‘யூகி’-யில் நடிக்க கூடாதுன்னு தான் கதை கேட்டேன்..; நரேன் ஓபன் டாக்

‘யூகி’-யில் நடிக்க கூடாதுன்னு தான் கதை கேட்டேன்..; நரேன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்யராஜ் கதையில் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி, பவித்ரா லக்‌ஷ்மி இணைந்துள்ள படம் ‘யூகி’.

இப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் நரேன் பேசியதாவது…

“கைதி படத்திற்கு பிறகு நிறைய போலீஸ் பாத்திரம் இந்தக்கதையும் அந்த மாதிரி தான் என்பதால் இப்படத்தில் நடிக்க கூடாது என்று தான் கதை கேட்டேன். ஆனால் கதையை இயக்குநர் சொன்ன விதம் அதில் இருந்த திருப்பங்கள் என்னை ஆச்சர்யப்படுத்தியது.

இந்தப்படத்தை அற்புதமாக எடுத்துள்ளார்கள். ஓடிடியில் நிறைய ஆஃபர் வந்த போதும் இப்படத்தை நம்பி திரையரங்கிற்காக தயாரிப்பாளர்கள் கொண்டுவந்துள்ளார்கள். இப்படம் நிறைய பேரை தமிழ் சினிமாவிற்கு தரும். கதிர் நட்டி இருவருடன் நடித்தது மகிழ்ச்சி.

படம் வெளியிடுவதில் உள்ள கஷ்டம் எனக்கு தெரியும் படத்தை வெளியிடும் 11:11 Productions பிரபு திலக் அவர்களுக்கு நன்றி. படம் பாருங்கள் பிடிக்கும்.

narain speech at yugi movie audio launch

‘யூகி’ படம் மூலம் தமிழில் ரீஎன்ட்ரீயாகும் சிவகார்த்திகேயன் பட நாயகி

‘யூகி’ படம் மூலம் தமிழில் ரீஎன்ட்ரீயாகும் சிவகார்த்திகேயன் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்யராஜ் கதையில் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி, பவித்ரா லக்‌ஷ்மி இணைந்துள்ள படம் ‘யூகி’.

இப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ஆத்மியா பேசியதாவது…

“நான் நடித்த படம் நீண்ட காலம் கழித்து தமிழில் வந்திருப்பது மகிழ்ச்சி. தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் இப்படம் எடுத்தது மகிழ்ச்சி. மிக நல்ல திரைக்கதை இக்கதையில் நான் இருப்பது மகிழ்ச்சி.

இந்தப்படத்தில் எனக்கு வித்தியாசமான பாத்திரம் முதலில் செய்வது கடினமாக இருந்தது. சவாலாக முயன்று செய்துள்ளேன். இப்படத்தில் ஆதரவு தந்த அனைவருக்கும் உடன் நடித்த நடிகர்களுக்கும் நன்றி.

‘மனம் கொத்தி பறவை’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஆத்மியா என்பது குறிப்பிடத்தக்கது.

Athmeeya speech at yugi movie audio launch

‘யூகி’ படத்தை யூகிக்க முடியாது..; நம்பிக்கையில் நட்டி (எ) நட்ராஜ்

‘யூகி’ படத்தை யூகிக்க முடியாது..; நம்பிக்கையில் நட்டி (எ) நட்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்யராஜ் கதையில் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி, பவித்ரா லக்‌ஷ்மி இணைந்துள்ள படம் ‘யூகி’.

இப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் நட்டி எனும் நட்ராஜ் பேசியதாவது…

பிரபு திலக் என்னுடைய ஃபேமிலி மாதிரி அவர் வெளியிடும் படங்களை பார்த்து பெருமையாக இருக்கும். அவர் இந்தப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி. இந்தப்படம் கோவிட் காலத்தில் நடந்தது.

எங்கள் அனைவரையும் நன்றாக பார்த்துக்கொண்ட தயாரிப்பாளருக்கு நன்றி. ஜாக் மிக அற்புதமாக இயக்கியிருக்கிறார். நீங்கள் நினைப்பது போல் இந்தப்படம் இருக்காது உங்களை நிறைய ஆச்சர்யப்படுத்தும். நன்றி.

natty speech at yugi movie audio launch

‘யூகி’ படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்..; பரவசத்தில் பவித்ரா லக்‌ஷ்மி

‘யூகி’ படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்..; பரவசத்தில் பவித்ரா லக்‌ஷ்மி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்யராஜ் கதையில் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி, பவித்ரா லக்‌ஷ்மி இணைந்துள்ள படம் ‘யூகி’.

இப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் பவித்ரா லக்‌ஷ்மி பேசியதாவது….

முதல் முறையாக ஒரு ஆடியோ லாஞ்ச். யூகி படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அறிமுகமான சீக்கிரத்தில் இருமொழி படத்தில் நடிப்பது மிகப்பெரிய கொடுப்பினை.

இந்தப்படத்தில் நிறைய திருப்பங்கள் இருக்கிறது. பாக்கியராஜ் சார் மிக அட்டகாசமாக எழுதியுள்ளார். ஜாக் சார் அற்புதமாக எடுத்துள்ளார். இரு மொழியில் இப்படத்தை எடுத்தது புது அனுபவம். இப்படத்தை வெளியிடும் 11:11 Productions நிறுவனத்திற்கு நன்றி. எனக்கு ஆதரவு உங்களுக்கு நன்றி.

கதாசிரியர் பாக்கியராஜ் பேசியதாவது..

குஷன் பிரதர், ஜாக் பிரதர் மற்றும் 11:11 Productions நிறுவனத்தின் பாபு திலக் ஆகியோருக்கு நன்றி. ஜாக் எந்த ஒரு சின்ன விசயத்திலும் என்னை ஆலோசனை கேட்பார் அவரது அன்புக்கு நன்றி.

யசோதா படம் வாடகை தாய் கதை என்றவுடன் கொஞ்சம் பயமாக இருந்தது ஆனால் படம் பார்த்த பிறகு நிம்மதி வந்தது. ஏனெனில் அது முழுக்க வேற கதை.

இப்படம் மனித உறவுகளை பற்றிய கதை. இதில் எமோஷன் நிறைய இருக்கும். தியேட்டருக்கு வரும் ஆடியன்ஸை இப்படம் ஏமாற்றாது. அனைவரும் படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

Pavithra Lakshmi speech at yugi movie audio launch

நடிகர் கிருஷ்ணா மரணம்.; ரஜினி – கமல் – டி.ஆர். – சூர்யா – விஷால் இரங்கல்

நடிகர் கிருஷ்ணா மரணம்.; ரஜினி – கமல் – டி.ஆர். – சூர்யா – விஷால் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும் பிரபல நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமானவர் கிருஷ்ணா.

இவர் தெலுங்குத் திரையுலகில் 350+க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். தெலுங்கில் முதல் சூப்பர் ஸ்டார் என்னும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றவர்.

மேலும் இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மைக் கொண்டவர் கிருஷ்ணா.

இவருக்கு தற்போது 79 வயதாகிறது.

நேற்று இவருக்கு மாரடைப்பு ஏற்ப்பட்டது. இதன் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டாலும் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

எனவே செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து மகேஷ் பாபுவின் ரசிகர்களும் கிருஷ்ணாவின் ரசிகர்களும் இந்திய திரையுலகினரும் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று நவம்பர் 15ஆம் தேதி அதிகாலை கிருஷ்ணா காலமானார்.

அவரின் மறைவுக்கு தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி கமல் டி ஆர் சூர்யா விஷால் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த்…

The demise of Krishna garu is a great loss to the Telugu film industry … working with him in 3 films are memories i will always cherish. My heartfelt condolences to his family …may his soul rest in peace @urstrulyMahesh

கமல்ஹாசன்…

An icon of Telugu cinema Krishna gaaru is no more, an era ends with his demise. I wish to share the grief of brother @urstrulyMahesh who has to bear this third emotional trauma of losing a mother, brother and now his father. My deepest condolence dear Mahesh gaaru.

சூர்யா..

Our prayers and respects to Krishna garu, sending lots of love and strength to @urstrulymahesh and family. It’s been a tough year for you brother.. We are with you!

விஷால்…

Absolutely Shocking !

RIP #KrishnaGaru

May his soul rest in peace. Heartfelt condolences to @urstrulyMahesh and his family.

டி.ராஜேந்நர்..

மனிதநேயத்தின் மறுஉருவம்
எளிமையின் இருப்பிடம்
திறமையின் பிறப்பிடம்.

தெலுங்கு திரையுலகில் கொடிகட்டிப்பறந்த மாபெரும் நடிகர் கிருஷ்ணா அவர்களுடைய மறைவு என் மனதிற்கு பெரும் வருத்தத்தை அளிக்கிறது.

அவரது குடும்பத்திற்கு எனது ஆறுதல்களை தெரிவித்துகொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

இப்படிக்கு

டி ராஜேந்தர்,
நடிகர், இயக்குநர், விநியோகிஸ்தர்,
தமிழ் நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கௌரவ ஆலோசகர்.

rajini kamal condolences for actor krishna death

பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் ரூ.50 கோடியை தாண்டிய – ‘லவ் டுடே’..!

பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் ரூ.50 கோடியை தாண்டிய – ‘லவ் டுடே’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கோமாளி’ பட இயக்குனர் பிரதீப் நாயகனாக நடித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘லவ் டுடே’.

இந்த படத்தில் சத்யராஜ், இவானா, ரவீனா ரவி, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

யுவன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நவம்பர் 4ம் தேதி தமிழகத்தில் வெளியீட்டும் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றது.

இப்படம் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், ‘லவ் டுடே’ திரைப்படம் 11வது நாளில் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றில் அதிக லாபம் ஈட்டிய படங்களில் ஒன்றாகவும்,மேலும் இப்படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Love Today collections in 50 crore

More Articles
Follows