சினிமாவுக்கு கருத்து சுதந்திரம் கிடையாதா? மெர்சல் விவகாரத்தில் நடிகர் சங்கம் அறிக்கை

சினிமாவுக்கு கருத்து சுதந்திரம் கிடையாதா? மெர்சல் விவகாரத்தில் நடிகர் சங்கம் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nadigar Sangam support in Mersalவிஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தில் பெற்றுள்ள ஜிஎஸ்டி வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள்.

இதனால் தமிழக அரசியலிலும் சினிமா உலகிலும் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்த சர்ச்சை தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தற்போது ‘மெர்சல்’ திரைப்படத்தில் வரும் கருத்துகள் வசனங்கள் அனைத்தும் சில அரசியல் அமைப்புகள் பத்திரிகைகள் ஊடகங்கள், இணைய தளங்கள், சமூக வலைதளங்கள் மூலமாகவும் விமர்சித்து வருபவை தான்.

ஒரே நாட்டில் அவர்களுக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் சினிமா ஊடகத்திற்கும் கலைஞர்களுக்கும் கிடையாதா?

மத்திய அரசால் நிர்வாகிக்கப்படும் தணிக்கைக்குழு அதற்கான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அனுமதியளித்த பின் வெளியிடப்படும் திரைப்படங்களை தனி நபர்களின் விமர்சனங்களுக்காக மாற்றியமைப்பதோ அல்லது திரையிடாமல் தடுப்பதோ கருத்து சுதந்திரத்தை கேள்விக் குறியாக்குகிறது.

தணிக்கை செய்யப்பட்டு வெளி வந்த ‘மெர்சல்’ திரைப்படத்தில் உள்ளவைகளை யாருக்காகவும் நீக்கக் கூடாது என்பதும் இது போன்ற செயல்கள் பிற்காலத்தில் பல பெரிய பிரச்சினைகள் உருவாக காரணமாகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nadigar Sangam support in Mersal

ரஜினிக்காக ரூ.12 கோடி செலவில் செட் அமைத்த ஷங்கர்

ரஜினிக்காக ரூ.12 கோடி செலவில் செட் அமைத்த ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shankar spend Rs 12 crores for Rajini song in 2point0சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்‌ஷய்குமார் ஆகியோர் நடித்துள்ள 2.0 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, லைக்கா நிறுவனம் ரூ. 400 கோடி செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது.

சில தினங்களுக்கு முன் இப்படத்தில் இடம் பெறவுள்ள ஒரு பாடலை படமாக்கவுள்ளதாக ஷங்கர் தெரிவித்திருந்தார்.

தற்போது அந்த பாடலுக்கான செலவு பற்றிய தகவல்கள் வந்துள்ளது.

கிட்டதட்ட ரூ. 12 கோடி வரை அந்த பாடலுக்கு செலவு செய்திருக்கிறார்களாம்.

இப்பாடலுக்கு கலை இயக்குநர் முத்துராஜ் பணியாற்றியிருக்கிறார்.

வருகிற அக்டோபர் 27ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நடைபெறவுள்ளது.

Shankar spend Rs 12 crores for Rajini song in 2point0

மெர்சலுக்காக மக்களும் குரல் கொடுக்கனும்.. விஜய்சேதுபதி

மெர்சலுக்காக மக்களும் குரல் கொடுக்கனும்.. விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay vijay sethupathiவிஜய், ஏ.ஆர்.ரஹ்மான் அட்லி, தேனாண்டாள் பிலிம்ஸ் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள மெர்சல் படம் கடந்த தீபாவளியன்று வெளியானது.

இப்படத்தில் இடம் பெற்ற வசனங்கள் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள்.

சமூக வலைதளங்களில் படத்தின் காட்சிகளை நீக்கக் கூடாது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாக விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது…

கருத்துச் சுதந்திரம் இல்லாமல் இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்லாதீர்கள்.

மெர்சலுக்காக மக்கள் குரல் கொடுக்கும் நேரம் இது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Vijay Sethupathi supports Mersal movie in GST dialogue issue

மெர்சல் பட பிரச்சினை; விஜய்க்கு ஆதரவாக தயாரிப்பாளர் சங்கம்

மெர்சல் பட பிரச்சினை; விஜய்க்கு ஆதரவாக தயாரிப்பாளர் சங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilnadu Producer Council supports Vijay in Mersal issue‘மெர்சல்’. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வசனங்களை நீக்காவிட்டால் வழக்கு தொடரப் போவதாக அந்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இதனால் தமிழ் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் வெளிவந்துள்ள ‘மெர்சல்’ திரைப்படம் தொடர்பாக பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களிலும், தேசிய அளவிலும் வந்திருப்பது அனைவரும் அறிந்ததே.

ஒரு திரைப்படம் கற்பனைக் கதையாக வரும் போதே, அக்கதைச் சார்ந்த DISCLAIMER போடப்படுகிறது.

அதுமட்டுமன்றி, மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தணிக்கை குழுவால் யாருக்கும் எவ்வித பாதிப்புமில்லாத ஒரு படம் என்று சான்றிதழ் கொடுக்கிறார்கள்.

அந்தச் சான்றிதழை முன்வைத்து மட்டுமே ஒரு திரைப்படத்தை வெளியிடுகிறோம். அச்சான்றிதழ் வாங்கும் பணிகள் எவ்வளவு கடினமானது என்பதை அதே படத்தின் மூலமாகவே மக்களுக்கு தெரியவந்ததுள்ளது.

இவ்வளவு விஷயங்களைத் தாண்டி, பல கோடி ரூபாய் முதலீடு, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரின் கடின உழைப்போடு ஒரு படத்தை தயாரித்து வெளியிடுகிறோம்.

அப்படத்தின் தணிக்கை முடிந்த பிறகும், காட்சியை நீக்க வேண்டும் என்பது ஜனநாயக முறைப்படி தவறான விஷயமாகும். இதனை தயாரிப்பாளர் சங்கம் ஒரு போதும் ஆதரிக்காது.

ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் பலருக்கும் பலவிதமான கருத்துகள் எழலாம். அக்கருத்துக்களை பகிர்வதோடு இருக்கலாமே தவிர, தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தின் காட்சிகளை நீக்கச் சொல்வது தவறு.

தணிக்கை சான்றிதழ் செய்யப்பட்ட படத்தை, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வற்புறுத்தலுக்காக மீண்டும் தணிக்கை செய்வது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Producer Council supports Vijay in Mersal issue

பாக்ஸ் ஆபிஸை மெர்சலாக்கும் வசூல் மன்னன் விஜய்

பாக்ஸ் ஆபிஸை மெர்சலாக்கும் வசூல் மன்னன் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mersal movie box office collectionவிஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான படம் மெர்சல்.

இப்படம் வெளியான அக். 18ஆம் தேதி சென்னையில் மட்டும் ரூ 1.5 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

தற்போது மூன்று நாட்களை கடந்துள்ள நிலையில் சென்னையில் மட்டும் மொத்தம் 4 .20 கோடியை அள்ளியுள்ளது.

அதே நேரத்தில் சென்னையில் 2 மால்களில் எந்த படத்தையும் திரையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதல் நாளில் மட்டும் சுமார் 32.5 கோடி ரூபாயை ஈட்டியுள்ளதாகவும்,

இரண்டாவது நாளில் 40 கோடியை தொட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

இதுவரை மூன்று நாள்களில் தமிழகளவில் ரூ. 53 கோடியை கடந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் உலகளவில் ரூ. 85 கோடியை நெருங்கிவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

தற்போது மெர்சல் படத்தை பாஜ கட்சி எதிர்த்து வருவதால், படத்தில் அப்படி என்னதான்? இருக்கிறது என்ற ஆர்வம் பொதுமக்களிடையே அதிகரித்து வருவதால், இன்னும் இதன் வசூல் எகிறும் எனத் தெரிகிறது.

இந்த வார முடிவில் ரூ. 100 கோடி வசூலை மெர்சல் தொட்டுவிடும் என உறுதியாக நம்பலாம்.

உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் 3 நாட்களில் 100 கோடியை எட்டிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Mersal movie box office collection

கருத்து சுதந்திரமே சிறந்த ஜனநாயகம்… விஜய்யை ஆதரிக்கும் ஜிவி.பிரகாஷ்

கருத்து சுதந்திரமே சிறந்த ஜனநாயகம்… விஜய்யை ஆதரிக்கும் ஜிவி.பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay gv prakashமெர்சல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு சந்தித்த பிரச்சினைகளை விட தற்போது ரிலீஸ் ஆகி அதைவிட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

படத்தில் விஜய் பேசி இடம்பெற்ற டிஜிட்டல் இந்தியா மற்றும் ஜிஎஸ்டி வசனங்களுக்கு பாஜக-வினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

பாஜக.வை சேர்ந்த எச்.ராஜா சென்சார் அதிகாரிகளை கடுமையாக கண்டித்துள்ளார்.

இதற்கு சென்சார் அதிகாரிகளும் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, சர்ச்சைக்குள்ளான காட்சிகளை நீக்க சம்மதம் தெரிவித்துள்ளார் மெர்சல் தயாரிப்பாளர் முரளி.

இந்நிலையில் விஜய் ரசிகரும் நடிகருமான ஜிவி.பிரகாஷ் தன் ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

G.V.Prakash Kumar‏Verified account @gvprakash
முழு கருத்து சுதந்திரமே மிக சிறந்த ஜனநாயகம்! இந்தியா மிக சிறந்த ஜனநாயக நாடு என்பதில் பெருமை கொண்டிருக்கிறேன். We don’t need recensor #mersal
என பதிவிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

More Articles
Follows