜாலிவுட்’டில் பங்கேற்ற ‘ஜெயிலர்’ நடிகர்.; ஐசரி கணேஷ் உருவாக்கிய தீம் பார்க்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சினிமா குடும்ப பொழுதுபோக்கு இடமான ’ஜாலிவுட்’ பிரம்மாண்டமாக பெங்களூரு நகரில் தொடங்கியுள்ளது.

விருந்தினர்களை மகிழ்விக்கும் வகையில் ‘ஜாலிவுட்’ குழுவின் நடனத்துடன் இந்த நிகழ்வு தொடங்கியது.

இந்நிகழ்வில் கர்நாடக துணை முதல்வர் ஸ்ரீ டி.கே. சிவக்குமார், புகழ்பெற்ற நடிக டாக்டர். சிவராஜ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ டி.கே.சுரேஷ், ஸ்ரீபாலகிருஷ்ணா எம்.எல்.ஏ., திரு.எச்.ஏ.இக்பால் ஹுசைன் எம்.எல்.ஏ., மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தனர்.

ஜாலிவுட்டின் சேர்மனான டாக்டர். ஐசரி கே கணேஷ், விழாவை சிறப்பித்த அனைத்து பிரமுகர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

ஐசரி கே கணேஷ்

தனது பயணத்தைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக தனது கனவுகள் மீதான நம்பிக்கை, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் இடைவிடாத கடின உழைப்பு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டார்.

விருந்தினர்கள் அனைவரும் ஜாலிவுட்டின் வெற்றிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பெயர் போன பெங்களூரு நகரத்தில் நிச்சயம் இந்த ஜாலிவுட் அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும், டைட்டானிக், தி லாஸ்ட் வேர்ல்ட் மற்றும் ஐரோப்பிய பின்னணியிலான தெரு, ரோமன்சியா, பல்வேறு நீர் பூங்காக்கள் மற்றும் கடல் அலைகளைக் கொண்ட குளம் போன்ற ஜாலிவுட்டின் சிறப்பம்சங்கள் பார்வையாளர்களை கவர்ந்து இழுத்தது. இதுமட்டுமல்லாது, இங்கிருக்கும் பலதரப்பட்ட உணவு வகைகளும் மக்களை சுவை தரத்தை கூட்டும் விதமாக அமைந்துள்ளது. ஆகமொத்தத்தில், புதுமையான சினிமா அனுபவத்தை தேடுபவர்களுக்கான பொழுதுபோக்கு களமாக ‘ஜாலிவுட்’ அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஐசரி கே கணேஷ்

Isari Ganesh launches Jollywood at Bangaluru

More Articles
Follows