சினிமாவை விட அரசியலில்தான் ஆர்வம்.; திருப்பதியில் நடிகை நமீதா பேட்டி

சினிமாவை விட அரசியலில்தான் ஆர்வம்.; திருப்பதியில் நடிகை நமீதா பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனது ரசிகர்களை செல்லமாக மச்சான்ஸ் என்று அழைப்பவர் யார் என்றால் அது நமீதா தான்.

திருமண வாழ்க்கையில் செட்டிலான நமிதாவுக்கு இந்த 2022 வருடம் ஆகஸ்ட் மாதம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகை நமீதா தனது கணவர் வீரேந்திரசவுத்ரியுடன் திருமலைக்கு சென்றுள்ளார்.

நடிகை நமீதாவை கண்டதும் கோவில் முன் ரசிகா்கள் திரண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் நமீதா..

அப்போது அவர் பல்வேறு கேள்விக்கு பதில் அளித்தார்.

அந்த சமயத்தில்… ” தனக்கு சினிமாவை விட அரசியலில்தான் ஆர்வம் அதிகம்.” என தெரிவித்தார் நடிகை நமீதா.

பாஜக கட்சியில் நமீதா முக்கிய பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Myositis நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா.; ரசிகர்கள் பிரார்த்தனை

Myositis நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா.; ரசிகர்கள் பிரார்த்தனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தார்.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதனையடுத்து படங்களில் முழு கவனத்தை செலுத்தி நடித்தி வருகிறார் சமந்தா.

கடந்த வருடம் வெளியான ‘புஷ்பா’ படத்தில் சமந்தா ஆட்டம் போட்ட *ஊ…. சொல்றியா மாமா….* என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது

தற்போது சமந்தா கைவசம் யசோதா, சகுந்தலம், குஷி, அரேஞ்மெண்ட்ஸ் ஆஃப் லவ் என பட வாய்ப்புகள் உள்ளன.

இதில் யசோதா படம் வருகிற நவம்பர் மாதம் 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இதில் நடிகை சமந்தா வாடகைத் தாயாக நடித்துள்ளார். ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் சமந்தா. ஆனால் கடந்த சில மாதங்களாகவே அதில் எந்த பதிவும் பதிவிடாமல் இருந்து வந்தார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. மேலும் சமந்தாவுக்கு ஒரு புதிய வகையான நோய் இருப்பதாகவும் தகவல்கள் பரவியது.

இந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றியும் விவரித்துள்ளார்.

அதன்படி தான் Myositis என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி உள்ளார்.

விரைவில் இதிலிருந்து நலம்பெற்று திரும்பி வருவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள் சதந்தா நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ரியோ ராஜ் படப்பூஜையில் லோகேஷ் கனகராஜ்.; ஓ இதான் மேட்டரா.?

ரியோ ராஜ் படப்பூஜையில் லோகேஷ் கனகராஜ்.; ஓ இதான் மேட்டரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷன் சினிமா ஹவுஸ்ஸின் ரிச் இந்தியா டாக்டர் D. அருளானந்து தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று (30.10.2022) தொடங்கியது.

இந்த விழாவில் தமிழ்த் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நட்பின் அடிப்படையில் படத்தின் முதல் ஷாட்டை க்ளாப் போர்ட் அடித்து தொடங்கி வைத்தார்.

நடிகர் ரியோ ராஜ் கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கும் மேலாக இந்தப் படத்திற்காக நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் அர்ப்பணிப்புடன் வலம் வருகிறார்.

இந்தக் கதை உண்மையான அன்பு மற்றும் பல உணர்ச்சிகரமான தருணங்களை உள்ளடக்கியது ஆகும்.

இந்தப் படம் ஆண் மற்றும் பெண் இடையேயான காதல் மற்றும் உறவுகளில் மட்டும் கவனம் குவிக்காமல் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையேயான எல்லையற்ற அன்பு குறித்தும் பேசுகிறது.

நல்ல உணர்வைத் தரக்கூடிய வகையிலான அன்பு, குடும்பங்களின் பாசம் என இளைஞர்களும் பெற்றோர்களும் நிச்சயம் சேர்ந்து திரையரங்குகளில் பார்க்கக் கூடிய வகையிலான படமாகவும் திரும்பி போகும் போது நல்ல நினைவுகளைத் தரக்கூடியப் படமாகவும் இது அமையும்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தினை விஷன் சினிமா ஹவுஸ்ஸின் டாக்டர். டி. அருளானந்து (ரிச் இந்தியா டாக்டர் டி. அருளானந்து என்றும் அறியப்படுகிறார்) தயாரித்திருக்கிறார்.

‘மீசைய முறுக்கு’ படத்தில் உதவி இயக்குநராகவும், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய ஹரி ஹரன் ராம் இந்தப் படத்தை இயக்குகிறார்.

ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடிக்க மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா படத்தின் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

சார்லி, ’கோலமாவு கோகிலா’ படப்புகழ் அன்பு தாசன், ‘கனா காணும் காலங்கள்’ புகழ் ஏகன், எருமசாணி யூடியூப் புகழ் கெவின் ஃபெல்சன், ‘கோமாளி’, ‘வாத்தி’ படப்புகழ் ப்ரவீனா மற்றும் பலர் இந்தப் படத்தின் நடிகர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:
ஒளிப்பதிவு: ‘கண்மணி அன்போடு காதலன்’ இணையத்தொடர் புகழ் KG விக்னேஷ்,

எடிட்டிங்: ‘கண்மணி அன்போடு காதலன்’ இணையத்தொடர் புகழ் KG வருண்,
கலை: ’சத்யா’, ‘பீஸ்ட்’ படங்களில் அசோசியேட்டாக பணிபுரிந்த ABR,
இசை: ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ மற்றும் ‘பேச்சுலர்’ படப்புகழ் சித்து குமார்.

Rio Raj

போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஷங்கர் மருமகன் ரோஹித் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்

போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஷங்கர் மருமகன் ரோஹித் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆண்டு, 16 வயது சிறுமி, கிரிக்கெட் பயிற்சிக்காக சென்றிருந்தபோது, ​​சங்கரின் மருமகன் ரோஹித் உட்பட 5 பேர் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார். 5 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், ரோஹித் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

வலுவாக திரும்பி வந்து கிரிக்கெட்டுக்கு நியாயம் செய்வேன் . நான் விரும்பும் விளையாட்டை ஆதரித்த, அனைவருக்கும் நன்றி என்றார்.

விக்ரம் – ரஞ்சித் இணையும் ‘தங்கலான்’ பட சூட்டிங் அப்டேட்

விக்ரம் – ரஞ்சித் இணையும் ‘தங்கலான்’ பட சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் ‘தங்கலான்’.

ஞானவேல் ராஜா தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர்
நடிக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பு கடந்த 18 முதல் ஆந்திராவில் உள்ள கடப்பாவில் தொடங்கியது. கோலார் தங்க வயல் பின்னணி கதைக்களத்துடன் இந்த படத்தை உருவாக்கி வருகின்றனர்.

இதன் பின்னர் மதுரையில் இரண்டு வாரங்கள் படப்பிடிப்பை நடத்தி வந்த நிலையில் தற்போது சிவகங்கையில் நடத்தி வருகின்றனர்.

மீண்டும் ஆந்திராவில் இதன் அடுத்த கட்டப் படப்பிடிப்பை நடத்த உள்ளார் ரஞ்சித்.

இதனையடுத்து இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களில் ‘தங்கலான்’ படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Vikram Ranjiths Thangalaan shooting update

விஜய்சேதுபதியின் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படம் கிறிஸ்மஸ் ரிலீஸ் இல்லையாம்.!

விஜய்சேதுபதியின் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படம் கிறிஸ்மஸ் ரிலீஸ் இல்லையாம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என எந்த மொழியாக இருந்தாலும் தன் நடிப்பார் அனைத்து தரப்பு மக்களையிம் கவர்ந்து வருபவர் நடிகர் விஜய்சேதுபதி.

அதே வேளையில் ஹீரோ வேடம் என்றில்லாமல் வில்லன் வேடத்திலும் அசத்தி வருகிறார்.

இவர் ஹிந்தியில் ‘காந்தி டாக்ஸ்’ என்ற மௌனப் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

தற்போது ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் கத்ரினா கைஃபுடன் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இவர்தான் 3 தேசிய விருதுகளை வென்ற ‘அந்தாதூன்’ படத்தை இயக்கியவர்.

சைக்கோ திரில்லர் ஜானரில் பான் இந்தியா படமாக மெர்ரி கிறிஸ்துமஸ் உருவாகியுள்ளது.

இந்த படம் டிசம்பர் 23ம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போது ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளனர்.

அடுத்தாண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

மேலும், புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கலாம்.

கிறிஸ்துமஸை முன்னிட்டு டைகர் ஷெராப் நடித்துள்ள ‘கண்பத்’, ரன்வீர் சிங் நடித்துள்ள ‘சர்கஸ்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi starrer Merry Christmas release postponed

More Articles
Follows