அழகான நயன்தாராவுக்கு ஜோடி கிடையாதாம்..!

அழகான நயன்தாராவுக்கு ஜோடி கிடையாதாம்..!

actress nayantharaநயன்தாராவின் கால்ஷீட் கிடைக்காதா? என ஒவ்வொரு ஹீரோக்களும் காத்திருக்க, ஹீரோவே வேண்டாம் என சோலாவாக இறங்கியிருக்கிறார் நயன்தாரா.

தற்போது இயக்குனர் சற்குணம் தயாரிக்கும் டோரா படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

தாஸ் ராமசாமி இப்படத்தை இயக்கி வருகிறார்.

இதில் நயன்தாராவுடன் போலீஸ் அதிகாரியாக ஹரிஷ் உத்தமன் நடிக்க, முக்கிய வேடத்தில் தம்பி ராமையா நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

அடுத்த ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

எதையும் விடாத கபாலி… முதன்முறையாக தங்கத்தில் தலைவர்..!

எதையும் விடாத கபாலி… முதன்முறையாக தங்கத்தில் தலைவர்..!

rajiniஉலக திரையுலக வரலாற்றில் இப்படியொரு புரோமோசன் வேறு எந்த படத்திற்காகவது கிடைக்குமா? எனத் தெரியவில்லை.

அப்படியான முதன்முறை சாதனைகளை ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி நிகழ்த்தி வருகிறார்.

ஏர் ஏசியா விமான விளம்பரம், பைவ் ஸ்டார் சாக்லேட் விளம்பரம், மலேசியாவில் நடைபெறவுள்ள கபாலி மாரத்தான் போட்டி, ஏர்டெல் விளம்பரம் என விதவிதமான புரமோஷன்களில் களை கட்டி வருகிறது.

இதனையடுத்து, பிரபல முத்தூட் நிறுவனம் ரஜினியின் ‘கபாலி’ உருவத்தை தங்கள் தங்க நாணயங்களில் பதிக்க திட்டமிட்டுள்ளனர்.

தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களில் சுமார் ரூ.40 கோடி மதிப்பில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘பிச்சைக்காரன்’ நாயகி சாதனா டைட்டஸின் அடுத்த படம்.!

‘பிச்சைக்காரன்’ நாயகி சாதனா டைட்டஸின் அடுத்த படம்.!

ஒரு சில கதாநாயகிகளுக்கு மட்டுமே அறிமுக படம் அசத்தல் ஆரம்பமாக இருக்கும்.

அப்படியான ஒரு நாயகிதான் ‘பிச்சைக்காரன்’ நாயகி சாதனா டைட்டஸ்.

அப்படியொரு ஒரு அருமையான படத்தில் அழகான நடிப்பை கொடுத்திருந்தார்.

இதனையடுத்து, அறிமுக இயக்குநர் சாய் சுதர்சன் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார்.

இதில் ஐடி துறையில் வேலை செய்யும் இளைஞராக நடிக்கிறார் கயல் சந்திரன்.

இவரின் சித்தப்பாவாக நடிக்கிறார் பார்த்திபன்.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் ரகு கூறியதாவது…

”சிலை திருடும் கும்பலுக்கு தலைவனாக நடிக்கிறார் பார்த்திபன். பெரியளவில் ஒரு திருட்டை நடத்தும் போது நடக்கும் நிகழ்வுகளை காமெடியாக சொல்லி இருக்கிறோம்” என்றார்.

இதன் படப்பிடிப்பு ஜூலை 15ம் தேதி துவங்குகிறது.

ராமை தொடர்ந்து சீனுராமசாமி இயக்கத்தில் மம்மூட்டி.!

ராமை தொடர்ந்து சீனுராமசாமி இயக்கத்தில் மம்மூட்டி.!

Mammootty and seenu ramasamy join for new movieமலையாள படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது நேரடி தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருபவர் மலையாள நடிகர் மம்மூட்டி.

தற்போது இவர் ராம் இயக்கத்தில் ‘பேரன்பு’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மற்றொரு படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

விஜய் சேதுபதி, தமன்னா நடித்துள்ள ‘தர்மதுரை’ படத்தை தொடர்ந்து சீனுராமசாமி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறாராம் மம்மூட்டி.

இதுகுறித்த பேச்சுவார்த்தை முடிந்தவுடன் இப்படம் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

கபாலியுடன் தன் ரசிகர்களையும் கவனிக்கும் மோகன்லால்

கபாலியுடன் தன் ரசிகர்களையும் கவனிக்கும் மோகன்லால்

rajini and mohan lalரஜினியின் கபாலி படத்திற்கு ஏற்பட்ட எதிர்பார்ப்புக்கு ஈடாக மோகன்லாலின் புலிமுருகன் படத்திற்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையில் கபாலி படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை தன் ஆசீர்வாத் சினிமாஸ் மூலம் கைப்பற்றி இருக்கிறார் மோகன்லால்.

இப்படத்தை 200க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம்.

எனவே புலிமுருகனை ரிலீசை தள்ளி வைத்துவிட்டார். இதனால் இவரது ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இவரது படங்கள் ‘ஜனதா கேரேஜ்’, ‘மனமந்தா’ மற்றும் ‘ஒப்பம்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கின்றன.

எனவே, கபாலி வெளியாகும் திரையரங்குகளில் தன் படங்களின் டீசர்களை வெளியிட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மீண்டும் சுசீந்திரன்-விஷ்ணு கூட்டணியில் ஸ்ரீதிவ்யா..!

மீண்டும் சுசீந்திரன்-விஷ்ணு கூட்டணியில் ஸ்ரீதிவ்யா..!

sridivya and vishnuநடிப்புடன் கூடிய குடும்ப பாங்கான வேடங்களுக்கு ஏற்ற நடிகையாக திகழ்ந்து வருகிறார் ஸ்ரீதிவ்யா.

இளம் ஹீரோக்களின் மெயின் சாய்ஸ் ஆக இருக்கும் இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார் விஷ்ணு.

இவர்கள் இருவரும் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஜீவா படத்தில் ஜோடியாக நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

வெண்ணிலா கபடி குழு, ஜீவா படத்தை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்கிறார் விஷ்ணு என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இதன் சூட்டிங் தொடங்கப்பட உள்ளது.

More Articles
Follows