நயன்தாராவின் அறம் பட போஸ்டரில் அனிதா மரணம் எதிரொலி

நயன்தாராவின் அறம் பட போஸ்டரில் அனிதா மரணம் எதிரொலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayantharas Aramm poster designed for Anitha suicide because of NEETநீட் தேர்வு முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்ற மாணவி அனிதா, மனவேதனையால் நேற்று தற்கொலை செய்துக் கொண்டார்.

இதனால் தமிழகமே கொந்தளித்து உள்ளது.

இன்று ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை வரை அவரது உடலை எடுக்க விடமாட்டோம் என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீட் தேர்வு ரத்து என்ற அறிவிப்பை உடனடியாக அரசு வெளியிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நயன்தாரா நடித்துள்ள அறம் பட போஸ்டரில் நீட் தேர்வால் மரணம் அடைந்த அனிதாவின் மரணம் குறித்து அச்சிட்டுள்ளனர்.

Nayantharas Aramm poster designed for Anitha suicide because of NEET

இதோ அந்த போஸ்டர்…

ARAM neet poster

கபாலி-விவேகம் ரிலீஸ் டார்கெட்டில் மெர்சல்

கபாலி-விவேகம் ரிலீஸ் டார்கெட்டில் மெர்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mersal movie release plan updatesதமிழகத்தில் கிட்டதட்ட 1100 தியேட்டர்கள் உள்ளன.

முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியானால் இதில் 850க்கும் அதிகமான தியேட்டர்களில் அவர்களின் படத்தை வெளியிட தயாராக இருப்பார்கள்.

கபாலி, விவேகம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸின் போது மற்ற படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதால், பெரும்பாலான தியேட்டர்களில் இந்த படங்களே திரையிடப்பட்டன.

இந்நிலையில் வருகிற தீபாவளிக்கு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தையும் சுமார் 800 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர்.

மெர்சல் படத்தின் தீம் மியூசிக் மற்றும் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mersal movie release plan updates

விஜய்யை தொடர்ந்து அஜித் படத்திலும் ரஜினி பட வில்லன்

விஜய்யை தொடர்ந்து அஜித் படத்திலும் ரஜினி பட வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Akshaykumar doing Ajith role in Veeram Hindi remakeதமிழில் ஏஆர் முருகதாஸ் இயக்கிய விஜய்யின் துப்பாக்கி படம் மாபெரும் ஹிட்டடித்தது.

எனவே இப்படத்தை இந்தியில் அக்‌ஷய்குமார் நடிக்க ரீமேக் செய்தார் ஏஆர். முருகதாஸ். ஹாலிடே என்ற பெயரில் 2014ல் இப்படம் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் விஜய் படத்தை தொடர்ந்து அஜித் நடித்த வீரம் இந்தி ரீமேக்கிலும் அக்‌ஷய்குமார் நடிக்கவுள்ளாராம்.
இதன் சூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது.

இப்படத்தை அக்‌ஷய்குமாரின் நெருங்கிய நண்பர் சஜித் இயக்க இருக்கிறார். இவர்கள் இருவரும் இணையும் 9வது படம் இது என கூறப்படுகிறது.

விரைவில் வெளியாகவுள்ள ரஜினியின் 2.0 படத்தில் அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Akshaykumar doing Ajith role in Veeram Hindi remake

பக்கத்து வீட்டு பெண்ணை கடித்து குதறிய ஜாங்கிரி மதுமிதா

பக்கத்து வீட்டு பெண்ணை கடித்து குதறிய ஜாங்கிரி மதுமிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

This is the reason behind why Madhumitha had to bite her neighbourஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்தவர் ஜாங்கிரி மதுமிதா.

இவரது வீட்டில் அருகில் ஒரு பெண்ணின் கையை இவர் கடித்து குதறியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது…

தன் அடுக்குமாடி குடியிருப்பில் பராமரிப்பு கட்டணம் குளறுபடி காரணமாக உஷா உடன் பிரச்சினை ஏற்பட்டது.
மேலும் மற்றவர்களிடம் தன்னை பற்றி குற்றம் சாட்டியிருப்பதாக கூறியுள்ளார்.

இந்த பிரச்சினையின் போது உஷாவின் தொல்லையை தாங்க முடியாமல் லேசாக அவரை கடித்துவிட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் அந்த பெண் கடித்த இடத்தில் குத்தி குத்தி பெரிதாக்கிவிட்ட்டார்” என்றும் நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.

This is the reason behind why Madhumitha had to bite her neighbour

சிவகார்த்திகேயன்-நயன்தாரா… செப்-29ல் இணைதலும் மோதலும்

சிவகார்த்திகேயன்-நயன்தாரா… செப்-29ல் இணைதலும் மோதலும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan nayantharaசிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா முதன்முறையாக இணைந்து ஜோடியாக நடித்துள்ள படம் வேலைக்காரன்.

மோகன்ராஜா இயக்கியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 29-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதேநாளில் ஜிவி. பிரகாஷ் நடித்துள்ள செம என்ற படமும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நயன்தாரா நடித்துள்ள அறம் படமும் இந்த படங்களுடன் மோத களத்தில் குதிக்கிறது.

ஆக மொத்தம் ஒரே நாளில் ஒரு படத்தில் இணைந்தும் மற்ற படம் மூலம் சிவகார்த்திகேயனுடன் மோத உள்ளார் நயன்தாரா.

ஆனால் வேலைக்காரன் பட ரிலீஸ் தள்ளிப்போகும் எனவும் கூறப்படுகிறது.

Sivakarthikeyan and Nayanthara joins also clash on 29th September 2017

மாணவி அனிதா தற்கொலை; நடிகர்கள்-இயக்குனர்கள் இரங்கல்

மாணவி அனிதா தற்கொலை; நடிகர்கள்-இயக்குனர்கள் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kollywood Industry condolence to Anitha family+2வில் நல்ல மார்க் எடுத்தும் நீட் தேர்வு முறையால் மருத்துவராக முடியாத மாணவி அனிதா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பல திரையுலக பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகின்றனர்.

சில பிரபலங்களின் கருத்துக்கள் இதோ…

நடிகர் விஷால் : அனிதா மருத்துவக் கல்விக்கு தகுதி பெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பதிலாக நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்தவர்கள் நம்மை ஆள்வதற்கு தகுதியற்றவர்கள்.

பாடலாசிரியர் விவேக் : இந்த பொண்ணு மனசுல இருந்த கனவுக்கும், கண்ல இருந்த ஏமாற்றத்துக்கும், எங்க கண்ணீருக்கும் யார் பதில் சொல்லுவா?

மூட்ட தூக்கி படிக்க வச்ச அப்பா. ஒரு தலைமுறைக்கான கனவு டா அது. 1176 ம் தன் ரத்தமும் கொடுத்தாச்சு. இன்னும் பசிக்குதா உங்களுக்கு?

நடிகர் சிவகார்த்திகேயன் : இந்த தேசம் ‘தகுதி’யுள்ள ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டது…என் தங்கைக்கு கண்ணீர் அஞ்சலி

இயக்குனர் ராம் :
“நீட் ஒரு அரசபயங்கரவாதம். 12 வருட உழைப்பை, கனவை, அனிதாவை படுகொலை செய்த பயங்கரவாதம்”.

இயக்குனர் பாண்டிராஜ் :
தூக்கு போடுற வயசா இது ? வேதனைப்பட வேண்டிய விசயம் இல்லை. வெக்கப்பட வேண்டிய விஷயம். எப்போ கல்வி வியாபாரம் ஆச்சோ அப்பவே அரசும் செத்து போச்சு.

நடிகர் விஜய்சேதுபதி
: தங்கை அனிதாவின் தற்கொலையை அரசியல் ஆக்காதீர்கள். துயரத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அனிதாவின் பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

டைரக்டர் சீனுராமசாமி:

டாக்டர் அனிதா தங்கையே உங்கள் தற்கொலை ஏற்புடையதல்ல. நேர்மையற்றவர்கள் பிழைக்கும் நாட்டில் நீங்கள் வாழ்ந்திருக்க வேண்டும். இதய அஞ்சலி.

இந்த மதிப்பெண்ணுக்கு நாடு உங்களை தேடி வந்து வாய்ப்பளித்திருக்க வேண்டும் மதிப்பெண் இருந்தும் கிராம நகர ஏழை மாணவர்கள் தவிப்பவர்கள் எத்தனையோ..?

நடிகர் பார்த்திபன்:

அணி தாவும் அரசியல் ஆடுகள களேபரத்தில் அனிதாவும் இன்னும் பலியாகும் உயிர்களும் இனியும் ஆகும்.

நடிகை கஸ்தூரி : எதேச்சதிகார மத்திய அரசும் தலையாட்டி பொம்மை மாநில அரசும் சேர்ந்து கொன்னே போட்டுடீங்களேய்யா !!! வயிறு எரிகிறது.

நடிகர் விவேக்.

வாழ்க்கையில் உயர்வதற்கும் கல்விக்கும் சம்பந்தமில்லை. தற்கொலை முடிவை மாணவர்கள் கைவிட வேண்டும்.

பள்ளி கல்வியை பாதியில் விட்ட பலர், வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார்கள்.

விமானியாக ஆக வேண்டும் என ஆசைப்பட்டவர் அப்துல் கலாம். ஆனால் அது நிறைவேறாவிட்டாலும் அவர் தவறான முடிவை எடுக்கவில்லை. பின்னர் வேறு துறையில் சாதித்து முன்மாதிரியாக இருந்தவர் அவர்.

நடிகர் ஜி.வி. பிரகாஷ் ட்விட்டரில் பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

மேலும் அன்றைய தினமே அனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மேலும் அவரது தந்தைக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கழிப்பறை கூட இல்லாத வீட்டில் மருத்துவ கனவோடு பிறந்த அனிதா இன்று இல்லை. நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் மரணம் அதிகாரமும் சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை.

நல்ல மருத்துவராக ஆகியிருக்க வேண்டியவர் அவர். தமிழக இளைஞர்களுக்கு இந்த நாள் கறுப்பு தினம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.‌

இயக்குனர்கள் சீமான், அமீர், ரஞ்சித், பாண்டிராஜ் உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Kollywood Industry condolence to Anitha family

MERIT neet anitha

More Articles
Follows