நட்டி – ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் விறுவிறு த்ரில்லராக உருவாகும் ‘வெப்’.!

நட்டி – ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் விறுவிறு த்ரில்லராக உருவாகும் ‘வெப்’.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேலன் புரடக்சன்ஸ் சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் படம் ‘வெப்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹாரூன் இயக்கியுள்ளார். நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார்.

4 நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் ‘காளி’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் முதன்மை நாயகியாக நடிக்கிறார்.

‘எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்’ படத்தின் நாயகி ஷாஸ்வி பாலா, ‘முந்திரி காடு’ & ‘கண்ணை நம்பாதே’ படங்களில் நடித்த சுபப்ரியா மலர் மற்றும் விஜே அனன்யா மணி ஆகியோர் மற்ற 3 நாயகிகளாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன், முரளி, தீப்ஸிகா, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். காட்பாதர், மோகன்தாஸ் ஆகிய படங்களில் பணியாற்றிய அருண் சங்கர் கலை இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.

3 பாடல்கள் உள்ள இப்படத்தில் சாண்டி மாஸ்டர், சிவசங்கர் மாஸ்டர் மற்றும் ஹரிஷ் கார்த்திக் ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர். அருண் பாரதி, ஆர்ஜெ விஜய் மற்றும் ஜெகன் கவிராஜ் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

சிலந்தி வலையில் மாட்டிக்கொண்டு வெளியேற துடிக்கும் பூச்சிகளின் போராட்டத்தை போன்று இந்த கதை உருவாகி உள்ளதால் அதற்கு பொருத்தமாக ‘வெப்’ என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தில் நட்டிக்கும் ஷில்பா மஞ்சுநாத் குரூப்புக்கும் நடக்கும் பூனை எலி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்

ஐடி தொழில்துறை வளர ஆரம்பித்த பின்பு கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக உருவெடுத்த பார், பப் கலாச்சாரத்தை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஹாரூன்.

கோவா உள்ளிட்ட பகுதிகளில் இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்த முதலில் திட்டமிடப்பட்டு இருந்தாலும் கொரோனா பரவல் காரணமாக, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சண்டைப்பயிற்சி: ஃபயர் கார்த்திக்
ஆடை வடிவமைப்பு : டோரத்தி ஜெய்
நிர்வாக தயாரிப்பு: கே.எஸ்.கே செல்வா
புரொடக்ஷன் கண்ட்ரோலர் : பவித்ரன்

#Natty’s #WEB movie shoot wrapped up

சோதனையை சாதனையா மாத்துங்க..; பிக்பாஸ் அல்டிமேட்டில் சிநேகனுடன் இணைந்த பிரபலம்

சோதனையை சாதனையா மாத்துங்க..; பிக்பாஸ் அல்டிமேட்டில் சிநேகனுடன் இணைந்த பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிகளையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

இதற்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே எப்போதும் உள்ளது.

இதனையடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாக உள்ளது.

இந்த லோகோவை கமலுடன் இணைந்து சிவகார்த்திகேயன் பிக்பாஸ் 5 ஃபைனல் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார்.

தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான புரோமோஷன் தொடங்கியுள்ளது.

இது ஜனவரி 30 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில் 16 போட்டியாளர்கள் களமிறங்கவுள்ளனர்.

கவிஞரும் நடிகருமான சிநேகனை முதல் போட்டியாளராக அறிவித்துள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட்டின் 2வது போட்டியாளராக நடிகை ஜூலி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த புரோமோ வீடியோவில்.. “சோதனையை சாதனையா மாத்துங்க..” என சொல்லி ஜூலி துள்ளிக் குதிக்கிறார்.

Lyricist Snehan is part of Bigg Boss ultimate

65 நாட்கள்.. 40 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்த ‘துரிதம்’ படக்குழுவினர்.!

65 நாட்கள்.. 40 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்த ‘துரிதம்’ படக்குழுவினர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இதுவரை தமிழ் சினிமாவில் பல ரோட் மூவிக்கள் வந்திருந்தாலும் அவை எதுவும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது இல்லை.. ஆனால் முதன்முறையாக அந்தக்குறையை போக்கும் விதமாக உருவாகியுள்ள படம் தான் துரிதம்.

கதையின் நம்பகத்தன்மைக்காக தமிழ்நாட்டில், அதுவும் கதை நிகழும் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கே பயணப்பட்டு மொத்த படப்பிடிபையும் நடத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 65 நாட்கள் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதற்காக தமிழகத்துக்குள்ளேயே 40 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து சாலைகளில் மட்டுமே பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். படத்தின் கதை விறுவிறுப்பாக நகரும் விதமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும் விதமாக படத்திற்கு ‘துரிதம்’ என்றே தலைப்பும் வைத்துள்ளனர்.

எல்லோருக்குமே தாங்கள் செய்யும் விஷயங்கள் அவர்கள் கண்ணோட்டத்தில் சரி என்பது போலத்தான் தெரியும்.. ஆனால் அடுத்தவர்கள் பார்வையில் அது தவறாக தெரிய வாய்ப்பு உண்டு. இந்த கருத்தை மையப்படுத்தி உண்மையில் நடந்த சம்பவம் ஒன்றை தழுவி இந்த துரிதம் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சீனிவாசன். இவர் இயக்குனர் ஹெச்.வினோத்தின் சீடர்.. குருவை போலவே இந்தப்படத்தை விறுவிறுப்பு குறையாமல் இயக்கியுள்ளார்.

‘சண்டியர்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெகன் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதுமட்டுமல்ல, இந்தப்படத்தின் கதை மீதுள்ள நம்பிக்கையால் இந்தப்படத்தின் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.

கதாநாயகியாக மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்ற ஈடன் நடித்துள்ளார் இவர் ஏற்கனவே, ‘இருக்கு ஆனா இல்ல’, ‘பனி விழும் நிலவு’ உள்ளிட்ட சில தமிழ் படங்கள் மற்றும் மலையாளம் தெலுங்கு மொழிகளில் ஏற்கனவே நடித்துள்ளார்., கதாநாயகியின் தந்தையாக இயக்குனர் ஏ.வெங்கடேஷ், நாயகனின் நண்பனாக பாலசரவணன் மற்றும் பூ ராமு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, வில்லனாக ராமச்சந்திரன் (ராம்ஸ்) நடித்துள்ளார்.

புதியவரான நரேஷ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் மில்டனின் உதவியாளராக பணியாற்றிய வாசன் என்பவர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை நாகூரான் கவனிக்க, ஆக்சன் காட்சிகளை மணி என்பவர் வடிவமைத்துள்ளார். அதுமாட்டுமல்ல மேற்கு தொடர்ச்சி மலை பட இயக்குனர் லெனின் பாரதி இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளை உடனிருந்து கவனித்து மேற்பார்வை செய்து உதவியுள்ளார்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

நடிகர்கள் ; ‘சண்டியர்’ ஜெகன், ஈடன், ஏ.வெங்கடேஷ், பாலசரவணன், பூ ராமு, ராமச்சந்திரன் (ராம்ஸ்) மற்றும் பலர்

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு ; ஜெகன்

இயக்கம் ; சீனிவாசன்

இசை ; நரேஷ்

ஒளிப்பதிவு ; வாசன்

படத்தொகுப்பு ; நாகூரான்

ஆக்சன் ; மணி

மக்கள் தொடர்பு ; KSK செல்வா

First ever road film in Tamil is titled Thuridham

வலிகள் நிறைந்த என் போராட்டம் திருடப்பட்டது.; மோகனுக்கு ரீஎன்ட்ரி கொடுக்கும் விஜய்ஸ்ரீ உருக்கம்

வலிகள் நிறைந்த என் போராட்டம் திருடப்பட்டது.; மோகனுக்கு ரீஎன்ட்ரி கொடுக்கும் விஜய்ஸ்ரீ உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எவருமே நினைத்து கூட பார்க்காத முடியாத 87 வயது நடிகரான சாருஹாசனை தனது ‘தாதா87’ படத்தில் நாயகனாக நடிக்க வைத்தவர் விஜய்ஸ்ரீ ஜி.

இந்த படம் கடந்த 2019ல் ரிலீசானது.

இந்திய சினிமாவில் முதன்முறையாக பெண் திருநங்கையாக நடித்த படம் என்ற பெருமையை இப்படம் பெற்றது.

மேலும் உலக சினிமா வரலாற்றிலேயே புகை, மதுவுக்கு எதிரான டைட்டிலில் கார்டுடன் பெண்களை அவர்கள் அனுமதியின்றி தொடுவது சட்டப்படி குற்றம் என்ற வாசகம் இடம்பெற்ற படம் என்ற பெருமையும் தாதா87-ஐயே சேரும்.

இப்படத்தை காப்பியடித்து இதன் உரிமையை பெறாமல் ‘சண்டிகர் கரே ஆஷிக்கி’ என்ற ஹிந்தி படம் சமீபத்தில் வெளியானது்

இதன் மையக்கருவும் காட்சிகளும் தாதா87-ஐ வலுவாக நினைவூட்டியது்

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையானது.

அப்போதும் கூட… “இன்றைய காலகட்டத்தில் சமுதாயத்திற்கு மிகவும் தேவையான கதைக்களத்தையும், கருத்துகளையும், காட்சிகளையும் தேர்ந்தெடுத்ததற்காக சண்டிகர் கரே ஆஷிக்கி படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என பெருந்தன்மையுடன் ஜனவரி 12ல் கருத்து தெரிவித்து இருந்தார் விஜய்ஸ்ரீ.

இந்த நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் ‘சண்டிகர் கரே ஆஷிக்கி’ படம் குறித்து அவர் தன் வலி மிகுந்த போராட்டம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

(ஒரு ரசிகர் இரண்டு படக்காட்சிகளையும் இணைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்)

இதனை பார்த்த விஜய்ஸ்ரீ…

என் #தாதா87 படத்தை இந்தியில் #ChandigarhKareAashiqui 2022 படக்காட்சி களை பயன்படுத்தியதை காட்சி படுத்தியதற்க்கு நன்றி..
வலிகள் நிறைந்த என் போராட்டம் திருட பட்டாலும் உலகம் அறிய காலம் வரும் ..#DhaDha87
@onlygmedia
@onlynikil

‘தாதா 87’ பட இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கிய ‘பவுடர்’ மற்றும் ‘பப்ஜி’ படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

விரைவில் மோகன் நடிக்கவுள்ள ‘ஹரா’ படத்தை இயக்க தயாராகி வருகிறார் விஜய்ஸ்ரீ ஜி.

இத்துடன் தமிழகத்தை உலுக்கிய உண்மை சம்பவங்களையும் திரைப்படமாக்க ரெடியாகி வருகிறார் விஜய் ஸ்ரீ.

கனியட்டும் காலம்…
என்னமோ திட்டமிருக்கு…

Dhadha 87 fame Director Vijay Sri G’s emotional tweet

சிம்புவின் MAHAA வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ONSKY நிறுவனம்

சிம்புவின் MAHAA வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ONSKY நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும், அவரது 50 வது திரைப்படமான “மகா” படம் ஏற்கனவே ரசிகர்களிடம் விஷுவல் புரமோக்களின் மூலம், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

படத்திற்கான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் உள்ள நிலையில், இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சிலம்பரசன் TR கௌரவ பாத்திரமொன்றில் தோன்றுகிறார்.

ஶ்ரீகாந்த், கருணாகரன், முக்கியமான பாத்திரங்களில் நடிக்கின்றனர். தம்பி ராமையா, பேபி மானஸ்வி, மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

U.R. ஜமீல் இயக்கும் இப்படத்தை, Etcetera Entertainment நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் V. மதியழகன், Malik Streams Corporations (Production & Distribution) நிறுவனத்தின் தத்தோ அப்துல் மாலிக் உடன் இணைந்து தயாரித்துள்ளார்.

தொழில்நுட்ப குழுவில்… ஜிப்ரான் (இசை), J. லக்‌ஷ்மன் (ஒளிப்பதிவு), J.R. ஜான் ஆப்ரஹாம் (படத்தொகுப்பு), மனிமொழியன் ராமதுரை (கலை), கார்கி, விவேகா (பாடல்கள்), ஷெரீஃப்-காயத்திரி ரகுராம் (நடனம்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

இந்த நிலையில் மகா படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை, ONSKY நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ONSKY bagged STR – Hansika’s Mahaa theatrical rights

ஓடிடி Top 10 : அஜித் பட இயக்குநர் பர்ஸ்ட்.. 2வது இடத்தில் சூர்யா..6வது இடத்தில் டோவினோ.. 10வது இடத்தில் தனுஷ்

ஓடிடி Top 10 : அஜித் பட இயக்குநர் பர்ஸ்ட்.. 2வது இடத்தில் சூர்யா..6வது இடத்தில் டோவினோ.. 10வது இடத்தில் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா லாக்டவுன் காலத்தில் மக்களை வீட்டில் கட்டிப் போட உதவிய சாதனங்களில் முக்கியமானவைகளில் ஓடிடி தளமும் ஒன்று.

பல்வேறு மொழிகளில் பல்வேறு புதிய படங்கள் பல்வேறு தளங்களில் வெளியானது.

தமிழ் சினிமாவில் 2020 ஆண்டில் 24 படங்கள் ரிலீசானது. கடந்த 2021 ஆண்டில் 40க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசானது.

இந்த நிலையில் ஆர்மேக்ஸ் மீடியா என்ற நிறுவனம் கடந்த 2021ல் ஓடிடியில் வெளியான இந்திய படங்களின் டாப் 10 லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது.

அதில் விஷ்ணுவர்தன் இயக்கிய ஹிந்திப் படமான ‘ஷெர்ஷா’ முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அஜித் நடித்த ‘பில்லா, ஆரம்பம்,’ படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன்.

2வது இடத்தில் சூர்யா, லிஜோமோள் ஜோஸ், மணிகண்டன் நடித்த ‘ஜெய் பீம்’ படம் பிடித்துள்ளது.

டொவினோ தாமஸ் நடித்த மலையாளப் படமான ‘மின்னல் முரளி’ 6ம் இடத்தையும் அக்ஷய்குமார், தனுஷ் நடித்த ஹிந்திப் படமான ‘அத்ராங்கி ரே’ 10வது இடத்தையும் பிடித்துள்ளது.

OTT TOP 10 list of year 2021

1. Shershaah
2. Jaibhim
3. Sardar Uddham
4. Mimi ,
5. Kaagaz,
6. Minnal Murali,
7. State of Siege,
8. Sherini,
9. Silence,
10. Atnrani Re

More Articles
Follows