விஜயகாந்த்-சீமான்-கமலை தொடர்ந்து கட்சி தொடங்கும் பிரகாஷ்ராஜ்

New Project (4)தென்னிந்தியளவில் பிரபலமான நடிகர் பிரகாஷ்ராஜ். பல மொழி படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவரது தோழியும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் கொலைக்கு பிறகு தீவிரமான அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

நடைபெற்ற மக்களவை தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். இதில் அவர் 3வது இடம் பெற்று தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

“பெங்களூரு முழுவதும் கடந்த 6 மாதங்களாக பயணம் செய்து மக்களை சந்தித்தேன். அவர்கள் பிரச்சினைகளை கேட்டு அறிந்தேன். அதற்கு தீர்வு காண குரல் கொடுத்தேன். ஆனாலும் மக்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்து வெற்றி பெறச் செய்து விட்டனர். மக்கள் முடிவை ஏற்கிறேன்.

விரைவில் பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். அரசியல் கட்சியை நடத்த பணம் தேவை என்பதால் தொடர்ந்து படங்களில் நடிக்கவும் செய்வேன்” என்றார்.

நடிகர்கள் விஜயகாந்த், சீமான், கமல் ஆகியோர் தனிக்கட்சி தொடங்கி நிர்வகித்து வருகின்றனர். தற்போது பிரகாஷ் ராஜீம் அவர்களது பாணியில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post