மெர்சல் நஷ்டமா? பிரபலங்கள் கருத்தால் எழுந்தது புதிய சர்ச்சை

மெர்சல் நஷ்டமா? பிரபலங்கள் கருத்தால் எழுந்தது புதிய சர்ச்சை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal postersஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் கடந்த அக்டோபர் 18ஆம் தீபாவளியன்று ரிலீஸ் ஆனது.

ரசிகர்களின் பேராதரவுடன் படம் பல மடங்கு வசூல் செய்துள்ளதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

தற்போது 50 நாட்களை நெருங்கும் வேளையில், பிரபல நடிகர் எஸ்வி. சேகர் தன் சமீபத்திய பேட்டியில் மெர்சல் படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு ரூ. 60 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு இருக்கும் என கூறியுள்ளார்.

ஆனால் இதற்கு பதிலளிக்கும் வகையில் மற்றொரு தயாரிப்பாளரான தனஞ்செயன் அவர்கள் கூறியுள்ளதாவது…

தயாரிப்பாளர் படம் நஷ்டம் என எதுவும் கூறவில்லை. விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவருக்கும் லாபம் கிடைத்துள்ளது அதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் அடைய வாய்ப்பில்லை.

மொத்த வசூல் எவ்வளவு என்பதை தயாரிப்பு நிறுவனம் விரைவில் விளக்கும் என எதிர்பார்க்கிறேன்” என அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அனுஷ்கா / கீர்த்தி சுரேஷ்? அஜித்தின் விசுவாச நாயகி யார்…?

அனுஷ்கா / கீர்த்தி சுரேஷ்? அஜித்தின் விசுவாச நாயகி யார்…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithவிவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் விவேகம் கூட்டணியே இணைந்துள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க, சிவா இயக்க அஜித் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு விசுவாசம் எனப் பெயரிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் நாயகி யார்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதில் நாயகியாக நடிக்க அனுஷ்கா மற்றும் கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இருவரில் ஒருவர் உறுதியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 95% அனுஷ்காவே விசுவாச நாயகி எனவும் தகவல்கள் வந்துள்ளன.

இனி நான் சிங்கிள் கிடையாது; மணக்கோலத்தில் ஹிப்ஹாப் ஆதி

இனி நான் சிங்கிள் கிடையாது; மணக்கோலத்தில் ஹிப்ஹாப் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

No more single Hiphop Aadhi got engaged todayஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் மற்றும் விஷால் நடித்த ஆம்பள, கத்தி சண்டை உள்ளிட்ட படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்தவர் ஹிப்ஹாப் ஆதி.

இதனையடுத்து இவரே இயக்கி நடித்த படம் மீசைய முறுக்கு.

இப்படம் வெற்றிப் பெறவே மீண்டும் சுந்தர் சி தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் ஹிப்ஹாப் ஆதி.

இந்நிலையில் திடீரென தான் திருமண வாழ்க்கையில் இணையவுள்ளதாக கூறி, தன் நிச்சயதார்த்த புகைப்படத்தை தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில்.. “இனி நான் சிங்கிள் கிடையாது” என பதிவு செய்துள்ளார்.

No more single Hiphop Aadhi got engaged today

கேட்ட உடனே உதவி செய்த சிவகார்த்திகேயனை வாழ்த்தும் வாண்டு இயக்குனர்

கேட்ட உடனே உதவி செய்த சிவகார்த்திகேயனை வாழ்த்தும் வாண்டு இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan launched Vaandu movie first look1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் வாண்டு.

வடசென்னையில் மறைமுகமாக நடக்கும் குத்துச் சண்டையில் கலந்துகொள்ளும் குப்பைப் பொறுக்கும் சிறுவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளே இப்படத்தின் கதை.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

இயக்குனர் வாசன் ஷாஜியிடம் இப்படம் குறித்து கேட்ட போது…

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட பல ஹீரோக்களிடம் கேட்டோம். ஆனால் சூழ்நிலை சரியாக அவர்களுக்கு அமையவில்லை, அதனால் தயங்கினார்கள்.

ஆனால் வேலைக்காரன் படத்தின் டப்பிங் மற்றும் இயக்குனர் பொன்ராம் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ஹீரோ சிவகார்த்திகேயன் நான் கேட்ட உடனே ஓகே பிரதர் பண்ணிக்கலாம் என்று கூறினார்.

உடனே நான் மிகுந்த சந்தோஷத்தில் தள்ளப்பட்டேன் இந்த உதவியே படத்தின் வெற்றிக்கு உதவியாக இருக்கும்.”இவ்வாறு வாண்டு படத்தின் இயக்குனர் வாசன் ஷாஜி கூறினார்.

Sivakarthikeyan launched Vaandu movie first look

vaandu first look

 

லாரன்ஸின் காஞ்சனா-3 படத்திலிருந்து ஓவியா விலகல்

லாரன்ஸின் காஞ்சனா-3 படத்திலிருந்து ஓவியா விலகல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oviya quits from Raghava Lawrance movie Kanchana 3லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படம் பேய் ஹிட்டடிக்க, அதை தொடர்ந்து தொடர்ச்சியாக காஞ்சனா, காஞ்சனா2 என படங்களை எடுக்க ஆரம்பித்தார் லாரன்ஸ்.

படத்தின் தொடர்ச்சி என கூறினாலும் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொரு ஹீரோயினை மாற்றி டூயட் பாடி வந்தார் மனிதர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த, அதில் பங்கேற்ற ஓவியாவை தன் காஞ்சனா 3ஆம் பாகத்திற்கு கமிட் செய்தார் மாஸ்டர்.

இந்த அறிவிப்பை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்நிலையில் தற்போது ‘காஞ்சனா 3″ படத்திலிருந்து நடிகை ஓவியா விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

சூட்டிங் தொடங்க தாமதம் ஆனதால் இந்த முடிவை ஓவியா எடுத்துள்ளதாக அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Oviya quits from Raghava Lawrance movie Kanchana 3

அஜித் படத்திற்கு விசுவாசம் தலைப்பு வைக்க இதான் காரணமா?

அஜித் படத்திற்கு விசுவாசம் தலைப்பு வைக்க இதான் காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

viswaasam stillsகடந்த சில வருடங்களாகவே அஜித் படத்தின் சூட்டிங் முடிவடையும்போது தான் படத்தின் தலைப்பையே வைப்பார்கள்.

ஆனால் சிவா இயக்கவுள்ள அஜித்தின் அடுத்த படத்திற்கு சூட்டிங் தொடங்கும்முன்பே அறிவித்துவிட்டார்கள்.

இந்த தலைப்பும் அவர்களின் வி சென்டிமெண்ட் படியே அமைந்துள்ளது.
தற்போது தலைப்புக்கான காரணம் வந்துள்ளது.

அஜித் தன் நண்பர்கள் பேசும்போது.. “ரசிகர்கள் எனக்கு விசுவாசமாக இருக்கிறார்கள், நானும் அவர்களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும்” என அடிக்கடி கூறுவாராம்.

எனவேதான் இதையே தலைப்பாக வைக்கலாம் என ஆலோசனை வரவே தலைப்பை வைத்து அறிவித்துள்ளனர்.

More Articles
Follows