BREAKING பாஜகவிலிருந்து விலகல்.. அண்ணாமலை மீது ஆதாரங்களுடன் புகார்.; காயத்ரி ரகுராம் அறிவிப்பு

BREAKING பாஜகவிலிருந்து விலகல்.. அண்ணாமலை மீது ஆதாரங்களுடன் புகார்.; காயத்ரி ரகுராம் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் பிரபலமாக இருக்கும் பல நடிகைகள் பாஜக கட்சியில் உறுப்பினர்களாக உள்ளனர்.

நடிகைகள் குஷ்பூ, நமீதா, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.

சமீப காலமாக காயத்ரி ரகுராம் மற்றும் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு இடையே மோதல்கள் நீடித்து வந்தன.

இந்த நிலையில் தற்போது பாஜக கட்சியில் இருந்து தான் முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார் நடிகை காயத்ரி.

காயத்ரி ரகுராம்

இது தொடர்பான அவரது பதிவில்

பாஜகவில் பெண்களுக்கு சம உரிமை இல்லை என குற்றச்சாட்டு. இத்துடன் பாஜக கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னிடம் உள்ள வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை போலீசிடம் சமர்ப்பித்து அண்ணாமலை மீது புகார் அளிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார் காயத்ரி.

காயத்ரி ரகுராம்

Gayathri Raghuram Announcement against for Annamalai

சினிமாவில் ரூ 3000 கோடி முதலீடு செய்யும் KGF – KANTARA பட நிறுவனம்

சினிமாவில் ரூ 3000 கோடி முதலீடு செய்யும் KGF – KANTARA பட நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கேஜிஎஃப் 1’, ‘கே ஜி எஃப் 2’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து, பான் இந்திய படைப்பாக அளித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் அதன் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், பார்வையாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, எதிர்கால திட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது….

“ ஹோம்பலே ஃபிலிம்ஸ் சார்பாக, எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் எங்கள் மீது அசைக்க முடியாத அன்பையும், ஆதரவையும் பொழியும் உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.

ஹோம்பலே ஃபிலிம்ஸ்

கடந்த ஆண்டு எங்களுக்கு சிறந்த ஆண்டாகவும், நிறைவானதாகவும் இருந்தது- இது உங்கள் அன்பு மற்றும் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது. அதற்காக மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்த நட்புறவு தொடரும் என்றும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இலக்குகளை எட்டுவோம் என்றும் நம்புகிறேன்.

சினிமா, வலிமையான பொழுதுபோக்கு ஊடகம் என்பது பழங்காலத்திலிருந்தே உள்ளது, அது அனைவராலும் பார்க்கப்பட்டு, உய்த்துணர்ந்து பாராட்டப்பட்டது.

ஹோம்பலே ஃபிலிம்ஸ்"

நேர்நிலையாகவோ அல்லது எதிர்நிலையாகவோ அதிர்வை ஏற்படுத்தியிருந்தாலும், அது நிம்மதி மற்றும் மகிழ்ச்சியின் மிகப்பெரிய ஊடகமாக இருந்து வருகிறது. இது நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் வலுவான சாட்சியாக இருந்து வருகிறது.

இதன் மூலம் நமது அடையாளத்தை உலகிற்கு பெரிய அளவில் வெளிப்படுத்தி வருகிறோம்.

பன்முகத்தன்மை கொண்ட நம் இந்தியாவிலுள்ள இளைஞர்களிடம் இருக்கும் பரந்த திறனை வெளிக்கொணர ஒரு வாய்ப்பை நமக்கு வழங்குகிறது.

இந்த புதிய ஆண்டை நாங்கள் தொடங்கும்போது, நீடித்த நினைவாற்றலைக் கொண்டிருக்கக் கூடிய மற்றும் உங்கள் மீது அழியாத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆழ்ந்த அனுபவத்துடன், அழுத்தமான உள்ளடக்கத்தை தயாரிக்கவிருப்பதாக உறுதியளிக்கிறோம்.

இந்த ஆர்வத்தை மனதில் கொண்டு, எதிர் வரும் 5 ஆண்டுகளில் 3000 கோடி ரூபாயை முதலீடு செய்வோம் என்று உறுதியளிக்கிறோம்.

ஹோம்பலே ஃபிலிம்ஸ்

அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வளமான புத்தாண்டு வாழ்த்துக்கள்!” என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதனிடையே ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது ‘பாகுபலி’ புகழ் நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில், ‘கே ஜி எஃப்’ புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ எனும் திரைப்படத்தையும், தமிழில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து வரும் ‘ரகு தாத்தா’ என்ற படத்தையும், இயக்குநரும், நடிகருமான பிரித்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் ‘டைசன்’ எனும் திரைப்படத்தையும், ‘சார்லி 777’ புகழ் ரக்ஷித் ஷெட்டி இயக்கத்தில் ‘ரிச்சர்ட் ஆண்டனி’ எனும் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோம்பலே ஃபிலிம்ஸ்

hombale Films is investing Rs.3000 crore in cinema

மம்மூட்டியின் மலையாள படத்தில் அறிமுகமாகும் வினய் ராய்

மம்மூட்டியின் மலையாள படத்தில் அறிமுகமாகும் வினய் ராய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘உன்னாலே உன்னாலே’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையை வலுவாக மாற்றிய நடிகர் வினய் ராய்.

‘துப்பறிவாளன்’ மற்றும் ‘டாக்டர்’ ஆகிய படங்களில் எதிரியாக நடித்தார்.

இவர் கடைசியாக நயன்தாராவின் நடித்த ‘கனெக்ட்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த நிலையில், நடிகர் மம்முட்டியின் ‘கிறிஸ்டோபர்’ படத்தின் மூலம் மலையாளத்தில் வினய் ராய் அறிமுகமாகிறார்.

இப்படத்தில் வினய் ராய் நெகடிவ் ரோலில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.

மேலும், ‘கிறிஸ்டோபர்’ மலையாளத்தில் வினய் ராய் அறிமுகமான முதல் படம் மற்றும் போஸ்டர்களை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

கிறிஸ்டோபர்

Vinay Roy joins Mammootty’s ‘Christopher’

இயக்குனர் விஜய்க்கு ஐக்கிய அரபின் ‘கோல்டன் விசா’..!

இயக்குனர் விஜய்க்கு ஐக்கிய அரபின் ‘கோல்டன் விசா’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் நடிகர் விக்ரமுக்கும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ‘கோல்டன் விசா’ வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இயக்குனர் விஜய்க்கு ‘கோல்டன்’ விசாவை வழங்கியுள்ளது.

கோல்டன் விசா என்பது ஒரு நீண்ட கால வசிப்பிடமாகும், இது வெளிநாட்டினர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தேசிய ஸ்பான்சர் தேவையின்றி வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது மற்றும் அவர்களின் வணிகத்தின் முழு உரிமையையும் வழங்குகிறது.

மேலும், பார்த்தீபன், நாசர், ரஹ்மான்,வெங்கட் பிரபு, கமல்ஹாசன், அமலா பால், த்ரிஷா மற்றும் ராய் லட்சுமி ஆகியோரும் கோல்டன் விசாவைப் பெற்றுள்ளனர்.

விஜய்

United Arab Emirates ‘Golden Visa’ for Director Vijay

இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தொகைக்கு விற்கப்பட்ட ‘சூர்யா 42’ ஹிந்தி உரிமை

இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தொகைக்கு விற்கப்பட்ட ‘சூர்யா 42’ ஹிந்தி உரிமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தனது புதிய படமான ‘சூர்யா 42’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

இது ஒரு கற்பனை சாகசக் கதை என்று கூறப்படுகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சூர்யா 13 வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூர்யா 42 படத்தின் ஹிந்தி தியேட்டர், சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை PEN ஸ்டுடியோஸின் ஜெயந்திலால் கடா 100 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார் என்பது இந்தியத் திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

‘Suriya 42’ Hindi rights alone sold for never before massive amount

சரத்குமாரின் ‘ஆழி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

சரத்குமாரின் ‘ஆழி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மேல்விலாசம்’, ‘அபோதிகாரி’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் மாதவ் ராமதாசன் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இயக்குநர் மாதவ் ராமதாசன் இயக்கும் படத்தில் நடிகர் சரத் குமார் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு ‘ஆழி’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

‘ஆழி’ படத்தை 888 புரொடக்ஷன்ஸ் மற்றும் செல்லுலாய்டு கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றன.

பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சரத் குமார் தாடியுடன், முகத்தில் தீவிரமான தோற்றத்துடன், கடலின் பின்னணியில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருவதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Sarathkumar’s ‘Aazhi’ first look poster release

More Articles
Follows