‘மெரினா புரட்சி’ இயக்குனரின் அடுத்த அதிரடி PEARLCITY MASSACRE

‘மெரினா புரட்சி’ இயக்குனரின் அடுத்த அதிரடி PEARLCITY MASSACRE

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2017 ஆம் ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் நடந்த போராட்டத்தை நாச்சியாள் பிலிம்ஸ் நிறுவனம் ‘மெரினா புரட்சி’ என்ற ஆவணத் திரைப்படமாக தயாரித்திருந்தனர்.

M.S.ராஜ் இயக்கியிருந்தார். கடும் போராட்டத்திற்குப் பிறகு தணிக்கை பெற்ற ‘மெரினா புரட்சி’ நார்வே,கொரிய திரைப்பட விழாக்களில் விருது பெற்றது.

தற்போது நாச்சியாள் பிலிம்ஸும் தருவை டாக்கீஸும் இணைந்து 2018 மே மாதம் 22 & 23 தேதிகளில் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தை PEARLCITY MASSACRE (முத்துநகர் படுகொலை) என்ற பெயரில் புலனாய்வு ஆவணப்படமாக தயாரித்துள்ளனர்.

மெரினா புரட்சியை இயக்கிய M.S.ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் படத்தை பற்றி இயக்குனர் M.S.ராஜ்..

“PEARLCITY MASSACRE(முத்துநகர் படுகொலை) புலனாய்வு ஆவணத்திரைப்படம் உண்மையில் மே22 & 23 தேதியில் நடந்த கொடூர சம்பவங்களை சாட்சியங்களுடன் பதிவு செய்திருக்கிறது.

மேலும் அரச இயந்திரம் செய்த தவறுகளை ஆதாரங்களுடன் படமாக்கியுள்ளது.

.துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்த ஆவணப்படத்தை திரையிட்டோம். வழியும் கண்ணீரை துடைத்தபடியே படத்தை பாராட்டியவர்கள் விரைவில் நீதி வழங்க வேண்டும் என்று கோரி கையெழுத்திட்டனர்.

தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் (32 நாடுகளில்) இந்த படத்தை திரையிட்டு பார்வையாளர்களின் கையெழுத்துக்களை திரட்டி தமிழக அரசிடம் வழங்க இருக்கிறோம். நீதி கோரும் எங்களின் இந்த முயற்சிக்கு, இந்த பயணத்திற்கு ஊடகவியலாளர்களின் ஆதரவை பணிவுடன் வேண்டுகிறோம்.” என கேட்டுக்கொண்டார்.

Marina Puratchi direcor’s next is PEARLCITY MASSACRE

கதையை மாற்ற சொன்னதால் தயாரிப்பாளரை மாற்றிய தமிழ்.; நம்பிக்கையளித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோ

கதையை மாற்ற சொன்னதால் தயாரிப்பாளரை மாற்றிய தமிழ்.; நம்பிக்கையளித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த காலங்களில் அற்புதமான பொழுதுபோக்குகளை வழங்கிய டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், தற்போது இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள “டாணாக்காரன்” படத்தை, திரைப்பட ஆர்வலர்களுக்காக ஏப்ரல் 8, 2022 அன்று பிரத்யேகமாக வழங்குகிறது.

இப்படத்தின் ட்ரெய்லர் மார்ச் 31 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அனைத்து சமூக வலைத்தள பக்கங்களிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் தமிழின் அட்டகாசமான மேக்கிங், நடிகர்களின் அற்புத நடிப்பு, இதுவரை பார்த்திராத வித்தியாசமான காட்சிகள் என படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் பாராட்டுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர் மற்றும் லால் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ஃபிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார். காவல் துறை சார்ந்த எண்ணற்ற திரைப்படங்களை தமிழ் சினிமா பார்த்திருந்தாலும், டாணாக்காரன் பார்வையாளர்களுக்கு அறிமுகமில்லாத ஒரு புதிய பார்வையை, ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும்.

இயக்குநர் தமிழ் படம் குறித்து கூறும்போது..,

“என்னுடைய படத்துக்கு இத்தனை ஆசீர்வாதங்கள் கிடைத்திருப்பது என்னைப் போன்ற ஒரு இயக்குநருக்கு மிகவும் பெருமை.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இந்திய ஓடிடி தளங்களில் சிறந்து விளங்கும் முன்னணி ஓடிடி அடையாளமாக மாறியுள்ளது, அத்தளத்தில் சிறந்த திரைப்படங்கள் சிறப்பாக அங்கீகரிக்கப்பட்டு, பரந்த அளவில் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

டாணாக்காரன் திரைப்படத்தின் மீது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆர்வம் காட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

கதையின் மீது நம்பிக்கை வைத்த எனது தயாரிப்பாளர்களான S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு, P.கோபிநாத் மற்றும் R.தங்க பிரபாகரன் ஆகியோருக்கு நன்றி.

இந்த ஸ்கிரிப்டை வைத்து நான் பல தயாரிப்பு நிறுவனங்களை அணுகியபோது, முதலில் அனைவரும் தயங்கினர், திரைக்கதையில் பல மாற்றங்களை செய்யப் பரிந்துரைத்தனர்.

ஆனால், பொட்டன்ஷியல் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர்கள் அத்தகைய மாற்றங்கள் எதையுமே சொல்லவில்லை, இது எனக்கு மிகுந்த ஆச்சரியம் அளித்தது.

மேலும் எனது இயக்கத்தில் எந்த குறையும் வராமல் இருக்க, அவர்கள் ஒரு பெரிய பட்ஜெட்டை படத்திற்காக செலவழித்தனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்த விக்ரம் பிரபு சாருக்கு நன்றி.

அவர் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார், மேலும் அவரது நடிப்பை பார்வையாளர்கள் விரும்புவார்கள், பெரிதும் பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

அஞ்சலி நாயர், லால் சார், எம்.எஸ்.பாஸ்கர் சார் மற்றும் இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞர்களும் படத்தின் தரத்தை உயர்த்தி இருக்கிறார்கள். ஏப்ரல் 8, 2022 முதல், ரசிகர்களின் பாராட்டை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

நடிகர் விக்ரம் பிரபு கூறும்போது…

“டாணாக்காரன்’ என்ற தலைப்பே மிகவும் அழுத்தமாக இருந்தது, இந்த ஸ்கிரிப்டை கேட்ட பிறகு, இதில் நடித்தே ஆக வேண்டும் என முடிவு செய்தேன், ஒரு நடிகராக எனது திறமையை வெளிப்படுத்தும் படைப்பாக இருக்கும். தமிழ் திரையுலகில் படைப்பாற்றல் மற்றும் திறமையாளர்களை கண்டெடுத்து, வளர்க்கும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் போன்ற தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிவது, ஒரு அற்புதமான அனுபவம்.

தயாரிப்பாளர்களின் ஆதரவு இல்லையென்றால், டாணாக்காரன் இவ்வளவு திருப்திகரமான வெளியீட்டைக் கண்டிருக்க முடியாது.

இயக்குநர் தமிழ் இந்தப் படத்தை தன் உயிராக வடிவமைத்து, மிக அற்புதமான படைப்பாகச் செதுக்கியுள்ளார். டாணாக்காரன் படத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்திருக்கும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் வெளியீட்டுக்கு நன்றி.

டாணாக்காரன் மூலம் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவம் கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சரியான இடத்தை தேடி இயக்குநர் தமிழ், தமிழ்நாடு மற்றும் கேரளா முழுதும் 40 நகரங்களுக்கு மேல் பயணத்துள்ளார். ஒட்டுமொத்தக் குழுவும் தீவிரமான முன் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டது. இறுதியாக, இயக்குனர் வேலூரில் உள்ள ஒரு பள்ளியை தனது கதையின் பின்னணிக்கு ஏற்றதாகத் தேர்ந்தெடுத்தார்.

குழுவினர் இப்படத்திற்காக நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொண்டு கடினமாக உழைத்துள்ளனர்.

இப்படத்தின் அணிவகுப்பு காட்சிகளுக்கு தீவிர பயிற்சி தேவைப்பட்டது. இயக்குனர் சாதாரண நடிகர்களுக்கு பதிலாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், காவலர்கள் மற்றும் போலீஸ் பயிற்றுனர்களை தேர்வு செய்து அக்காட்சிகளில் நடிக்க வைத்துள்ளார்.

கடின உழைப்பில், இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் புதுமுக கலைஞர்கள் பலரை வைத்து வெறும் 50 நாட்களில் படத்தை முடித்துள்ளார் இயக்குநர் தமிழ்.

நடிகர் விக்ரம் பிரபு, இந்த கதையும் கதாபாத்திரங்களைக் கேட்டு மிகவும் ஈர்க்கப்பட்டு, படத்திற்காக கடின உழைப்பை தந்துள்ளார். விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றிருக்கும் திரைப்பட இயக்குநரும் நடிகருமான லால் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நாயகனைப் போலவே வலுவான லாலின் கதாபாத்திரத்தை வைத்துதான் டாணாக்காரன் திரைக்கதையை முதலில் உருவாக்கியுள்ளார் இயக்குநர் தமிழ்.

பன்முக நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், இப்படத்தில் இதயத்தைத் தொடும் பாத்திரத்தில் பாராட்டைப் பெறுவார். நாயகியாக நடிக்கும் அஞ்சலி நாயர் வெறும் காதல் நாயகியாக தோன்றவில்லை, படம் முழுவதும் அவருக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மாதேஷ் மாணிக்கம் இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். ஒரு அற்புதமான காட்சி அனுபவத்தை இப்படத்தில் வழங்கியுள்ளார், வெளியீட்டிற்குப் பிறகு, குறிப்பாக அணிவகுப்பு காட்சிகள் அவரது ஒளிப்பதிவு பெரும் பாராட்டுக்களை குவிக்கும்.

எடிட்டர் ஃபிலோமின் ராஜ் முழுப் படத்திலும் மிக அற்புதமான பணியினை செய்துள்ளார். படத்தில் ஒரு குறிப்பிட்ட அணிவகுப்புக் காட்சிக்காக எட்டு நாட்கள் இடைவிடாமல் எடிட்டிங் செய்ததன் மூலம் இந்தத் திரைப்படத்தின் மீதான அவரது தீராத அர்ப்பணிப்பு வெளிப்பட்டுள்ளது.

டாணாக்காரனை கச்சிதமாக வடிவமைப்பதில் கலை இயக்குனர் ராகவன் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

படப்பிடிப்புக்கான இடங்களைத்ட் தேடித் தேர்வு செய்யும் கட்டத்திலும் கூட இயக்குநருடன் , ராகவன் பயணித்து, ஒரு அற்புதமான காட்சி விருந்தைத் தயாரித்து வழங்கியுள்ளார், இதனால் படத்தின் காட்சிகளில் வரும் சிறிய பொருள் கூட திரைப்பத்துக்கான அமைப்பு அல்லாமல் இயற்கையாகத் தோன்றும்.

இசையமைப்பாளர் ஜிப்ரானின் பங்களிப்பு இந்தப் படத்திற்கு பெரும் தூணாக அமைந்துள்ளது. படத்தின் முதல் பிரதி காட்சிகளைப் பார்த்துவிட்டு, இந்தப் படத்தின் பின்னணி இசைக்காக 6 மாதங்கள் ஒதுக்கி இசையமைத்துள்ளார்.

தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பொழுதுபோக்கு பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மற்றும் பிரீமியம் தொடர்களை உலகளவில் ரசிகர்களுக்காக வழங்கி வரும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில், டாணாக்காரன் ஏப்ரல் 8, 2022 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

Director Tamil talks about Taanaakkaran movie at trailer launch event

‘விக்ரம்’ படத்தை தயாரித்து உரிமையை உதயநிதிக்கு விற்ற கமல்

‘விக்ரம்’ படத்தை தயாரித்து உரிமையை உதயநிதிக்கு விற்ற கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்உருவாகிய படம் “விக்ரம்”.

பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

கமல்ஹாசன், R. மகேந்திரன் இணைந்து மிகப் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இப்படம் ஜூன் 3 அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு வெளியானது.

தற்போது விக்ரம் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது.

தமிழ் திரையுலகின் பெருமைமிகு திரைப்படமாக உருவாகும் விக்ரம் படத்துடன் கைக்கோர்ப்பதில் மகிழ்ச்சி என ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

தயாரிப்பு – கமல்ஹாசன், R.மகேந்திரன் (ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்)
இயக்கம் – லோகேஷ் கனகராஜ்
இசை – அனிருத்
சண்டை பயிற்சி – அன்பறிவு
ஒளிப்பதிவு – கிரிஷ் கங்காதரன்
வசனம் – ரத்ன குமார், லோகேஷ் கனகராஜ்,
படத்தொகுப்பு – பிலோமின் ராஜ்
கலை – N.சதீஷ் குமார்
காஸ்டியூம் டிசைனர் – பல்லவி சிங், V.சாய், கவிதா.J
மேக்கப் – சசி குமார்
புரொடக்‌ஷன் கண்ட்ரோலர் – M.செந்தில்
எக்ஸிகியுடிவ் புரொடுயுசர் – S.டிஸ்னி
பப்ளிசிட்டி டிசைனர் – கோபி பிரசன்னா
சவுண்ட் டிசைன்ஸ் – SYNC Cinema
VFX – UNIFI Media, VFX Phantom, Real Works Studio
DI – IGENE
இணை இயக்குனர்கள் – மகேஷ் பாலசுப்ரமணியம், சந்தோஷ் கிருஷ்ணன், சத்யா, வெங்கி, விஷ்ணு இடவன், மெட்ராஸ் லோகி விக்னேஷ்
மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு, சதிஷ் (AIM)

Red giant movies bagged TN theatrical rights of Kamal Haasan’s Vikram

இசைஞானி வேற லெவல்.; 3 விருதுகளை வென்று மாற்றுத் திறனாளிகளுக்கு சமர்ப்பித்த ‘சைக்கோ’ தயாரிப்பாளர்

இசைஞானி வேற லெவல்.; 3 விருதுகளை வென்று மாற்றுத் திறனாளிகளுக்கு சமர்ப்பித்த ‘சைக்கோ’ தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் வெளியான ‘சைக்கோ’ படத்திற்கு, ‘2021 ஆம் ஆண்டிற்கான இசையமைப்பாளர்’,‘ 2021 ஆம் ஆண்டிற்கான பாடலாசிரியர்’, ‘2021 ஆம் ஆண்டிற்கான பாடல்’ என மூன்று பிரிவுகளில் மிர்ச்சி மியூசிக் விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது.

மிர்ச்சி மியூசிக் நிறுவனம் ஆண்டுதோறும் தென்னிந்திய திரையிசையுலகில் வெவ்வேறு பிரிவுகளில் வெற்றிப்பெற்ற கலைஞர்களுக்கு, விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

‘2021 ஆம் ஆண்டிற்கான இசையமைப்பாளர்’ என்ற பிரிவில் ‘சைக்கோ’ படத்திற்கு இசையமைத்ததற்காக ‘இசைஞானி இளையராஜா’வுக்கும், ‘2021 ஆண்டிற்கான பாடலாசிரியர் ’பிரிவில், ‘சைக்கோ’ படத்தில் இடம்பெற்ற ‘உன்ன நெனச்சு.’ எனத் தொடங்கும் பாடலை எழுதியதற்காக பாடலாசிரியர் கபிலனுக்கும், ‘2021 ஆண்டிற்கான பாடல்’ பிரிவில், ‘சைக்கோ’ படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் நிறுவனத்திற்கும் என மூன்று விருதுகளை வழங்கி கௌரவித்திருக்கிறது.

இதற்காக சென்னையில் நடைபெற்ற விழாவில் படத்தின் தயாரிப்பாளரான அருண்மொழி மாணிக்கம் கலந்துகொண்டு,‘ 2021 ஆண்டு பாடலு’க்கான விருதினைப் பெற்றுக் கொண்டார்.

அத்துடன் அந்த விருதை அனைத்தும் பார்வைத்திறன அற்றவர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் ‘மாயோன்’ என்ற பெயரில் புதிய படமொன்றை தயாரித்து வரும் இந்நிறுவனம், அதனை கோடைக் காலத்தில் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறது.

இப்படத்தின் டீஸர் இந்தியாவிலேயே முதன்முறையாக பார்வைத்திறன் சவால் உள்ளவர்களும் உணர்ந்துகொள்ளும் வகையில், பிரத்யேக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளியிடப்பட்டது.

இதற்கு மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்று, தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்திற்காக இசைஞானி இளையராஜா எழுதி, இசையமைத்த இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டது.

ஆன்மீகத்தை மையமாகக் கொண்ட இரண்டு பாடல்களும் இணையத்தில் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

இதனிடையே ‘மாயோன்’ படத்தில் இடம்பெற்ற மற்றொரு புதிய பாடல் விரைவில் வெளியாகவிருக்கிறது.

Psycho film win 3 awards at Mirchi music award

‘Beast & KGF2’ உடன் இணையும் ‘Haraa’.; தமிழ் புத்தாண்டில் விருந்தளிக்கும் விஜய்ஸ்ரீ

‘Beast & KGF2’ உடன் இணையும் ‘Haraa’.; தமிழ் புத்தாண்டில் விருந்தளிக்கும் விஜய்ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980களில் ரஜினி – கமலுக்கு நிகரான ஹீரோவாக பேசப்பட்டவர் நடிகர் மோகன்.

‘பயணங்கள் முடிவதில்லை’, ‘கோபுரங்கள் சாய்வதில்லை’, ‘விதி’, ‘மௌனராகம்’, ‘மெல்லத் திறந்தது கதவு’ என பல படங்கள் இவரது பெயரை இன்றவும் சொல்லிக் கொண்டே இருக்கும்.

இளையராஜா இசையில் உருவான இவரது பட பாடல்களும் பிரபலம். எனவே மைக் மோகன் என அழைத்தவர்களும் உண்டு்.

இவரது பல படங்கள் 175 நாட்கள் தியேட்டர்களில் ஓடி வெள்ளி விழா கண்டதால் இவரை வெள்ளி விழா நாயகன் என ரசிகர்கள் அழைப்பதுண்டு.

இறுதியாக தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியான ‘சுட்ட பழம்’ படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் தோல்வியை தழுவியதால் பின்னர் நடிக்கவில்லை.

ஆனாலும் ஹீரோ வாய்ப்புக்காக மட்டுமே காத்திருந்தார் மோகன்.

இவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகனை நாயகனாக்குகிறார் ‘தாதா 87’ பட இயக்குனர் விஜய் ஸ்ரீ.

‘ஹரா’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் 2022 புத்தாண்டில் வெளியிட்டனர்.

இந்த படத்தை கோவை எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தில் மோகனுக்கு ஜோடியாக குஷ்பூ இணைந்திருக்கிறார். இந்த ஜோடி தமிழில் இணைவது முதன்முறை என்றாலும் 33 வருடங்களுக்கு முன்பு 1988ல் வெளியான ‘ஆத்ம கதா’ என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்து இருந்தனர்.

1980-90களில் மோகன் மற்றும் குஷ்பூ முன்னணி நட்சத்திரங்களாக இருந்த போதும் இவர்கள் இணைந்து தமிழில் நடிக்கவில்லை.

‘ஹரா’ படத்தில் முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்கவுள்ளார்.

இந்த படம் தந்தை மகள் சென்டிமென்ட் கதையில் உருவாகிறது.

2022 தீபாவளிக்கு ‘ஹரா’ படம் ரிலீஸ் எனவும் விஜய்ஸ்ரீ அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஹரா படத்தின் டைட்டில் டீசர் வரும் ஏப்ரல் 14ஆம் தேதியில் தமிழ் புத்தாண்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் பீஸ்ட் படம் ஏப்ரல் 13 தேதியிலும் யஷ் நடித்த கேஜிஎஃப் 2 படம் ஏப்ரல் 14 தேதியிலும் ரிலீசாகவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Mohan’s Haraa joins Tamil New Year race

வங்கியை கொள்ளையடிக்கும் அஜித் டீம்..; ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்கும் வினோத்

வங்கியை கொள்ளையடிக்கும் அஜித் டீம்..; ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்கும் வினோத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேர்கொண்டப்பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து AK61 படத்திற்காக 3வது முறையாக அஜித் இயக்குனர் வினோத் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி இணைந்துள்ளது.

இந்த படத்தில் அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு நெகட்டிவ் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அவரே ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித்துடன் பாலிவுட் நடிகை தபு நடிக்கவிருக்கிறார்.

அஜித்தின் 61 வது படம் வங்கி திருட்டு & கொள்ளையர்களை மையப்படுத்தி உருவாகிறதாம்

இதற்காக ஐதராபாத்தில் சென்னை மவுண்ட் ரோடு போல ராமோஜி பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

இதன் படப்பிடிப்பு ஏப்ரல் 2ஆம் வாரத்தில் ஐதராபாத்தில் துவங்க உள்ளதாக சொல்லப்படுகின்றது.

அஜித் 61 படத்திற்கு வல்லமை என பெயரிட உள்ளதாக தகவல்கள் வந்தன.

ஆனால் வலிமை என்ற டைட்டிலோடு ஒத்துப் போவதால் இந்த டைட்டில் வேண்டாம் என அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Ajith – H Vinoth’s AK 61 update is here

More Articles
Follows