தனுஷின் ‘கொடி’யை உயர பறக்க வைக்கும் பிரபலம்

dhanush kodiதிரைத்துறைகளில் பன்முகம் காட்டி வரும் தனுஷ், இதுவரை 30 படங்களில் வரை நடித்துவிட்டாலும், முதன்முறையாக கொடி படத்தில்தான் இருவேடங்களில் நடித்துள்ளார்.

துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் த்ரிஷா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இதில் தனுஷுடன் முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல பின்னணி பாடகியான சித்ராவும் இணைந்துள்ளார்.

இவர் பாடியுள்ள பாடலை கவிஞர் விவேக் எழுதியுள்ளார். இது தன் வாழ்வில் பெருமையான விஷயம் என பதிவிட்டுள்ளார் விவேக்.

தீபாவளி ரிலீஸை குறிவைத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

Overall Rating : Not available

Related News

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வடசென்னை'…
...Read More
தமிழ் சினிமாவில் கோலோச்சும் தனுஷ் முதன்முறையாக…
...Read More
மலையாளம் மற்றும் தமிழில் சூப்பர் ஹிட்…
...Read More

Latest Post