தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அட்லீ இயக்கத்தில் ஏஆர்.ரகுமான் இசையமைத்து விஜய் நடிப்பில் வெளியான படம் மெர்சல்.
தீபாவளி அன்று வெளியான இப்படத்தை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.
இப்படத்திற்கு பாஜக.வினர் எதிர்ப்பு தெரிவிக்கவே படம் இன்னும் அசுர பலத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறது.
இதே தீபாவளியை முன்னிட்டு (அடுத்தடுத்த நாட்களில்) ஹிந்தி படங்களான அமீர்கானின் Secret Superstar மற்றும் அஜய் தேவ்கனின் Golmaal Again ஆகிய படங்களும் வெளியானது.
ஆனால் அந்த படங்களை தாண்டி மெர்சல் அதிக வசூலை அளித்து வருவதாக பிரபல திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
It won’t be erroneous to state that Tamil film #Mersal is collecting more than the two Hindi releases in some key international markets.
— taran adarsh (@taran_adarsh) October 22, 2017