தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘மூடர் கூடம்’ என்ற படத்தை இயக்கி அதில் நாயகனாக நடித்தவர் நவீன். இப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
தற்போது, ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார்.
இதில் இவரது ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்க ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்நிலையில், சிந்து என்ற பெண்ணை திடீர் பதிவு திருமணம் செய்துக் கொண்டுள்ளதாக நவீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது… எனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம். நாங்கள் இருவரும் சாதி,மத நம்பிக்கையற்ற பகுத்தறிவு பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார்.
நாங்கள் மத எதிர்ப்பாளர்கள் இல்லை- மத மறுப்பாளர்கள், மனித சமத்துவத்தின் ஆதரவாளர்கள்” என தெரிவித்துள்ளார்.
Moodar koodam fame Naveen sudden marriage with Sindhu