விஜய் ரசிகர்களுக்கு இன்று மெர்சல் ட்ரீட்; நாளை டபுள் ட்ரீட்

விஜய் ரசிகர்களுக்கு இன்று மெர்சல் ட்ரீட்; நாளை டபுள் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று செப்டம்பர் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு விஜய் நடித்துள்ள மெர்சல் டீசர் வெளியாகிறது.

இதனை கொண்டாட பல நாட்களாகவே விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இன்றைய கொண்டாட்டத்தை தொடர்ந்து நாளையும் விஜய் ரசிகர்கள்ளுக்கு இரண்டு விருந்துகள் காத்திருக்கிறது.

விஜய் ரசிகர்களை மையப்படுத்தி 3 ரசிகர்கள் (தமிழ்) மற்றும் போக்கிரி சைமன் (மலையாளம்) ஆகிய இரண்டு படங்கள் நாளை ரிலீஸ் ஆகிறது.

விஜய்க்கு தமிழகத்திலும் கேரளாவிலும் நல்ல மவுசு உள்ளதால் இந்த இரு படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
DKET9FkV4AErp9x

DKLS1i_U8AAMruW

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் சந்திப்பு; ஆம் ஆத்மியில் இணையும் கமல்?

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் சந்திப்பு; ஆம் ஆத்மியில் இணையும் கமல்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kama lhaasan arvind kejriwalநடிகர் கமல்ஹாசன் தன் அரசியல் பிரவேசத்தை உறுதிசெய்துவிட்டார்.

எனவே அண்மைகாலமாக அரசியலில் இறங்க தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

இடையே அரசியல் கற்க கேரளா சென்று முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து வந்தேன் என தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கமல் சந்திப்பு நடைபெறவுள்ளது.

மேலும் இச்சந்திப்பில் கமலை ஆம் ஆத்மி கட்சியில் இணைய முதல்வர் அழைப்பு விடுப்பார் என கூறப்படுகிறது.

சாமி2 படத்தில் நடிப்பவர்கள் யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சாமி2 படத்தில் நடிப்பவர்கள் யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram saamy 2துருவ நட்சத்திரம் மற்றும் ஸ்கெட்ச் ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘சாமி 2’ படத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம்.

தற்போது இப்படத்துக்கான முதற்கட்ட பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது படக்குழு.

விரைவில் இதன் சூட்டிங் தொடங்கப்பட உள்ள நிலையில் இப்படத்தில் நடிப்பவர்கள் யார்? யார்? என்ற விவரத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.

பாபி சிம்ஹா வில்லனாக நடிக்க, முக்கிய வேடத்தில் பிரபு, சூரி ஆகியோர் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

மிலன் கலை இயக்குநராகவும், கனல் கண்ணன் சண்டை வடிவமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Vikram next movie saamy2 cast and crew details

விஜய்யின் மெர்சல் வசூலை தடுக்கும் வில்லன் விஷால்..?

விஜய்யின் மெர்சல் வசூலை தடுக்கும் வில்லன் விஷால்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and vishalஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் இந்தாண்டு 2017 தீபாவளிக்கு ரிலீஸாகிறது.

விஜய்க்கு கேரளாவிலும் நல்ல மார்கெட் உள்ளதால், அங்கும் நல்ல லாபத்தை எதிர் நோக்கியுள்ளனர் படக்குழுவினர்.

இந்நிலையில் மோகன்லால்-விஷால் இணைந்து நடித்துள்ள வில்லன் படமும் தீபாவளிக்கு ரிலீஸாகிறதாம்.

கேரளாவின் சூப்பர்ஸ்டார் மோகன்லால் என்பதால் அங்கு மெர்சலுக்கு குறைவான தியேட்டர்களே கிடைக்கும் என கூறப்படுகிறது.

இதனால் மெர்சல் வசூலுக்கு வில்லன் படத்தால் ஆபத்து வரலாம்.

சிவன் இயக்கும் விஜய்சேதுபதி படத்திற்கு இப்படியொரு தலைப்பா?

சிவன் இயக்கும் விஜய்சேதுபதி படத்திற்கு இப்படியொரு தலைப்பா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupthiவருடத்தில் 12 மாதங்கள் என்றால், அதில் 2 மாதத்திற்கு ஒரு படம் ரிலீஸை கொடுக்கும் அளவுக்கு படங்களில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

இவர் நடித்துள்ள கருப்பன் படம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தற்போது 96, ஜீங்கா, சூப்பர் டீலக்ஸ், ஒருநாள் பார்த்து சொல்றேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அடுத்து எடக்கு என்ற பெயரிடப்பட்ட புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

சிவன் என்பவர் இயக்கும் இப்படத்தை நிமோ புரொடக்ஷசன்ஸ் சார்பாக கே.பாலு தயாரிக்கிறார்.

முருகதாஸின் ஒன்லைன் ஸ்டோரிக்கு ஓகே சொன்ன ரஜினி

முருகதாஸின் ஒன்லைன் ஸ்டோரிக்கு ஓகே சொன்ன ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and AR Murugadossரஜினிகாந்த் நடிப்பில் இரு படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

ஷங்கர் இயக்கியுள்ள 2.ஓ படம் அடுத்த 2018 ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ரஞ்சித் இயக்கி வரும் காலா படம் 2018 ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினியை சந்தித்து இயக்குனர் ஏஆர். முருகதாஸ் ஒரு கதையின் ஒன்லைன் ஸ்டோரியை சொன்னாராம்.

அதற்கு ஓகே சொன்ன ரஜினி முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்து கொண்டு வரச் சொன்னாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனவே சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய்யின் 62 படத்தை முடித்துவிட்டு ரஜினி படத்தை முருகதாஸ் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More Articles
Follows