தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத நம்பர் 1 இடத்தில் நயன்தாரா இருக்கிறார்.
இவரது நடிப்பில் டோரா’, ‘இமைக்கா நொடிகள்’, ‘அறம்’, ‘கொலையுதிர்க்காலம்’, ‘வேலைக்காரன்’ ஆகிய படங்கள் வளர்ந்து வருகிறது.
இதில் டோரா வருகிற மார்ச் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இதில் ‘கொலையுதிர்க்காலம்’ படத்தை இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரிக்க, சக்ரி டோலட்டி இயக்கி வருகிறார்.
இந்நிலையில் ‘கொலையுதிர்க்காலம்’ தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதில் நயன்தாரா கேரக்டரில் நடிக்க தமன்னா நடிக்கவிருக்கிறாராம்.
மேலும் பிரபுதேவா, பூமிகா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.