ஆம்பளையா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு.? எடப்பாடி மீது எகிறிய இயக்குனர் நவீன்

ஆம்பளையா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு.? எடப்பாடி மீது எகிறிய இயக்குனர் நவீன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு பகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

எனவே காங்கிரஸ் அதிமுக நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சியினர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது பிரச்சாரத்தில்.. திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

இத்துடன் வாக்காளர்களை திமுகவினரை அடைத்து வைத்திருப்பதாக குற்றம்சாட்டினார்.

அது குறித்து பேசும்போது.. ‘ஆம்பளையாக இருந்தால் வாக்காளர்களை வெளியே விட்டு அவர்களை சந்தித்து வாக்கு சேகரியுங்கள்’ என கூறினார். இந்த கருத்து பெரும் சர்ச்சையானது.

இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான நவீன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது கருத்தில்.., ‘ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா?

நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இன்னும் எத்தனை காலம் இந்த stereotype வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவு படுத்தும் செயல்’ என கருத்து தெரிவித்துள்ளார்.

Director Naveen voice against edappadi palanisamy

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் மாவீரனின் மெகா விருந்து

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் மாவீரனின் மெகா விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதில் நாயகியாக ஷங்கரின் மகள் அதிதி நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் படத்தில் இடம்பெறும் முதல் பாடலை சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான பிப்ரவரி 17ஆம் தேதி அன்று வெளியிடுவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மண்டேலா திரைப்படத்திற்கு இசையமைத்த பரத் ஷங்கர் இந்த திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

மண்டேலா படம் போலவே அரசியல் சார்ந்த கதையாக படம் உருவாக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

‘மாவீரன்’ படத்தை கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Mega treat on sivakarthikeyan’s birthday

புதுமுகத்தை நாயகனாக வைத்து படம் எடுக்க மாட்டாங்க..; ஃபீலிங்ஸ் பிரதீப்

புதுமுகத்தை நாயகனாக வைத்து படம் எடுக்க மாட்டாங்க..; ஃபீலிங்ஸ் பிரதீப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நாயகனாக நடித்த ‘லவ் டுடே’ பட 100வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது…*

“ஒரு புதுமுகத்தை நாயகனாக வைத்து திரைப்படம் எடுக்க பலர் முன் வர மாட்டார்கள். ஆனால் AGS அதற்கு முன் வந்தார்கள். அதோடு அவர்கள் எனக்கு இந்தப்படத்தின் உருவாக்கத்தில் பெரும் சுதந்திரம் தந்தார்கள். அதற்கு ஒட்டுமொத்த AGS குழுவிற்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

இந்த படத்தின் இசையை பொறுத்தவரை யுவன் சாரிடம், நிறைய விஷயங்களில் கூடுதலாக, ஈடுபாட்டுடன் இயங்கினேன். யுவன் சார் மிக அற்புதமான இசயை தந்தார். அடுத்ததாக எனது தொழில்நுட்பக்குழு, அவர்களது பணி அளப்பறியது. அவர்களும் நடிகர்களும் இந்தப் படத்தை மேம்படுத்தினார்கள்.

அதன் பிறகு மக்கள் கொடுத்த ஆதரவில் தான் இந்த படம் பெரிய படமாக மாறியது. இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி கொள்கிறேன்.” என்றார்.

லவ் டுடே

Pradeep emotional speech at Love Today 100 days success event

https://youtube.com/shorts/v_n7ol6V0Ic?feature=share

விஜய்க்கு பிறகு ஏஜிஎஸ்-க்கு பிரதீப் அமைத்து கொடுத்த வெற்றி மேடை

விஜய்க்கு பிறகு ஏஜிஎஸ்-க்கு பிரதீப் அமைத்து கொடுத்த வெற்றி மேடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நாயகனாக நடித்த ‘லவ் டுடே’ பட 100வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகை இவானா பேசியதாவது…*

“இந்த படத்தின் வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த வெற்றி விழா மேடையில் நான் இருப்பது என் வாழ்கையின் மிகமுக்கியமான தருணம்.

இயக்குநராகவும், நடிகராகவும் பிரதீப் ஒரு மிகச்சிறந்த மனிதர். இந்த படக்குழு கொடுத்த அரவணைப்பு எனது வாழ்கையின் மிகமுக்கியமான ஒன்றாக மாறியிருக்கிறது. என்னுடன் இந்த படத்தில் பணிபுரிந்தத அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்.” என்றார்.

இவானா

*கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியதாவது…*

“பிகில் திரைப்படத்திற்கு பிறகு இந்த மேடை பெரிய மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது. லவ் டுடே கதையை கேட்கும் போதே நம்பிக்கையை கொடுக்க கூடிய வகையில் இருந்தது. அது தான் படத்தின் சிறப்பு என்று நினைக்கிறேன்.

கொரோனாவிற்கு பிறகு பல திரைப்படங்கள் வெளியாயின. லவ்டுடே போன்ற பெரிய ஹீரோ இல்லாத படத்தை எப்படி வெளியிட போகிறீர்கள் என்று பலர் கேட்ட போது, இயக்குநர் முழு நம்பிக்கையுடன் இருந்தார். இந்த வெற்றி மிகப்பெரிய நம்பிக்கையை தந்துள்ளது. இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.”

லவ் டுடே

After Bigil we got success stage for Love Today says AGS team

அதுவும் 100.. இதுவும் 100..; ‘லவ் டுடே’ 100 நாள் விழாவில் ஐசரி கணேஷ் பேச்சு

அதுவும் 100.. இதுவும் 100..; ‘லவ் டுடே’ 100 நாள் விழாவில் ஐசரி கணேஷ் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நாயகனாக நடித்த ‘லவ் டுடே’ பட 100வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில்… Dr ஐசரி கணேஷ் பேசியதாவது…*

சினிமாவில் பல ஆண்டுகளாக 100 நாள் நிகழ்ச்சி இல்லை. AGS இப்போது அதை செய்து இருக்கிறார்கள். அதில் நான் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. பிரதீப் உடைய முதல் படத்தை நான் தயாரித்ததில் மிகவும் மகிழ்ச்சி. அதுவும், நூறு நாள், இதுவும் நூறு நாள், இதுபோன்று தொடர்ந்து அவர் பல வெற்றிகளை குவிக்க வேண்டும். பிரதீபிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.” என்றார்.

லவ் டுடே

Pradeep gave double 100 days movies says Isari Ganesh

‘லவ் டுடே’ பட கதையை கேட்டதுமே ஹிட்டுன்னு தெரியும்.; யூகித்த யுவன்

‘லவ் டுடே’ பட கதையை கேட்டதுமே ஹிட்டுன்னு தெரியும்.; யூகித்த யுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நாயகனாக நடித்த ‘லவ் டுடே’ பட 100வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில்… இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியதாவது…*

“இந்த படத்தின் இசையை பொறுத்தவரை எனது குழுவிற்கும், பாடகர்களுக்கும், பாடலாசிரியர் பிரதீபிற்கும் எனது நன்றி. இந்த படத்தின் கதையை கேட்டவுடன், இது ஹிட் என்று நான் முடிவுக்கு வந்துவிட்டேன். இந்த படம் AGS-க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இருக்கிறது, அதற்கு வாழ்த்துகள். இதுபோன்ற பல வெற்றிகளை அவர்கள் அடைய வேண்டும் அதற்கு என்னுடைய வாழ்த்துகள்.” என்றார்.

Once heard Love Today story i knew its hit says Yuvan

More Articles
Follows