நமீதா இருக்கும்போது அவர் கணவருக்கு எப்படி தான் மாலை போட மனசு வந்துச்சோ..? : பாக்யராஜ்

நமீதா இருக்கும்போது அவர் கணவருக்கு எப்படி தான் மாலை போட மனசு வந்துச்சோ..? : பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director bhagyarajஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா ஆசிர்வாதத்துடன் “அம்மை அப்பன் புரடக்ஷன்ஸ்” பெருமையுடன் வழங்க ஆக்ஷன் ஸ்டார் அதிரடி அரசு கதை , திரைக்கதை, வசனம் , பாடல்கள் எழுதி ஒளிப்பதிவு செய்து , இசையமைத்து இயக்கித் தயாரித்தும் இருக்கும் படம் “கபடி வீரன்”. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை , சாலிகிராமம் பிரசாத் லேப் ப்ரிவியூ திரையரங்கில் நடைபெற்றது, ஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா , தொழிலதிபர் தமிழ்செல்வன் , நடிகர் பானுச்சந்தர் ,அறிமுக நாயகி காயத்ரி உள்ளிட்ட இப்படக் குழுவினருடன் திரையுலக வி.ஐ.பிகள் கே.பாக்யராஜ் , ராதாரவி, ஜாகுவார் தங்கம் , நமீதா , ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் , விஜயமுரளி , பெரு துளசி பழனிவேல் … உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய திரைக்கதை மன்னன் இயக்குநர் நடிகர் கே.பாக்யராஜ் , நான் இப்பொழுது ஒரு பெரிய அதிர்ச்சியில் இருக்கிறேன். இங்கு வந்த போது அதிர்ச்சி இல்லை. மேடையில் கூப்பிடுவதற்கு முன் கீழே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அதிர்ச்சியில்லை , நமீதா வந்தபோது கூட அதிர்ச்சி இல்லை. மேலே வந்தபோதுக் கூட அதிர்ச்சி இல்லை , ஆனால் என் அருகே நமீதாவின் மச்சான்ஸ் அதாங்க , நமீதாவின் வீட்டுக்காரர் வீரா , மேடையில் என் அருகில் அமர்ந்த போது, பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டேன். காரணம், என்னவென்று யாருக்காவது தெரியுமா? வேறொன்றுமில்லை, நமீதாவின் மச்சான்ஸ் வீரா., என்னிடம் இந்த மேடையில் அருகில் அமர்ந்து பேசும் போது , மலைக்கு மாலை போட்டுக் கொண்டு விரதம் இருக்கிறேன் . அடுத்த மாசம் தான் கோயிலுக்கு போறேன் என்ற போது எனக்குஅதிர்ச்சி ஆகிவிட்டது .எப்படி ? இப்படி ? கஷ்டமில்லே ..? முடியாதே , ரொம்ப கஷ்டமாச்சே! இப்படி ,ஒரு அழகிய மனைவியை அருகில் வைத்துக் கொண்டு நாள் கணக்கில் விரதமிருப்பது ரொம்ப கஷ்டமாச்சே … முடியாதே ….என யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். அந்த யோசனையே ,பெரிய அதிர்ச்சி ஆகிவிட்டது. அதனால இங்கு , வந்ததிலிருந்து வீராவை ஆச்சர்யமாக பார்த்து வருகிறேன்… அந்த அதிர்ச்சி ஆச்சர்யத்தில் இருந்து மெல்லத் தான் மீள முடியும் .எனவே வீராவிற்கு முதல்ல என் வணக்கத்தை தெரிவிச்சுக்கிறேன். அப்படின்னு சொல்லிட்டு ., இதே சீக்குவன்ஸ் என் ஒரு படத்துலக் கூட இருக்கும். நமீதா மாதிரி ஒரு பெண்மணி அந்தப் படத்துல சும்மா தேரு மாதிரி வருவாங்க வயசான ரெண்டு டிக்கெட்டுங்க அந்தம்மா கிராஸ் ஆகற வரைக்கும் அப்படியே பார்த்துட்டு இருப்பாங்க, அப்புறம் , அவங்க குள்ளாற ., எப்படிய்யா ? இப்படி ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி , விட்டுட்டுட்டு அவன் துபாய்ல போய் கிடக்குறான் ? எப்படிய்யா அவனால முடியுது ? நம்மளை எல்லாம் பக்கத்து ஊருல வேலைக்காக கொண்டு போய்விட்டாக் கூட மதியம் சாப்பாட்டிற்கோ ., இல்லை இராத்திரி சாப்பாட்டிற்கோ வீட்டிற்கு வந்துடுவோம் … அவன் எப்படி வருஷ கணக்கில துபாய்ல போய் கிடக்குறான் ? என தங்களுக்குள் ஆராய்ச்சியாக பேசிப் பாங்க … அது அந்தப் படத்து சீனுக்காக வச்சேன். இங்க இவரு மாலை போட்டு வந்து உட்கார்ந்து இருக்கிறதை பார்த்ததும் எனக்கு அந்த சீன் ஞாபகம் மைன்டுக்கு வந்துடுச்சி .

படத்தோட தயாரிப்பாளர் ஏலகிரி அம்மாவுக்கும் , படத்துல , இது அதுன்னு இல்லாம எல்லா பொறுப்புகளையும் எடுத்து தன் தோளில் போட்டுட்டு இருக்கிற நாயகர் அரசு ,அதிரடி அரசு., அவர் கூட ஒர்க் பண்ணிய எல்லோருக்கும் என் வணக்கம் ,வாழ்த்துகள். அப்புறம் இந்தப் படத்தோட பைட் மாஸ்டரையும் பாராட்டணும். இங்க போட்டு காட்டின சீன்களை வச்சி பார்க்கிறப்போ ., படம் முழுக்க ஒரே ஆக்ஷனா தான் மெயினா இருந்தது…. நடிகர்அதிரடி அரசு அதை சிறப்பாகவே செய்திருக்கிறார். அதே மாதிரி டான்ஸ் மாஸ்டரையும் பாராட்டி சொல்லணும்.அவரு ஒரு வேலை பண்ணி யிருந்தார் .என்னன்னா ., எனக்கு வாரிசா ஆகிட்டாரு … எப்படின்னா ? பொதுவா நான் டான்ஸ் ஆடினா ., எக்சர்சைஸ் மாதிரி இருக்குன்னு சொல்லுவாங்க … அவரு எக்சசைஸையே டான்ஸ் ஆக்கிட்டாரு … ரொம்பவே கிரியேட்டீ விட்டியா ., ஹீரோ கை காலை அப்படி இப்படி அசைக்க சொல்லி ., அதற்கு ஏற்ற மாதிரி பீஜியத்தையும் , மியூசிக்கையும் சிங்க் பண்ணி பாட்டு காட்சிகளை அழகா அமைச்சிருக்கிறார் பாராட்டுகள். ஆனா ., பாட்டு எழுதியிருக்கிற இந்தப் படத்தின் எல்லாமுமான அதிரடி அரசு பாட்டு எழுதும் போது கொஞ்சம் யோசிச்சு எழுதனுங்க .., என்னன்னா , காயத்ரி பாடும் போது “நான் பார்த்த ஆண்களிலேயே நீ வித்தியாசமானவன் … ” அப்படின்னு இருந்துச்சு. பொம்பளைபாடும் போது அப்படி எழுதக் கூடாது அது கேட்டதும் எனக்கு ‘கருக்’குன்னு இருந்துச்சு.
“ஆண்களில் நீ வித்தியாசமானவன்னு இருக்கலாம் .. “. அதுவரைக்கும் ஓ.கே . ஹீரோயின் பேரு டேமேஜ் ஆகுற மாதிரி எழுதக் கூடாது புதுசா பாட்டு எழுத வந்திருக்கீங்க … இனி பார்த்து எழுதுங்க . என்றவாறு பேசினார்.

அவருக்கு முன்னதாக பேசிய நடிகர் டத்தோ ராதாரவி ., நான் நிறைய அட்வைஸ் பண்ணுவேன். ஆனா ,யாரும் கேட்கறதில்லே .இங்க வந்து இருக்கிற பவர் ஸ்டார் சீனிவாசன் ., ஹீரோவா நடிக்கப்போறேன், படம் தயாரிக்கப் போறேன்னப்போ வேண்டாம், காமெடியனா நடிங்க நல்லா இருக்கும்னு எவ்ளவோ சொன்னேன் கேட்கலை … எப்பவுமே நல்லது சொன்னா கேட்க மாட்டாங்க .அதுல சீனிவாசன் ஒரு முக்கியமான ஆளு தேவை இல்லாத பிரச்சினையில எல்லாம் சிக்கி மீண்டு வந்து இப்போ காமெடியனா வலம் வந்துட்டு இருக்கார். காமெடி நடிகரா வளர்ந்துட்டு இருக்கார். இதைத் தான் நான் அப்பவே சொன்னேன் அவரு கேட்கலை. அதனால சில இடங்கள்ல என்னன பார்க்கம கூட போயிடுவார். ஆனா நான் விடமாட்டேன். நமக்கு எல்லாமே பேஸ் டூ பேஸ் தான். சீனிவாசனை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் இதை பேசுறேன். அவரு ரொம்ப நல்ல மனசு உடையவர். அவரு ஏமாத்திட்டாருன்னு பல பேரு புகார் சொல்றாங்க .ஏன் ஏமாந்திங்கன்னு யாராவது திருப்பி கேட்கறீங்களா ? அதே மாதிரி ,நம் சினிமா குடும்பத்தில் யாருக்காவது ஏதாவது என்றாலும் நான் தான் முதல் ஆளாக நிற்பேன். நடிகர் விஷாலிடம் கூட போனில் ஏதாவது முக்கிய பிரச்சினை என்றால் அவ்வப்போது பேசுகிறேன். சிலர் தூண்டி விட்டு ஓடி விடுவார்கள் நான் அப்படி கிடையாது. ஓடி ஒளிவது எனக்குப்பிடிக்காது.

பாருங்க ., சீனிவாசனை பத்திப்பேசினா இவ்ளோ பெரிய டாபிக்ல வந்து நிக்குது.

அது போகட்டும் இந்தப் படத்தின் தயாரிப்புக்கு உறுதுணையா இருந்து , இந்தப்படம் சிறப்பா வர காரணமாயிருந்து இங்க,ஏலகிரி சக்தி அம்மா வந்திருக்காங்க .அந்த அம்மாவை வணங்குங்க ., எல்லா அம்மாவையும் வணங்குங்க .குறிப்பா உங்க அப்பா அம்மாவை வணங்க மறந்துடாதீங்க … அவங்களை கைவிட்டுடாமல் கடைசி வரை கூட வச்சுக்குங்க ., நடிகர் திலகம் வீட்டு பெயர் , அன்னை இல்லம். நடிகவேள் ,கலைஞர், ,புரட்சித் தலைவர் , புரட்சித் தலைவி … அவ்வளவு ஏன் வீடு வரை எல்லோரது வீடுகளுக்கும் எங்களது அம்மாக்களின் பெயரை தான் வைத்திருக்கிறோம் என்றால் பாருங்கள். எனவே நீங்களும் உங்களது பெற்றோரை கைவிட்டு விடக் கூடாது எனக் கேட்டு கொள்கிறேன். என பேசி அமர்ந்தார்.

இவ்விழாவில் ,ஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா , தொழிலதிபர்தமிழ்செல்வன் , நடிகர் பானுச்சந்தர், இப்பட இயக்குனர் -நாயகர் அதிரடி அரசு , அறிமுக நாயகி காயத்ரி ..ஜாகுவார் தங்கம் , நமீதா , வீரா , ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் , விஜயமுரளி , பெரு துளசி பழனிவேல் … உள்ளிட்டோரும் பேசினர்.

முன்னதாக ,டத்தோ ராதாரவி ” கபடி வீரன்” படத்தின் பாடல்கள் ஆடியோவை வெளியிட திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியை தொகுப்பாளர் அர்ச்சனா அழகான தமிழில் தொகுத்து வழங்க ., பி.ஆர்.ஓ ப்ரியா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரையும் வரவேற்று உபசரித்தனர்.

ஏவிஎம் தயாரிப்பில் சிங்கம் சூர்யாவை யானையாக மாற்றும் ஹரி

ஏவிஎம் தயாரிப்பில் சிங்கம் சூர்யாவை யானையாக மாற்றும் ஹரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and director hariசூர்யாவை வைத்து ‘ஆறு’, ‘வேல்’, ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’, ‘சிங்கம் 3’ என 5 படங்களை இயக்கியவர் ஹரி.

இந்நிலையில், ஆறாவது முறையாக இவர்கள் இணைகின்றனர்.

அப் படத்துக்கு ‘யானை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படத்தை, ஏவி.எம். புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

2014-ம் ஆண்டு ரிலீஸான ‘இதுவும் கடந்து போகும்’ படம்தான் ஏவி.எம். தயாரித்த கடைசிப்படம்.

5 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறது ஏவி.எம்.

‘என்.ஜி.கே.’ படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

அதன்பின்னர் ‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா.

அதன்பிறகே யானை படத்தில் நடிக்கிறார் சூர்யா.

பிரபல மேடை பேச்சாளர் இளம்பிறை மணிமாறன் கணவன் மணிமாறன் காலமானார் .நடிகர் சிவகுமார் இரங்கல் !!

பிரபல மேடை பேச்சாளர் இளம்பிறை மணிமாறன் கணவன் மணிமாறன் காலமானார் .நடிகர் சிவகுமார் இரங்கல் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakumarபிரபல மேடை பேச்சாளர் இளம்பிறை மணிமாறனின் கணவர் மணிமாறன் நேற்று காலமானார் .சுமார் ஓராண்டு காலம் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவர் நேற்று பகல் 12 மணிக்கு மறைந்து விட்டார். இந்த இழப்பு இளம்பிறை ஈடு செய்ய முடியாதது. மதுரையில் நேற்று மாலை 6 மணியளவில் மதுரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மணிமாறன் பற்றி நடிகர் சிவகுமார் கூறியது :-

தூத்துக்குடியில் உள்ள APC மஹாலக்ஷ்மி கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக இருந்து, பிறகு அதே கல்லூரியில் தாளாளராக ஓய்வு பெற்றவர் இளம்பிறை மணிமாறன் அவர்கள்.

இவர் தமிழ் இலக்கியங்களில் இராமாயணம், மகாபாரதம், பாகவதம், கந்தபுராணம், நாலாயிர திவ்ய பிரபந்தம், திருக்குறள் என்று அனைவற்றையும் கரைத்து குடித்தவர். கிட்டத்தட்ட 5000 மேடைகளில் இலக்கியங்கள் பற்றி உரையாற்றியிருக்கிறார்.

2009-ல் என்னுடைய வீட்டிற்கு வந்தார். நான் முழு கம்பராமாயணத்தையும் 2 மணி நேரம் 10 நிமிடத்தில் கூறினேன். அதைக் கேட்ட அவர் இதைப் பயிற்சி செய்ய எவ்வளவு நாள் ஆனது என்று கேட்டார்கள். ஒரு வருடம் என்றேன். நீங்கள் செய்தது அசுர சாதனை என்று பாராட்டினார். அதேபோல், மஹாபாரதம் பேசும்போதும் மேடையில் அமர்ந்து எனக்கு ஊக்கமளித்தார். அவரின் சாதனைகளுக்கு பின்புலமாகவும், தூணாகவும் இருந்தவர் தான் அவருடைய கணவர் மணிமாறன்.ஈடு செய்யமுடியாத அந்த மாமனிதரை இழந்து வாடும் அவரது மனைவி இளம்பிறை மணிமாறனுக்கும் , அவரது குடும்பத்துக்கும் ஆழ்ந்த வருத்தங்களையும் ஆறுதலையும் கூறிக்கொள்கிறேன் .

2 Attachments

பிரபல அரங்கில் வெளியடப்பட்ட “மே 22 – ஒரு சம்பவம்” படத்தின் போஸ்டர்

பிரபல அரங்கில் வெளியடப்பட்ட “மே 22 – ஒரு சம்பவம்” படத்தின் போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

may 22 sambavam first lookஅஹிம்சா புரோடக்ஷ்ன்ஸ் தங்களது தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படத்திற்கு “மே 22 – ஒரு சம்பவம்” எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

“மே 22 – ஒரு சம்பவம்” படத்தின் முதல் பார்வை போஸ்டர் 24 ஜனவரி அன்று ஸ்விட்சர்லாந்து, டாவோஸ்ஸில் உள்ள புகழ்பெற்ற உலக பொருளாதார மன்றத்தில் (World Economic Forum – WEF) வெளியிடப்பட்டது. உலக பொருளாதார மன்றம் (WEF) உலகளாவிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சுயாதீனமற்ற பொது நல அமைப்பு ஆகும்.

தமிழ்நாட்டில் பல சமுதாய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், “மே 22 – ஒரு சம்பவம்” படத்தின் முதல் பார்வை போஸ்டர் உலக பொருளாதார மன்றத்தில் வெளியிடப்பட்டது முக்கியதுவம் வாய்ந்தது.

இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் கோபால் மற்றும் தயாரிப்பாளர் நிருபமா சந்தோஷ் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். சந்தோஷ் கோபால் இயக்குனராக அறிமுகமான ஜல்லிகட்டு 5 -23 Jan 2017 விரைவில் வெளியாகவிருப்பது குறிப்படத்தக்கது.

“மே 22 – ஒரு சம்பவம்” சமீப காலங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சார்ந்த் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம்.

மே 22 – ஒரு சம்பவம் திரைப்படம் ஒரு முன்று படங்களின் தொடர்ச்சியாகும். இம்மாதிரி உலகில் இரண்டு இயக்குனர்கள் படங்களை இயக்கியுள்ளனர்.

முதலாவதாக சத்யஜித்ரே உலகின் மிக முக்கிய படமான அபு சன்சார், பதேர் பாஞ்சாலி, அபு டிரியாலஜி என்று முன்று படங்களை இயக்கினார். அடுத்ததாக போலாந்து இயக்குனர் ரெட், புளு, வொய்ட் என்று முன்று படங்களை டிரியாலஜியாக இயக்கினார்.

இந்த முறையில் ஜல்லிகட்டு 5 -23 Jan 2017, பசுமை வழிச்சாலை, மே-22 ஒரு சம்பவம் என முன்றும் மக்கள் போராட்டத்தை மையப்படுத்தி எடுத்துள்ளார் இயக்குனர் சந்தோஷ் கோபால்

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் சஸ்பென்ஸான கேரக்டரில் சமுத்திரக்கனி

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் சஸ்பென்ஸான கேரக்டரில் சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

samuthirakani in jj biopicமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக்கும் முயற்சியில் இயக்குநர் பாரதிராஜா & விஜய் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் தனித்தனியாக ஈடுபட்டுள்ளனர்.

இதில் Iron Lady என்ற தலைப்புடன் பர்ஷ்ட் லுக்கை வெளியிட்டார் பிரியதர்சினி. ஜெயலலிதா ஆக நித்யா மேனன் நடிக்கிறார்.

தற்போது விஜய் இயக்கவுள்ள ஜெயலலிதா படம் பற்றி தகவல்கள் வந்துள்ளன.

ஜெயலலிதா வேடத்தில் வித்யாபாலன் நடிக்க இருப்பதாக தகவல் வந்தன.

ஆனால் இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பும் தெரிவிக்கல்லை.

இந்நிலையில் முக்கியமான வேடத்தில் சமுத்திரக்கனி ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம்.

ஆனால், அது எந்த மாதிரியான கேரக்டர் என்பது சர்ப்ரைஸ். பட ரிலீசின் போதுதான் இந்த சர்ப்ரைஸ் உடையும் என கூறப்படுகிறது.

விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டதில்லை என்பதை அழுத்தமாக சொல்ல வரும் ‘வாண்டு’

விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டதில்லை என்பதை அழுத்தமாக சொல்ல வரும் ‘வாண்டு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vaanduஇயக்குநர் செல்வராகவனின் உதவியாளர் வாசன் ஷாஜி இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் முதல் திரைப்படம் “வாண்டு”. விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டதில்லை எனப் பெரியோர் சொல்வார்கள் அதை அழுத்தமாக சொல்லியிருக்கும் திரைப்படம் தான் வாண்டு.

இயக்குநர் படம் பற்றி கூறுகையில்

1971 ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதுதான் இந்தப்படம் என்றாலும் தற்கால இளைய தலைமுறைக்கு ஏற்றவாறு தற்காலத்தில் நடக்கும் கதையாகவே இருக்கும். சூதாட்டத்தில் ஜெயித்தவனுக்கும், தோற்றவனுக்கும் இடையே நடக்கும் நீயா நானா போராட்டம் தான் இப்படத்தின் விறு விறு கதை. வடசென்னை குப்பத்து மக்களின் இயல்பான வாழ்வு அவர்களது வீரம், அன்பு, சண்டை, பிரச்சனை என அனைத்தும் எந்த அரிதாரமும் இல்லாமல் இயல்பாக பதிவு செய்திருக்கிறேன். அதே நேரத்தில் ஒரு சினிமாவாக எந்த இடத்திலும் போரடிக்காமல் விறு விறு திரைக்கதையுடன் பரபரப்பான படமாகவும் இருக்கும் என்றார்.

எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் உருவாகியிருக்கும், இப்படம் வரும் பிப்ரவரி 8 முதல் ரீது ஷிவானி இன்ஃபோடெயிண்மைண்ட் உலகமெங்கும் 150க்கும் மேற்பட்ட திரை அரங்குகளில் வெளியிடுகிறது.

More Articles
Follows