ஜிஎஸ்டி சர்ச்சை; விஜய்யின் மெர்சல் தெலுங்கு வெர்சன் ரிலீஸ் என்னாச்சு?

adirindhi stillsவிஜய் நடித்த ‘மெர்சல்’ தெலுங்கு பதிப்பான ‘அடிரிந்தி’ திட்டமிட்டபடி தீபாவளியன்று வெளியாகவில்லை.

எனவே இன்று அக்டோபர் 27-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற வசனங்கள் இருப்பதால்தான் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் ‘அடிரிந்தி’ வசனங்கள் மியூட் செய்யப்பட்டு படம் வெளியாவதாக செய்திகள் வெளியாகின.

இதில் ஜிஎஸ்டி காட்சிகள் நீக்கப்படவில்லை என படத்தயாரிப்பு குழு மறுத்துள்ளது.

இதனால் ‘அடிரிந்தி” ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் உறுதியான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Overall Rating : Not available

Related News

தெறி மற்றும் மெர்சல் படங்களுக்கு பிறகு…
...Read More
தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு விஜய்யை…
...Read More

Latest Post