அப்துல் கலாம் புத்தக பெயர் படமாகிறது..; 2 விஜய் நடிக்கும் பர்ஸ்ட் லுக்கை கமல் வெளியிட்டார்

அப்துல் கலாம் புத்தக பெயர் படமாகிறது..; 2 விஜய் நடிக்கும் பர்ஸ்ட் லுக்கை கமல் வெளியிட்டார்

agni siragugalமூடர் கூடம்’ படத்தில் நடித்து இயக்கி தயாரித்தவர் நவீன்.

இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் தற்போது அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இதில் 2 விஜய்கள் இணைந்துள்ளனர். அதாவது ஒருவர் விஜய் ஆண்டனி. மற்றொருவர் அருண் விஜய்.

ஷாலினி பாண்டே நாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, நாசர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அப்துல் கலாம் எழுதிய புத்தகத்தின் பெயரான “அக்னிச் சிறகுகள்” என தலைப்பிட்டுள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று மாலை நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் வெளியிட்டார்.

சிம்பு ரசிகர்களுக்கு செம தீபாவளி ட்ரீட்..!

சிம்பு ரசிகர்களுக்கு செம தீபாவளி ட்ரீட்..!

simbuபவன் கல்யாண் நடித்து தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘Attarintiki Daredi’ படத்தின் தமிழ் ரீ-மேக்கை சுந்தர் சி. இயக்க லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதில் சிம்பு நாயகனாக நடிக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன் அவரது அத்தையாக நடிக்கிறார்.

இதில் சிம்புவுடன் முதன் முதலாக யோகி பாபுவும் இணைந்து நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தீபாவளி அன்று வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது சிம்பு ரசிகர்களுக்கு செமயான தீபாவளி ட்ரீட்டாக இருக்கும் என நம்பலாம்.

விஜயகாந்த் & ஜெயராமின் ஆசிர்வாதம் பெற்ற மலையாள நடிகை மீனாட்சி

விஜயகாந்த் & ஜெயராமின் ஆசிர்வாதம் பெற்ற மலையாள நடிகை மீனாட்சி

meenakshi-கேரளத்து பைங்கிளி மீனாட்சி சினிமா நடிகையானது எதேச்சையாக . பத்தாம் வகுப்பில் படிக்கும் வேளையில் தனது ஊர்க்காரரான இயக்குனர் கண்ணன் தாமரைக்குளம் இயக்கி கொண்டிருந்த ‘ திங்கள் முதல் வெள்ளி வரை’ என்ற படத்தின் படப்பிடிப்பை பார்க்க சென்றவரை இயக்குனர் ஒரு கட்சியில் நடிக்க வைத்திருக்கிறார் .

ஒரே டேக்கில் மீனாட்சி நடித்து அசத்தியிருக்கிறார் . இதை கவனித்து கொண்டிருந்த அந்த படத்தின் கதாநாயகன் ஜெயராம் அவரை அழைத்து ‘ உனக்கு நடிப்பு திறமை உள்ளது .நீ பெரிய நடிகையாக வரவேண்டும்’ என்று ஆசீர்வதித்தார் .பின்னாளில் ஜெயராமின் ஆசீர்வாதம் பலித்தது .

பி .ஜி .முத்தையா விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியனை கதாநாயகனாக வைத்து இயக்கிய ‘மதுரவீரன்’ படத்துக்காக்க கேரளமெங்கும் கதாநாயகி வேட்டை நடத்தி இறுதியாக காயம்குளம் என்ற ஊரிலிருந்து மீனாட்சியை கண்டெடுத்தார்.

அந்த படத்தில் மீனாட்சியின் நடிப்பு மீடியாவால் மிகவும் பாராட்டப்பட்டது .படத்தை பார்த்து கேப்டன் விஜயகாந்த் மீனாட்சியின் நடிப்பை பாராட்டியதும் ,அவரது பாதம் தொட்டு வணங்கியபோது அவர் ஆசீர்வதித்ததும் நெகிழ்ச்சியான வாழிவில் மறக்க முடியாத அனுபவமும் அருளும் என்று கருதுகிறார்.

மதுரவீரனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலிருந்து நிறைய வாய்ப்புக்கள் வந்தபோதும் பிளஸ் ஒன் தேர்வு காரணமாக அந்த வாய்ப்புகளை மீனாட்சிக்கு ஏற்க இயலாமல் போனது .

அது மட்டுமல்லாமல் தேடிவந்தது அனைத்துமே முதிர்ச்சியான கிராமீய நாயகி வேடங்கள். சின்னபொண்ணான தனக்கு மாடர்ன் வேடங்களும் பொருந்தும் என்று நிரூபிக்க காத்திருக்கிறாராம் மீனாட்சி . தற்சமயம் மலையாளத்தில் இரு பெரிய ஹீரோக்களின் படத்தில் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

அதனாலேயே மலையாள மீடியாக்களின் கவனமும் இப்போது மீனாட்சி பக்கம் திரும்பியுள்ளது . எவ்வளவு சவாலான வேடங்களும் ஏற்று நடிக்க தயார் என்று கூறும் மீனாட்சி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவேன் என்று தன்னம்பிக்கையுடன் உள்ளார் . மேலும் தனது நடிப்பு திறனை மெருகேற்ற நாட்டியமும் கற்று வருகிறாராம் .

தமிழில் நடிப்பதற்க்காக தமிழ் மொழியும் கற்றுள்ளார் . மலையாள நாட்டிலிருந்து வந்தாரை வாழ வைக்கும் கோடம்பாக்கமும் தமிழ் சினிமாவும் மீனாட்சியையும் அரவணைக்கும் என்று நம்புவோம் .காஜல் என்பது இந்த கேரள குட்டியின் செல்லப் பெயராம் .

சுந்தர் .சி ஆதரவுடன் ஹாக்கி விளையாடும் ஹிப் ஹாப் ஆதி

சுந்தர் .சி ஆதரவுடன் ஹாக்கி விளையாடும் ஹிப் ஹாப் ஆதி

hiphop aadhi‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற ஆல்பம் மூலம் youtube-ல் கலக்கியவர் ஆதி. இவர் ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார்.

பரபரப்பாக பேசப்பட்டு மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தை அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்திருந்தார்.

இவர் கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தையும் சுந்தர்.சி-யே தயாரிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

இப்படத்தை இயக்கும் பொறுப்பை D.பார்த்திபன் தேசிங்கு ஏற்றிருக்கிறார். ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த இவர், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படம் ஹாக்கி விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்பதால் பல ஊர்களுக்கும் சென்று படமாக்கியுள்ளார்கள். இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டது.

நமது தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதால் ஹாக்கிக்கான பிரதான மைதானத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஹாக்கி விளையாட்டு தவிர இப்படத்தில் நட்பு, காதல், குடும்பம் என அனைத்து சிறப்பம்சங்களோடு, குடும்பத்தில் 6 வயது முதல் 60 வயது வரை அனைவரையும் திருப்திபடுத்தும் படமாகவும் இருக்கும்.

காரைக்கால், தரங்கம்பாடி, பாண்டிச்சேரி மற்றும் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்த நிலையில், அடுத்த வருட ஆரம்பத்தில் திரைக்கு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் முதல்கட்டமாக படத்தின் தலைப்பு இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ளது. ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் இசையில் 8 பாடல்கள் உருவாகியுள்ளது.

அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவரும் வண்ணம் அமையும். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘டிமாண்டி காலணி’ போன்ற படங்களில் ஒளிப்பதிவு செய்து அசத்திய அரவிந்த் சிங், இப்படத்தையும் ஒளிப்பதிவு செய்கிறார்.

நல்ல கதையம்சம் கொண்ட படம் என்பதால் இயக்குநர் சுந்தர்.சி மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் மிகப் பெரிய நடிகர் பட்டாளங்களும் நடிக்கின்றனர்.

இதில் கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவருடன் விக்னேஷ்காந்த்,பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ்,சுட்டி அரவிந்த்,வினோத்,குகன், ‘Put Chutney’ ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இயக்குநர் – D.பார்த்திபன் தேசிங்கு, இசை -‘ஹிப் ஹாப் தமிழா, ஒளிப்பதிவாளர் – அரவிந்த் சிங்
, படத்தொகுப்பு – பென்னி ஆலிவர், கலை இயக்குநர் – பொன்ராஜ்
, நடன இயக்குனர்கள் – சந்தோஷ் & சிவராக் ஷங்கர், சண்டை பயிற்சி – ப்ரதீப் தினேஷ், நிர்வாக தயாரிப்பாளர் – அன்பு ராஜ், தயாரிப்பு – சுந்தர்.சி.

திரையுலகில் தன் 25வது ஆண்டில் மகளை அறிமுகப்படுத்தும் ட்ரைண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன்

திரையுலகில் தன் 25வது ஆண்டில் மகளை அறிமுகப்படுத்தும் ட்ரைண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன்

trident arts producer ravindran
தமிழ் சினிமாவில் பல தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும் சில நிறுவனங்கள் மட்டுமே தரமான படங்களை கொடுத்து மக்களின் ஆதரவைப் பெற்று வருகின்றன.

அதில் முக்கியமாக ட்ரைண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் ஒன்று. தற்போது இந்த நிறுவனம் 25 ஆண்டுகளை கடந்துள்ளது.

இந்நிலையில் இதன் நிறுவனர் ரவீந்திரன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து தன் திரையுலக அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.

அவர் பேசியதாவது…

ஆரம்பத்தில் நானும் என் நண்பர் லத்தீப்-ம் சில நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக படங்களை வாங்கி விநியோகம் செய்தோம்.

ஆண்பாவம், விடிஞ்சா கல்யாணம், எங்க ஊரு பாட்டுகாரன், உள்ளே வெளியே, உள்ளத்தை அள்ளித்தா-னு நிறைய படங்களுக்கு நல்ல ஆதரவு கொடுத்திங்க.

அதன்பின்பு லத்தீப்-யும் நானும் இணைந்து தனியாக பொற்காலம் படத்தை விநியோகம் செய்தோம். அந்த படத்த பாராட்டி எழுதாத பத்திரிக்கைகளே கிடையாது.

தமிழ்நாட்டோட பெரிய ஏரியானு சொல்ற NSC-ல படங்களை வெளியிட்டோம். அவ்வளவு பெரிய ஏரியாவுல நாங்க நல்ல படங்களை ரிலீஸ் பண்ணாலும், நாங்க படத்தை மட்டும் தியேட்டருக்கு கொண்டுபோய் சேத்தோம். அந்த படத்தை மக்கள்கிட்ட கொண்டுபோனது நீங்கதான், நல்லபடம்னு தியேட்டருக்கு போய் பாத்த பிறகுதான் ஆடியன்ஸ்க்கு தெரியும்.

ஆனா இது நல்லபடம் நீங்கபோய் பாக்கலாம்னு ஆடியன்ஸை தியேட்டருக்கு Pull பண்றது உங்கமாதிரி Media-தான். நாங்க விநியோகம் பண்ணுன படங்களுக்கு நீங்க நல்ல ஆதரவு கொடுத்திங்க.

அஜித்-கூட வாலி, வில்லன், முகவரி, ஆரம்பம்-னு நிறைய வெற்றி படங்களை விநியோகம் செய்தோம். விஜய்-கூட சச்சின், திருப்பாச்சி, கத்தி, மெர்சல்னு பிரமிக்கிற வெற்றி படங்களை விநியோகம் செய்தோம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் காலா, கமல் சாரோட உன்னைபோல் ஒருவன்.

இந்த தமிழ்சினிமாவோட அடையாளமா இருக்கிற படங்களை வெளியிட்டதுல எங்களுக்கு பெருமை. விஷாலின் பாண்டியநாடு, பூஜை, ஆம்பள, தனுஷின் அது ஒரு கனாகாலம், தேவதையைகண்டேன், கொடி, விசாரணை.
விக்ரமின் பீமா, சிம்புவோட குத்து, சரவணா, அச்சம் என்பது மடமையடா, சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன், விஜய்சேதுபதியோட நானும் ரவுடிதான், ஜீவாவின் ராம், சசிகுமாரின் சுப்ரமணியபுரம், சுந்தரபாண்டியன், சமுத்திரகனியின் அப்பா, கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கள்ளழகர், முரளியின் பூந்தோட்டம்.

பார்த்திபன் அவர்களின் வெற்றிக் கொடிகட்டு, அழகி இப்படி கிட்டதட்ட மூணு தலைமுறை நடிகர்களோட படங்களை நாங்கள் வெளியிட்டு இருக்கோம். இந்த வெற்றி எல்லாத்துக்கும் உங்க ஆதரவும் ஒரு காரணம்.
விநியோகத்துல் எங்களுக்கு கிடைச்ச வெற்றிக்கு பிறகு நாங்க தயாரிப்புல இறங்கினோம்.

சசிகுமார் நடிச்ச வெற்றிவேல் படம் எங்கள் முதல் தயாரிப்பு, அதன்பிறகு சிவலிங்கா படத்தை தயாரிச்சோம். மற்ற தயாரிப்பாளர்களுடன் இணைந்து விக்ரம் வேதா, அவள், லஷ்மி, தமிழ்படம் 2, அறம், ராட்சசன்-னு இந்த வருஷமும், போன வருஷமும் வெளியான முக்கியமான படங்களை தயாரிச்சிருக்கோம்.

நாங்க விநியோகம் பண்ணுன படங்களுக்கு நீங்க கொடுத்த ஆதரவை நாங்க தயாரிக்கிற படங்களுக்கும் கொடுத்திருக்கிங்க.

இப்போ மற்ற தயாரிப்பாளர்களோட இணைந்து சீதக்காதி, ஆயிரா, தேவி 2, தில்லுக்கு துட்டு 2, கமல் சாரோட இணைந்து விக்ரம் நடிக்கிற படங்களை தயாரிச்சுகிட்டு இருக்கோம். இதுமட்டுமில்லாம இன்னும் சில படங்கள் தயாரிப்புல இருக்கு.

அந்த அறிவிப்புகளை கூடிய சீக்கிரம் வெளியிடுவோம். நாங்க விநியோகம் பண்ண ஆரம்பிச்சு 25 வருஷம் ஆயிருச்சு. 550 படங்களுக்கு மேல வெளியிட்டு இருக்கோம்.

இந்த நவீன காலத்துக்கு ஏற்ப Digital-லயும் Trident Arts களம் இறங்கியிருக்கு. Web Series-யும் தயாரிச்சு வெளியிடுகிறோம். 25 வருஷமா.. எங்களோட எல்லா தளங்களிலும் உங்க ஆதரவு தவிர்க்க முடியாம இருந்திருக்கு. அதுக்கெல்லாம் நன்றி சொல்றதுக்காகதான் இந்த Press Meet.

தற்போது ரவீந்திரனின் மகள் சௌந்தர்யாவும் சினிமாவுக்கு வருகிறார். இவர் அப்பாவுக்கு துணையாக இருந்து அதாவது கோ-புரொடியூசராக இருந்து படத்தயாரிப்புகளில் ஈடுபட உள்ளாராம்.

Trident Arts Ravindran celebrating 25 years in Cinema Industry

tridents arts ravindran daughter soundarya

96 பட கதை என்னுடையது தான்; அதை திருடவில்லை என பிரேம்குமார் விளக்கம்

96 பட கதை என்னுடையது தான்; அதை திருடவில்லை என பிரேம்குமார் விளக்கம்

director prem kumar96 படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஒருங்கிணைத்திருந்தார்.

இதில் இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், மருது பாண்டியன், உதவி இயக்குநர் மணிவில்லன் மற்றும் இயக்குநர் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் இயக்குநர் பிரேம்குமார் பேசுகையில்,‘இந்த கதை என்னுடையது தான். இந்த கதையை நான் 2016 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில்‘96’என்ற பெயரில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன். இந்த கதையை முழுமையாக எழுதி முடித்த பின்னர் முதலில் இயக்குநர் பாலாஜி தரணீதரன் அவர்களிடமும், நடிகர் விஜய் சேதுபதியிடமும் சொன்னேன். அதற்கு பிற்கு தயாரிப்பாளர் நந்தகோபாலிடமும் சொன்னேன். அவர் கதை பிடித்திருக்கிறது என்று சொல்லிய பிறகு தான், அந்த கதைக்கான விவாதத்தைத் தொடங்கினேன். அதில் இயக்குநர்கள் மருது பாண்டியன், பாலாஜி தரணீதரன் ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள். அதன் போது பேசப்பட்ட விசயங்களையும் நான் தனியாக பதிவு செய்திருக்கிறேன்.
இந்த படத்தின் டைட்டில் 96 என்று வைத்து டிசைன் செய்து விளம்பரப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து படம் வெளியாகும் வரை நிறைய முறை விளம்பரப்படுத்தப்பட்ட்து. அப்போதெல்லாம் இதைப் பற்றிய புகார் ஏதும் வரவில்லை.
படம் வெளியான பிறகு ஒரு வாரம் கழித்து விச்சு என்பவர் சமூக வலைதளம் ஒன்றில், ‘இந்த கதை என்னுடையது’ என்று பதிவிட்டிருந்தார். அதனையடுத்து சுரேஷ் என்பவர் இந்த கதை என்னுடையது என்றும், இயக்குநர் மருது பாண்டியன் என்பவரிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறேன் என்றும், அவர் தான் இந்த கதையை இயக்குநர் பிரேம்குமாரிடம் சொல்லி படமாகியிருக்கிறது என்றும் குற்றம் சுமத்தியிருக்கிறார்.
ஒரே கதையை எப்படி இரண்டு பேரிடமிருந்து திருட முடியும்?
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது மற்றும் அசுரவதம் ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் மருது பாண்டியன் மீது, பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் உறுதியாக கூறுகிறேன்.
இந்த கதையை முதல் முறையாக என்னுடைய குறிப்பேட்டிலும், இரண்டாவது முறையாக என்னுடைய கைப்பட எழுதி பைண்டிங் செய்யப்பட்ட ஃபைலும் உள்ளன. இதன் பின்னர் தான் இந்த கதையைப் பற்றி அவரிடம் கூறினேன். இந்த கதையைக் கேட்டவுடன் அவர் ஏற்கனவே சுரேஷ் என்பவர் இதே பாணியில் 92 என்ற டைட்டிலில கதையை கேட்டதாகச் சொல்லவேயில்லை. கதை விவாத்தின் போது அவர் உடனிருந்தார். அப்போதும் சொல்லவில்லை. அவர் கதையை திருடியிருந்தால், அந்த கதையை அவரே இயக்கியிருக்கலாமே.. ஏன் மற்றொரு இயக்குநரிடம் கொடுத்து இயக்கசொல்லவேண்டும்?
இந்த படத்தில் கதையின் நாயகியின் பெயர் ஜானகி என்பதும், கதை களம் தஞ்சாவூர் என்பதும், பள்ளிப்பருவத்து காதலைத்தான் இதிலும் சொல்லியிருக்கிறார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய குற்றச்சாட்டு அல்ல. கதையை திருடியவர் கதையின் நாயகி பெயரை மாற்றியிருக்கலாம், கதை களத்தின் இடத்தை மாற்றியிருக்கலாம் .. இப்படி எத்தனையோ வாய்ப்புகள் இருக்கும் போது, இந்த படத்தில் அப்படியே பயன்படுத்துவார்களா,,?
இது போன்ற பிரச்சினைகளை பேசி தீர்க்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் என்றொரு சங்கம் இருக்கிறது. அதற்கு இயக்குநர் கே பாக்யராஜ் தலைவராக இருக்கிறார். அங்கு வைத்து பேசியிருக்கலாம் அல்லது நீதிமன்றம் இருக்கிறது. அங்கு முறையாக போதிய ஆதாரங்களுடன் வழக்கு பதிவு செய்திருககலாம். இதையெல்லாம் விடுத்து மாற்று பாதையை தேர்ந்தெடுத்து, படைப்பாளிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாமா? என்று கேள்வி எழுப்பினர் இது தொடர்பாக சுரேஷ் என்பவர் 2012 ஆம் ஆண்டில் மின்னஞ்சல் அனுப்பியதாக தெரிவித்திருக்கிறார். தொழில்நுட்ப குழுவினரின் உதவியுடன் அத்தகைய ஆதாரங்கள் அவர்கள் வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கதை திருட்டு தொடர்பாக ஒருவர் மற்றொருவர் மீது குற்றம் சுமத்தும் போது தங்களுடைய கதை இது தான் என்ற ஆதாரத்தை வெளியிடவேண்டும். ஆனால் அப்படியொரு ஆதாரத்தை சுரேஷ் என்பவர் இது வரை முன்வைக்கவில்லை. இவர்கள் யாரும் ‘96’ கதை தொடர்பான நம்பகத் தன்மைக் கொண்ட எந்த ஆதாரங்களையும் பகிர்ந்துகொள்ளவில்லை. இதிலிருநது அவர்களின் நோக்கம் என்னவென்று தெளிவாக தெரியவருகிறது.’என்று இயக்குநர் பிரேம்குமார் விளக்கம் அளித்திருக்கிறார்.‘

இது குறித்து உதவி இயக்குநர் மணி வில்லன் என்பவர் பேசுகையில்,‘சுரேஷ் என்பவர் மருது பாண்டியன் அவர்களிடம் 92 என்ற கதையைச் சொல்லும் போது நானும் உடனிருந்தேன். அவர் கூறிய கதையில் ஸ்கூல் போர்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்தது, அது இதில் இல்லை. அவருடைய கதையும், இவருடைய கதையும் வேறு வேறு. அவருடைய கதையின் நாயகன் வேறு, இந்த கதையின் நாயகன் வேறு.’என்றார்.

More Articles
Follows