மச்சான்ஸ்… நமீதாவுக்கு கல்யாணம்; மாப்பிள்ளை யார் தெரியுமா?

மச்சான்ஸ்… நமீதாவுக்கு கல்யாணம்; மாப்பிள்ளை யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

namitha veerவிஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நமீதா.

இதனைத் தொடர்ந்து சத்யராஜ் மற்றும் சரத்குமார் ஆகியோரின் ஆஸ்தான நாயகியாகி அவர்களுடன் நடித்தார்.

‘ஏய்’, ‘இங்கிலீஷ்காரன்’, ‘சாணக்யா’, ‘கோவை பிரதர்ஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

ரசிகர்களை இவர் மச்சான்ஸ் என அன்புடன் அழைப்பது வழக்கம்.

பரத்துடன் இவர் இணைந்து நடித்துள்ள ‘பொட்டு’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

அண்மையில் கமல் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் நடிகை ரைசா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அந்த வீடியோவில் “நமீதா மற்றும் வீர் இருவரும் திருமணம் செய்யவுள்ளார்கள். இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ பதிவில் நமீதா பேசியிருப்பதாவது…

நானும் வீரேந்திராவும் நவம்பர் 24-ம் தேதி திருமணம் செய்யவுள்ளோம். உங்களது அனைவருடைய அன்பும், ஆதரவும் வேண்டும். நன்றி மச்சான்ஸ்.

என நமீதாவும் பேசியுள்ளார்.

Namitha set to get married to Veerendra aka Veer on 24th Nov 2017

டான்சர் யூனியனுக்கு விஜய் வழங்கிய ரூ.15 லட்சம்

டான்சர் யூனியனுக்கு விஜய் வழங்கிய ரூ.15 லட்சம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijayபல நடிகர்களுக்கு பல திறமைகள் இருந்தாலும், ஒரு தனித்திறமைக்கு நாம் ஒரு நடிகரை குறிப்பிடுவோம்.

நடிப்புக்கு கமல், ஸ்டைலுக்கு ரஜினி, ஆக்சனுக்கு அர்ஜுன் என சொல்லுவோம்.

அப்படி டான்ஸ்க்கு என்று நாம் குறிப்பிடும் நடிகர் என்றால் அது நிச்சயம் விஜய்யாக மட்டுமே இருக்க முடியும்.

இந்நிலையில் தனக்கு மிகவும் பிடித்த நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ. 15 லட்சத்தை நன்கொடையாக கொடுத்திருக்கிறாராம் தளபதி.

சூர்யா-கார்த்தி இணையும் படம் பூஜையுடன் ஆரம்பமானது

சூர்யா-கார்த்தி இணையும் படம் பூஜையுடன் ஆரம்பமானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and karthiபிரபல நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் சூர்யா. இளைய மகன் கார்த்தி.

இவர்கள் இருவரும் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்தாலும் இதுவரை இணைந்து நடித்தது இல்லை.

கதை அமையும் போது இணைவோம் என தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இருவரும் பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்திற்காக இணையவுள்ளனர்.

இதில் கார்த்தி, சாயிஷா ஜோடியாக நடிக்க சூர்யா இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்பட சூட்டிங் இன்று பூஜையுடன் ஆரம்பமானது.

இந்த பூஜையில் சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், செளந்தரராஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

ரஜினியின் முடிவு தெரியாமல் கன்ப்யூஸாகும் கமல்

ரஜினியின் முடிவு தெரியாமல் கன்ப்யூஸாகும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and kamal haasanஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் நடித்துள்ள 2.0 படம் அடுத்த வருடம் 2018 ஜனவரி 26ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

ஆனால் 2.0 படம் சில காரணங்களால் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்து வருகின்றன.

எனவேதான் கமல் தன் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வரூபம் 2 படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்காமல் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

ஒருவேளை 2.0 படம் ஏப்ரலுக்கு தள்ளிப்போனால் ஜனவரியில் விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்யலாம் எனவும், ஒரு வேளை 2.0 படம் ஜனவரில் வெளியானால் தன் படத்தை ஏப்ரலில் வெளியிட கமல் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரே நாளில் 2.0-பேட்மேன் படங்கள் மோதல்; அக்‌ஷய்குமார் விளக்கம்

ஒரே நாளில் 2.0-பேட்மேன் படங்கள் மோதல்; அக்‌ஷய்குமார் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

akshay kumar with 2 point 0 teamஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக அக்‌ஷய்குமார் நடித்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை லைக்கா மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இப்படம் 2018 ஜனவரி 26ல் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு வந்த நிலையில் அக்‌ஷய்குமார் ஹீரோவாக நடித்துள்ள மற்றொரு படமான பேட் மேன் (PADMAN) என்ற படமும் இதே நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இவை இரண்டும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருப்பதால் இந்தியில் 2.0 படத்தை வெளியிடும்போது தியேட்டர்கள் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து PADMAN படத்தின் தயாரிப்பாளரும் நாயகனுமாக அக்‌ஷய்குமார் தன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…

2.0 படம் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை இப்படம் உறுதியாக ஜனவரியில் ரிலீஸ் ஆனால் என் படத்தை பின்னர் ரிலீஸ் செய்வேன்.

நான் தயாரிப்பாளர் என்பதால் என்னால் என் பட ரிலீஸை தள்ளி வைக்கமுடியும்.

ஆனால் 2.0 படம் ரிலீஸை ஷங்கர் மற்றும் லைக்கா நிறுவனம்தான் முடிவு செய்யும்.” என்று தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டிலும் 2.0 படம்… ரஜினி நாட்-அவுட்; அக்‌ஷய் அவுட்

கிரிக்கெட்டிலும் 2.0 படம்… ரஜினி நாட்-அவுட்; அக்‌ஷய் அவுட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2point0 movie promos in full swing even at Cricket match stadiumரஜினி, ஷங்கர், லைக்கா கூட்டணியில் உருவாகியுள்ள படம் 2.0,

இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என கூறப்பட்டு வரும் நிலையில் இப்படத்தின் புரோமோசனை வியக்கும் அளவில் செய்து வருகின்றனர் படத் தயாரிப்பு குழுவினர்.

ஹாலிவுட் ராட்சத பலூன், துபாய் நாட்டில் ஸ்கை டைவிங் என அசத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கிரிக்கெட்டிலும் இந்த விளம்பர யுக்தியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய, நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதியபோது, அதன் ஸ்கோர் போர்ட்டில் இது தொடர்பான விளம்பரங்கள் வருகின்றன.

அதிலும் ஒரு வீர்ர் அவுட் ஆனால் அக்‌ஷய் படத்தை போட்டுக் காட்டுவதும் நாட்அவுட் என்றால் ரஜினியின் படத்தை போட்டும் காட்டுகின்றனர்.

மேலும் Decision Pending இடத்தில் ரஜினியும் வில்லனும் மோதிக் கொள்வது போல் உள்ள டிசைனை போட்டுக் காட்டுகின்றனர்.

2point0 movie promos in full swing even at Cricket match stadium

2point0 promo in cricket

 

More Articles
Follows