தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை திருவல்லிக்கேணியில் லைக்கா தயாரித்து, ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் எந்திரன் 2 (2.0) சூட்டிங் நடந்தது.
படப்பிடிப்பு பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததால் அங்கிருந்த இந்து புகைப்பட கலைஞர்கள் செய்தி சேகரித்தனர்.
அப்போது புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர்கள் எஸ்ஆர்.ரகுநாதன் மற்றும் பரத் ஆகியோர் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.
இவர் ஷங்கரின் உதவியாளர் என்றும் உறவினர் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பாக பத்திரிக்கையாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி
ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் பத்திரிகையாளர்கள் புகார் அளித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





