சிம்புவின் MAHAA வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ONSKY நிறுவனம்

சிம்புவின் MAHAA வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ONSKY நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும், அவரது 50 வது திரைப்படமான “மகா” படம் ஏற்கனவே ரசிகர்களிடம் விஷுவல் புரமோக்களின் மூலம், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

படத்திற்கான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் உள்ள நிலையில், இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சிலம்பரசன் TR கௌரவ பாத்திரமொன்றில் தோன்றுகிறார்.

ஶ்ரீகாந்த், கருணாகரன், முக்கியமான பாத்திரங்களில் நடிக்கின்றனர். தம்பி ராமையா, பேபி மானஸ்வி, மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

U.R. ஜமீல் இயக்கும் இப்படத்தை, Etcetera Entertainment நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் V. மதியழகன், Malik Streams Corporations (Production & Distribution) நிறுவனத்தின் தத்தோ அப்துல் மாலிக் உடன் இணைந்து தயாரித்துள்ளார்.

தொழில்நுட்ப குழுவில்… ஜிப்ரான் (இசை), J. லக்‌ஷ்மன் (ஒளிப்பதிவு), J.R. ஜான் ஆப்ரஹாம் (படத்தொகுப்பு), மனிமொழியன் ராமதுரை (கலை), கார்கி, விவேகா (பாடல்கள்), ஷெரீஃப்-காயத்திரி ரகுராம் (நடனம்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

இந்த நிலையில் மகா படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை, ONSKY நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ONSKY bagged STR – Hansika’s Mahaa theatrical rights

ஓடிடி Top 10 : அஜித் பட இயக்குநர் பர்ஸ்ட்.. 2வது இடத்தில் சூர்யா..6வது இடத்தில் டோவினோ.. 10வது இடத்தில் தனுஷ்

ஓடிடி Top 10 : அஜித் பட இயக்குநர் பர்ஸ்ட்.. 2வது இடத்தில் சூர்யா..6வது இடத்தில் டோவினோ.. 10வது இடத்தில் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா லாக்டவுன் காலத்தில் மக்களை வீட்டில் கட்டிப் போட உதவிய சாதனங்களில் முக்கியமானவைகளில் ஓடிடி தளமும் ஒன்று.

பல்வேறு மொழிகளில் பல்வேறு புதிய படங்கள் பல்வேறு தளங்களில் வெளியானது.

தமிழ் சினிமாவில் 2020 ஆண்டில் 24 படங்கள் ரிலீசானது. கடந்த 2021 ஆண்டில் 40க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசானது.

இந்த நிலையில் ஆர்மேக்ஸ் மீடியா என்ற நிறுவனம் கடந்த 2021ல் ஓடிடியில் வெளியான இந்திய படங்களின் டாப் 10 லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது.

அதில் விஷ்ணுவர்தன் இயக்கிய ஹிந்திப் படமான ‘ஷெர்ஷா’ முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அஜித் நடித்த ‘பில்லா, ஆரம்பம்,’ படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன்.

2வது இடத்தில் சூர்யா, லிஜோமோள் ஜோஸ், மணிகண்டன் நடித்த ‘ஜெய் பீம்’ படம் பிடித்துள்ளது.

டொவினோ தாமஸ் நடித்த மலையாளப் படமான ‘மின்னல் முரளி’ 6ம் இடத்தையும் அக்ஷய்குமார், தனுஷ் நடித்த ஹிந்திப் படமான ‘அத்ராங்கி ரே’ 10வது இடத்தையும் பிடித்துள்ளது.

OTT TOP 10 list of year 2021

1. Shershaah
2. Jaibhim
3. Sardar Uddham
4. Mimi ,
5. Kaagaz,
6. Minnal Murali,
7. State of Siege,
8. Sherini,
9. Silence,
10. Atnrani Re

7வது முறையாக இணையும் சுசீந்திரன் – இமான் கூட்டணி..; நாயகன் யார்.?

7வது முறையாக இணையும் சுசீந்திரன் – இமான் கூட்டணி..; நாயகன் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சுசீந்திரன் இசையமைப்பாளர் D.இமான் கூட்டணி 7 வது முறையாக புதிய படமொன்றில் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் சுசீந்திரன், பிரபல இசையமைப்பாளர் D.இமான் உடன் இணைந்து பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், கென்னடி கிளப் என ஆறு படங்களில் பணிபுரிந்துள்ளனர்.

நேற்று, இசையமைப்பாளர் D.இமான் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து கூறியுள்ள இயக்குநர் சுசீந்திரன், தான் 7 வது முறையாக டி.இமானுடன் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும், பாடல் கம்போசிங் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மிகப் பெரிய பட்ஜட்டில், நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு, மே 1 ஆம் தேதி துவக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

படத்தின் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகவுள்ளது.

Director Suseenthiran and Music Director Imman joins for 7th time

மோகன்லால் படத்திற்கு இசையமைக்கும் லிடியன் இளையராஜாவின் மாணவரானார்

மோகன்லால் படத்திற்கு இசையமைக்கும் லிடியன் இளையராஜாவின் மாணவரானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமெரிக்காவில் நடந்த தி வேல்ட்ஸ் பெஸ்ட் ( The World’s Best) என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார் சிறுவன் லிடியன்.

இவர் தன்னுடைய மிகச்சிறந்த திறமையால் பியானோவை வாசித்து உலக இசை அரங்கையே அதிர வைத்தார்.

சிறுவயதிலேயே உலகளவில் இசை போட்டியில் பல சாதனைகளை செய்தார் லிடியன்.

மிக வேகமாக இசையமைத்து சாதனை படைத்து இருக்கிறார் லிடியன் நாதஸ்வரம்.

ஒரு கையால் மிஷன் இம்பாசிபில் தீம் மியூசிக் வாசித்துக்கொண்டே மறு கையால் ஹாரிபாட்டர் தீம் மியூசிக்கை வாசித்தார்.

மேலும், கண்களை கட்டிக்கொண்டு பியோனா இசை, கைகளை பின்பக்கமாக திருப்பியே பியோனா வாசித்தார்.

ரஷ்யன் இசைக்கலைஞரால் உருவாக்கப்பட்ட பிளைட் ஆப் பம்பிள்பி (Flight of the Bumblebee) என்ற இசையை சராசரியாக வாசிக்கும் நேரத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் வாசித்து அனைவரையும் அசத்தினார்.

தற்போது மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் இசை பயின்று வருகிறார்.

அந்த படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார் லிடியன்.

Lydian learns music from maestro Ilayaraja

2K கிட்ஸ்க்கு ஹாப்பி நியூஸ்..; ‘காதலுக்கு மரியாதை’ காலத்துக்கே செல்லும் விஜய்.!

2K கிட்ஸ்க்கு ஹாப்பி நியூஸ்..; ‘காதலுக்கு மரியாதை’ காலத்துக்கே செல்லும் விஜய்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

90 கிட்ஸ் முதல் 2K கிட்ஸ் வரை பலர் விஜய் ரசிகர்களாக உள்ளனர். ஆனால் இதில் பல 2K கிட்ஸ்கள் 90s விஜய்யை திரையில் பார்த்து இருக்க மாட்டார்கள்.

பழைய படங்களை டிவியில் அல்லது யூடியூப்பில் பார்த்து இருப்பார்கள். தற்போது ரொமான்டிக் விஜய்யை மீண்டும் திரையில் பார்க்க அவர்களுக்கு வாய்ப்பு வந்துள்ளது எனலாம்.

பீஸ்ட் படத்திற்கு, அடுத்தபடியாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தளபதி 66வது படத்தில் நடிக்கப் போகிறார் விஜய்.

தில் ராஜு தயாரிக்கும் இப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிறது்

இதில் நடிகர் மகேஷ் பாபுவின் மகள் விஜய்யின் மகளாக நடிக்கிறார்.

இந்த நிலையில் விஜய் 66வது படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கதையை கேட்ட பிறகு… இந்த கதையை நான் கேட்டு நடித்து 20 வருடங்கள் மேல் ஆகிவிட்டது என்றாராம் விஜய்.

பூவே உனக்காக, லவ் டுடே, காதலுக்கு மரியாதை, படங்களைப் போல இது குடும்ப கதையாக இருக்கும் என விஜய் தெரிவித்ததாக தில் ராஜு தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய் 66 ஆவது படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

Vijay talks about his next film Thalapathy 66?

ஷங்கர் – ராம் சரண் இணையும் பட சாட்டிலைட் ரைட்ஸ் & ரிலீஸ் அப்டேட்

ஷங்கர் – ராம் சரண் இணையும் பட சாட்டிலைட் ரைட்ஸ் & ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரனை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

தமன் இசையமைத்து வருகிறார்.

தில் ராஜு தயாரித்து வரும் இப்படத்திற்கு RC 15 என தற்காலிகமாக பெயர் வைத்துள்ளனர்.

அரசியல் கலந்த திரில்லர் கதையாக இப்படம் உருவாகி வருகிறதாம்.

இதன் பட்ஜெட் ரூ 160 கோடி என கூறப்படுகிறது.

இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது.

இதன் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை 200 கோடிக்கு ரூபாய்க்கு ஜீ நெட்வொர்க் நிறுவனம் வாங்கி இருப்பதாக சொல்லப்படுகின்றது.

அடுத்தாண்டு 2023ம் ஆண்டு (பொங்கல்) & தெலுங்கில் சங்கராந்திக்கு இப்படத்தை வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளராம்.

Satellite rights and release date of Director Shankar – Ram Charan project

More Articles
Follows