தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஹாரூன் இயக்கத்தில் கார்த்திக் ராஜா இசையில் நட்டி நடித்துள்ள படம் ‘வெப்’. வலை.
இந்த படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை ரேகா நாயர் பேசும்போது…
“ஹீரோயின் வரவிலைலை என்று யாரும் கவலைப்பட வேண்டாம். அதனாலேயே படமும் ஹிட் ஆகிவிடும். ஹீரோயினும் பிரபலமாகி விடுவார். நட்டி சாரைப் பொறுத்தவரை அவர் ஒரு ஞானி. அது அவர்களுடன் பேசி பழகியவர்களுக்கு தான் தெரியும். நட்டி எல்லோருக்குமே வாய்ப்புகளை தேடி கொடுக்கிறார். தயாரிப்பாளரின் பெயரிலேயே முனி இருப்பதால் நிச்சயமாக காத்து கருப்பு அண்டாது.
நடிகர் முரளி இங்கே வருத்தப்பட்டதை பார்க்கும்போது அவர் இத்தனை வருடங்களாக இன்னும் முள் பாதையிலேயே நடந்து கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. விரைவில் அவருக்கு வெல்வெட் பாதையில் நடக்கும் வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறினார்.
Rekha nair speaks about Heroine absent in movie promotion