நவீன்-ஆனந்தி இணையும் *அலாவுதீனின் அற்புத கேமரா*

Moodar Koodam Naveens next is Alaudhinin Arputha Camera‘மூடர் கூடம்’ படத்தை இயக்கி நடித்தவர் நவீன்.

மியூஸிக்கல் பிளாக் காமெடிப் படமாக வெளியான இது, பெரும்பாலானவர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

‘மூடர் கூடம்’ படத்துக்குப் பிறகு ‘கொளஞ்சி’ என்ற படத்தைத் தயாரித்தார். தனராம் சரவணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சமுத்திரக்கனி – சங்கவி இருவரும் பிரதான வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் தயாராகி பல நாட்கள் ஆனாலும், இன்னும் வெளியாகவில்லை.

இவர் அடுத்து ஒரு படத்தை இயக்கி நடித்து வருகிறார். ‘கயல்’ ஆனந்தி நாயகியாக நடித்து வருகிறார்.

முழுவதும் வெளிநாட்டில் படமான இந்தப் படத்தில், பிக் பாக்கெட் அடிப்பவராக நடித்துள்ளார் ஆனந்தி.

கே.ஏ.பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, நடராஜன் சங்கரன் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார்.

படத்தலைப்பு வைக்காமல் இதுவரை சூட்டிங் நடைபெற்ற நிலையில் தற்போது ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

இதன் டைட்டில் லுக்கை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.

மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை விரைவில் வெளியிட இருக்கிறார்களாம்.

இந்தப் படத்துக்குப் பிறகு, விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் நவீன். ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்தை, அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார்.

Moodar Koodam Naveens next is Alaudhinin Arputha Camera

Overall Rating : Not available

Latest Post