தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அட்லி-விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள மெர்சல் படம் பல தடைகளை கடந்து அக்டோபர் 18-ல் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சில தியேட்டர்களில் இப்போதே முன்பதிவுகள் தொடங்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், உலகமெங்கும் 3292 திரையரங்குகளில் ‘மெர்சல்’ படம் வெளியாகவுள்ளதாகவும் இது இது நிஜமாலுமே ‘மெர்சல்’ தீபாவளி”தான் என படத் தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் இந்த தியேட்டர் எண்ணிக்கை 3500ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தங்களது 100-வது படைப்பாக வெளியிடவுள்ளது.