புரிந்து செயல்பட்டால் விஜய்சேதுபதி எதிர்காலத்துக்கு நல்லது..; தமிழக அமைச்சர் அதிரடி கருத்து

புரிந்து செயல்பட்டால் விஜய்சேதுபதி எதிர்காலத்துக்கு நல்லது..; தமிழக அமைச்சர் அதிரடி கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kadambur rajuஇலங்கை கிரிக்கெட் விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் (வாழ்க்கை வரலாற்று படம்) வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ள திரைப்படம் ‘800’.

இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என பல்வேறு அமைப்பினர்

இதுகுறித்து தமிழக அமைச்சர் அதிரடி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது…

‘800’ திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது குறித்து புரிந்து செயல்பட்டால் அவரது எதிர்காலத்துக்கு நல்லது

நடிப்பது தனிப்பட்ட உரிமை என்றாலும் உணர்வை புரிந்து செயல்பட்டால் நடிகர் விஜய்சேதுபதி எதிர்காலத்திற்கு நல்லது.

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பற்றி, அவர் யோசித்து பார்க்க வேண்டும்

இவ்வாறு தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Minister reaction on Muthaiah Muralitharan biopic

விஷ்ணு விஷாலின் தந்தை ஓய்வுபெற்ற டிஜிபி என்பதால் விசாரணை அவருக்கு சாதகமாகும்.; – சிபிஐ என்கொயரி வேண்டும் என சூரி வேண்டுகோள்

விஷ்ணு விஷாலின் தந்தை ஓய்வுபெற்ற டிஜிபி என்பதால் விசாரணை அவருக்கு சாதகமாகும்.; – சிபிஐ என்கொயரி வேண்டும் என சூரி வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sooriநடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ஓய்வு பெற்ற டிஜிபி ஆவார்.

ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் இணைந்து, நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2 கோடியே 70 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டதாக நடிகர் சூரி புகார் அளித்தார்.

அதாவது நிலத்திற்கான உரிய ஆவ‌ணங்கள் இல்லாததால் தமது பணத்தை திரும்ப கேட்டபோது, அ‌வர்கள் தராமல் ஏமாற்றியதாக புகார் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ரமேஷ் குடவாலா உள்ளிட்ட இருவர் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் ‌வழக்குப்பதிவு செய்தனர்.

தரவேண்டிய பணத்தை கேட்டபோது விஷ்ணுவிஷாலின் தந்தை ரமேஷ் குடவாலாவும், அன்புவேல் ராஜனும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சூரி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி ரவீந்திரன், நடிகர் சூரியின் புகார் மீது நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை நவம்பர் இறுதி வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோருக்கு எதிரான புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சூரி மனுதாக்கல் செய்துள்ளார்.

அதில், ரமேஷ் குடவாலா டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதால் காவல்துறை விசாரணை அவருக்கு சாதகமாக அமையலாம் என குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Soori requests CBI enquiry against of Vishnu Vishal father

வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவில்‌ நின்றிருக்கிறோம்‌..; தமிழனாக பிறந்தது என் தவறா.? முத்தையா முரளிதரன் உருக்கம்

வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவில்‌ நின்றிருக்கிறோம்‌..; தமிழனாக பிறந்தது என் தவறா.? முத்தையா முரளிதரன் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

muthaiya muralitharanகிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன் பயோபிக்காக விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகவுள்ள படம் 800.

இப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என பல்வேறு கட்சியினர் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் முத்தையா முரளிதரன்

அதில் கூறியிருப்பதாவது:

“இதுநாள்‌ வரை என்‌ வாழ்க்கையில்‌ பல சர்ச்சைகளைக் கடந்தே வந்துள்ளேன்‌. அது விளையாட்டானாலும்‌ சரி தனிப்பட்ட வாழ்க்கையானாலும்‌ சரி. தற்போது எனது வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ திரைப்படத்தைச்‌ சுற்றி பல்வேறு சர்ச்சைகள்‌, விவாதங்கள்‌ எழுந்துள்ள நிலையில்‌ அதற்கான சில விளக்கங்களைக் கூற விரும்புகிறேன்‌.

என்னைப் பற்றி திரைப்படம்‌ எடுக்க நினைப்பதாகக் கூறி தயாரிப்பு நிறுவனம்‌ என்னை அணுகியபோது முதலில்‌ தயங்கினேன்‌. பிறகு முத்தையா முரளிதரனாக நான்‌ படைத்த சாதனைகள்‌ என்னுடைய தனிப்பட்ட சாதனைகள்‌ மட்டும்‌ இல்லையென்பதாலும்‌, இதற்குப் பின்னால்‌ எனது பெற்றோர்கள்‌ என்னை வழிநடத்திய ஆசிரியர்கள், எனது பயிற்சியாளர்கள்‌, சக வீரர்கள்‌ எனப் பலராலும்‌ உருவாக்கப்பட்டவன்‌ என்பதாலும்‌ அதற்குக் காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம்‌ கிடைக்கும்‌ என நினைத்துதான்‌ இந்தத் திரைப்படத்தை உருவாக்கச் சம்மதித்தேன்‌.

இலங்கையில்‌ தேயிலைத்‌ தோட்டக் கூலியாளர்களாக எங்கள்‌ குடும்பம்‌ தங்களது வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில்‌ முதலாவதாகப் பாதிக்கப்பட்டது இந்திய வம்சாவளியான மலையகத் தமிழர்கள்தான்‌.

இலங்கை மண்ணில்‌ எழுபதுகள்‌ முதல்‌ தமிழர்கள்‌ மீது நடத்தப்பட்ட கலவரங்கள்‌ முதற்கொண்டு , ஜேவிபி போராட்டத்தில்‌ நடந்த வன்முறை , பின்னர்‌ நடந்த தொடர்‌ குண்டுவெடிப்புகள்‌ என எனக்கு நினைவு தெரிந்த நாள்‌ முதலே தொடர்ந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம்‌.

என்‌ ஏழு வயதில்‌ எனது தந்தை வெட்டப்பட்டார்‌. என்‌ சொந்தங்களில்‌ பலர்‌ பலியாகினர்.

வாழ்வாதாரத்தை இழந்து பல முறை நடுத்தெருவில்‌ நின்றிருக்கிறோம்‌. ஆதலால்‌, போரால்‌ நிகழும்‌ இழப்பு அதனால்‌ ஏற்படும்‌ வலி என்ன என்பது எனக்கும்‌ தெரியும்‌.

முப்பது வருடங்களுக்கு மேல்‌ போர்‌ சூழ்நிலையில்‌ இருந்த நாடு இலங்கை. அதன்‌ மத்தியிலேயேதான்‌ எங்கள்‌ வாழ்க்கைப் பயணம்‌ நடைபெற்றது.

இந்தச் சூழ்நிலையில்‌ இருந்து எப்படி நான்‌ கிரிக்கெட்‌ அணியில்‌ இடம்பெற்று சாதித்தேன்‌ என்பது பற்றியான படம்‌தான்‌ ‘800’.

இது இப்போது பல்வேறு காரணங்களுக்காக அரசியலாக்கி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம்‌ நான்‌ பேசிய சில கருத்துகள்‌ தவறாகத் திரித்துச் சொல்லப்பட்டதால்‌ வந்த விளைவுதான்‌. உதாரணமாக நான்‌ 2009-ம்‌ ஆண்டு தான்‌ என்‌ வாழ்க்கையில்‌ மிக மகிழ்ச்சியான நாள்‌ என்று 2019-ல்‌ கூறியதை தமிழர்களைக் கொன்று குவித்த நாள்தான்‌ முத்தையா முரளிதரனின்‌ வாழ்க்கையில்‌ மகிழ்ச்சியான நாள்‌ எனத் திரித்து வருகின்றனர்.

ஒரு சராசரி குடிமகனாக சிந்தித்துப்‌ பாருங்கள்‌. போர்‌ சூழ்நிலையிலேயே இருந்த ஒரு நாட்டில்‌ எங்கு எது நடக்கும்‌ என்பது தெரியாது. என்‌ பள்ளிக் காலத்தில்‌ என்னுடன்‌ பள்ளியில்‌ ஒன்றாக விளையாடிய மாணவன்‌ மறுநாள்‌ உயிருடன்‌ இருக்க மாட்டான்‌.

வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள்‌ வீடு திரும்பினால்தான்‌ நிஜம்‌. இப்படிப்பட்ட சூழ்நிலையில்‌ போர்‌ முடிந்தது ஒரு சராசரி மனிதனாகப் பாதுகாப்பாக உணர்வது மட்டுமல்லாமல்‌ போர்‌ முடிந்ததால்‌ கடந்த பத்து வருடங்களாக இரண்டு பக்கமும்‌ உயிரிழப்புகள்‌ ஏதும்‌ இல்லாமல்‌ இருப்பதை மனதில்‌ வைத்தே 2009-ம்‌ ஆண்டு எனது வாழ்க்கையில்‌ மகிழ்ச்சியான நாள்‌ என்கிற கருத்தினைத்‌ தெரிவித்தேன்‌. ஒருபோதும்‌ நான்‌ அப்பாவி மக்களின்‌ படுகொலைகளை ஆதரிக்கவும்‌ இல்லை.. ஆதரிக்கவும்‌ மாட்டேன்‌.

அடுத்து எனது பள்ளிக் காலம்‌ முதலே நான்‌ தமிழ் வழியில்‌ படித்து வளர்ந்தவன்தான்‌. எனக்குத் தமிழ்‌ தெரியாது என்று கூறுவது மற்றுமொரு தவறான செய்தி. தமிழ்‌ மாணவர்கள்‌ தாழ்வு மனப்பான்மை உடையவர்‌கள் என நான் கூறியதாகச் சொல்கின்றனர்‌.

இயல்பாகவே சிங்களர்கள்‌ மத்தியில்‌ சிறுபான்மை சமூகமாக வாழ்வதால்‌ எல்லோரிடமும்‌ ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கத்தான்‌ செய்யும்‌. அது இயற்கை. அது என்னிடத்திலும்‌ இருந்தது. காரணம்‌ எனது பெற்றோரும்‌கூட அப்படிப்பட்ட சிந்தனையில்தான்‌ இருந்தார்கள்‌.

அதையும்‌ மீறி கிரிக்கெட்‌ மீதான எனது ஆர்வம்‌ பள்ளியின்‌ கிரிக்கெட்‌ அணியில்‌ என்னைப் பங்கேற்கத் தூண்டியது. எனது முயற்சியால்‌ அணியில்‌ சேர்ந்தேன்‌.

எனது திறமையால்‌ நான்‌ ஒரு தவிர்க்க இயலாதவனாக மாறினேன்‌ . எனவேதான்‌ தாழ்வு மனப்பான்மையைத் தூக்கி எறிந்து உங்கள்‌ திறமை மீது நம்பிக்கை வைத்து முயற்சி செய்யுங்கள்‌ என்ற எண்ணத்தில்தான்‌ கூறினேன்‌.

என்னைப் பொறுத்தவரையில்‌ சிங்களர்களாக இருந்தாலும்‌ மலையகத் தமிழர்களாக இருந்தாலும்‌ ஈழத் தமிழர்களாக இருந்தாலும்‌ அனைவரையும்‌ ஒன்றாகவே பார்க்கிறேன்‌. ஒரு மலையகத் தமிழனான நான்‌ என்‌ மலையக மக்களுக்குச் செய்த உதவிகளைக் காட்டிலும்‌ ஈழ மக்களுக்குச் செய்த உதவிகளே அதிகம்‌. செய்யும்‌ நன்மைகளைச் சொல்லிக் காட்டுவதை என்றைக்கும்‌ நான்‌ விரும்புவதில்லை. ஆனால்‌, இன்று அதை சொல்லியாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்‌.

ஐ.நா.வின் உணவுத் தூதராக இருந்தபோது 2002-ம்‌ ஆண்டு விடுதலைப் புலிகளின்‌ கட்டுப்பாட்டில்‌ இருந்த பகுதிகளில்‌ உள்ள பள்ளிக்‌ குழந்தைகளுக்கும்‌ அந்தத் திட்டத்தை எடுத்துச் சென்றது முதல்‌‌ சுனாமி காலங்களில்‌ பாதிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு நான்‌ செய்த உதவிகள் வரை அந்த மக்கள்‌ அறிவர்‌.

போர் முடிந்த பின் கடந்த 10 வருடங்களாக எனது தொண்டு நிறுவனமான FOUNDATION OF GOODNESS மூலம்‌ ஈழ மக்களுக்குச் செய்யும்‌ உதவிகள்‌தான்‌ அதிகம்‌. ஈழத்‌ தமிழர்கள்‌ வாழும்‌ பகுதிகளில்‌ எனது தொண்டு நிறுவனக் கிளைகள்‌ மூலம்‌ குழந்தைகள்‌ கல்வி, பெண்கள்‌ முன்னேற்றம்‌, மருத்துவம்‌ எனப் பல வகைகளில்‌ பல உதவிகள்‌ செய்து வருகிறேன்‌.

மக்கள்‌ நல்லிணக்கத்துக்காக வருடா வருடம்‌ MURALI HARMONY CUP என்கிற பெயரில்‌ கிரிக்கெட்‌ போட்டிகள்‌ வடக்கு மற்றும்‌ கிழக்குப் பகுதிகளில்‌ நடத்தி வருகிறோம்‌. இன்னும்‌ இதுபோல்‌ ஏராளமான விடயங்கள்‌ உள்ளன. நான்‌ இலங்கை அணியில்‌ இடம்பெற்று சாதனை படைத்த காரணத்தினாலேயே என்‌ மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது. நான்‌ இந்தியாவில்‌ பிறந்து இருந்தால்‌ நான்‌ இந்திய அணியில்‌ இடம்பெற முயன்றிருப்பேன்‌. இலங்கைத் தமிழனாக பிறந்தது என் தவறா?

இவை அனைத்தையும்‌ விடுத்து சிலர்‌ அறியாமையாலும்‌ சிலர்‌ அரசியல்‌ காரணத்திற்காகவும்‌ என்னைத் தமிழ்‌ இனத்திற்கு எதிரானவர்‌ என்பது போல்‌ சித்தரிப்பது வேதனையளிக்கிறது. எவ்வளவு விளக்கம் அளித்தாலும்‌ எதிர்ப்பாளர்கள்‌ யாரையும்‌ சமாதானப்படுத்த முடியாது என்றாலும்‌ என்னைப்‌ பற்றி ஒரு பக்கம்‌ தவறான செய்திகள்‌ மட்டுமே பகிரப்பட்டு வரும்‌ நிலையில்‌ நடுநிலையாளர்களுக்கும்‌ பொது மக்களுக்கும்‌ இவ்விளக்கத்தை அளிக்கிறேன்‌”.

Muthaiya Muralitharan clears the air about the controversies

புதுச்சேரி பள்ளிகள் திறப்பு.: இரண்டு மாணவிகளுக்கு கொரோனா தொற்று.. வகுப்பறைகள் மூடல்

புதுச்சேரி பள்ளிகள் திறப்பு.: இரண்டு மாணவிகளுக்கு கொரோனா தொற்று.. வகுப்பறைகள் மூடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pondicherry school studentsபுதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் கடந்த 8-ம் தேதி 10, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

அதன் பின்னர் 14-ந்தேதி முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறந்தன.

மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகம் இருந்தால் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம் என புதுவை கல்வித்துறை அறிவித்திருந்த்து.

இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற காலாப்பட்டு அரசு பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவி மற்றும் வாதானூர் அரசு பள்ளியில் 10-ம்வகுப்பு படிக்கும் மாணவிக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆனது.

இதனையடுத்து மாணவிகள் இருவரும் தனிமைப்படுத்தபட்டனர்.

மேலும் அவர்கள் படித்த வகுப்புகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.

அந்த வகுப்பில் இருந்த சக மாணவிகள், ஆசிரியர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

புதுச்சேரியில் பள்ளிக்கு சென்று வந்த 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் பள்ளி வகுப்பறையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத, கலிதீர்த்தாள்குப்பம் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Class 12 boy tests positive for covid 19 in pondycherry

விஷாலுக்கு 30.. ஆர்யாவுக்கு 32..; நோட்டா டைரக்டருடன் கூட்டணி

விஷாலுக்கு 30.. ஆர்யாவுக்கு 32..; நோட்டா டைரக்டருடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal aryaஅரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த் ஷங்கர்.

இவரின் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இவரின் புதிய படத்தில் ‘அவன் இவன்’ படத்திற்கு பிறகு ஆர்யா & விஷால் இணைந்து நடிக்கின்றனர்.

இது விஷாலுக்கு 30வது படம். ஆர்யாவுக்கு 32வது படமாகும்.

மினி ஸ்டுடியோ சார்பாக வினோத் இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்பட சூட்டிங் ஹைதராபாத் பகுதியில் இன்றுமுதல் தொடங்கியுள்ளது.

மற்ற கலைஞர்களின் விவரங்களை விரைவில் வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Vishal and Arya joins for Director Anand Shankar’s next film

தவறை ஒப்புக் கொள்ளும் சிறந்த ஆளுமை ரஜினிகாந்த்..; தனஞ்செயன் பாராட்டு

தவறை ஒப்புக் கொள்ளும் சிறந்த ஆளுமை ரஜினிகாந்த்..; தனஞ்செயன் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth dhananjayanஇராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூ. 6.50 லட்சம் சொத்து வரி செலுத்த வேண்டும் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்து ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொதுமுடக்கம் காரணமாக திருமண மஹால் மூடியே கிடந்தது எனவும் அதனால் சொத்து வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் மாநகராட்சிக்கு இதுகுறித்த விளக்கம் அளித்து நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை மாநகராட்சி தரப்பில் பதில் இல்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

மேலும் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்தார்.

அபராதம் விதிக்க நேரிடும் என்கிற ஐகோர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினிகாந்த் தரப்பு பதிலளித்தனர்.

அதன்பின்னர் ரஜினி தரப்பில் ரூ. 6.50 லட்சம் சொத்து வரியை சென்னை மாநகராட்சியில் செலுத்தினர்.

இதனையடுத்து ரஜினி் இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

ராகவேந்திரா மண்டப சொத்து வரி…

நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.

தவறைத் தவிர்த்திருக்கலாம்.

#அனுபவமே_பாடம்

ஆனாலும் ரஜினியின் இந்த ட்வீட்டும் சர்ச்சையானது.

70 வயதான ஒரு சூப்பர் ஸ்டாருக்கு இது கூட தெரியவில்லையா.? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்..

இந்த நிலையில் தவறை ஒப்புக் கொண்ட ரஜினியை தயாரிப்பாளர் தனஞ்செயன் பாராட்டியுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில்…

ஒரு தவறை வெளிப்படியாக ஒப்புக் கொள்வதில் தான் சிறந்த மனிதத்தன்மை/ஆளுமை வெளிப்படுகிறது. அப்படி செய்து உயர்ந்து நிற்கிறார் @rajinikanth சார். #அனுபவமே_பாடம்

என பதிவிட்டுள்ளார்.

Producer Dhananjayan about Rajinikanth’s property tax issue

More Articles
Follows