மாஸ்டர் டைரக்டரின் அடுத்த பட அறிவிப்பு நாளை..; ஹீரோ கமல் கன்பார்ம்.; புரொடியூசர் யார்.?

lokesh kanagaraj kamal haasanகைதி பட வெற்றியை தொடர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

விஜய் & விஜய்சேதுபதி இணைந்துள்ள இந்த படம் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளி போய்விட்டது.

கொரோனா பிரச்சினை முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள படத்தை லோகேஷ் இயக்குவார் என கூறப்பட்டது.

ஆனால் அண்ணாத்த படத்தை முடிக்காமல் ரஜினி வேறு படங்களில் நடிக்க மாட்டார்.

மேலும் நவம்பர் முதல் அரசியலில் களம் காணவுள்ளார் ரஜினிகாந்த்.

எனவே கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்தை முடிவு செய்துவிட்டாராம் லோகேஷ்.

இந்த படத்தை கமல் தயாரிக்கவில்லையாம். உலக பிரபல நிறுவனம் ஒன்று தயாரிக்கவுள்ளதாம்.

இந்த அறிவிப்பை தான் நாளை செப்டம்பர் 16 மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

கமல்ஹாசனின் தீவிர ரசிகர் லோகேஷ் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Master Director Lokesh Kanagaraj next film update tomorrow

Overall Rating : Not available

Latest Post