சூர்யாவின் நிலைமையை கண்டு மயங்கி விழுந்த பிரபல நடிகர்

சூர்யாவின் நிலைமையை கண்டு மயங்கி விழுந்த பிரபல நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and manobalaஇயக்குனர், காமெடி நடிகர், தயாரிப்பாளர், குணச்சித்திர நடிகர் என பன் முகம் கொண்டவர் மனோபாலா.

இவரின் சமீபத்திய பேட்டியில் சூர்யாவுடன் நடித்த அனுபவம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.

இவர் விக்ரம் தேசிய விருது பெற்ற பிதாமகன் படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்திருந்தார்.

அதில் அவர்… படத்தில் சூர்யா இறப்பதாக ஒரு காட்சி.

அன்று எனக்கு உடல்நிலை சரியில்லை. நான் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தேன.

இருந்தபோதிலும் சூட்டிங் சென்றேன்.

அப்போது என் அருகே உள்ள சாக்கு மூட்டையில் சூர்யா இருக்கிறார் என்பது எனக்கு தெரியாது.

அப்போது அவரின் அடிபட்ட முகத்தை பார்த்து நான் பயந்து அப்படியே ஷாக்காகி விட்டேன். பின் என்னையறியாமல் மயங்கி விழுந்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

பாலாவின் நாச்சியார் படத்தை திரையிட மறுத்த தியேட்டர்

பாலாவின் நாச்சியார் படத்தை திரையிட மறுத்த தியேட்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

naachiyar stillsபாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் நாச்சியார்.

இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் வெளியானது முதலே இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

பெரிய எதிர்பார்ப்பில் உள்ள இந்த படம் தமிழ்நாடு முழுவதும் அதிக்கமான தியேட்டர்களில் வெளியாகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல தியேட்டரான GK சினிமாஸில் இந்த படம் வெளியாகாது என அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார்.

தன் விநியோகஸ்ரின் ஒப்பந்தம் பற்றிய பிரச்சினை நீடிப்பதால் இந்த படத்தை திரையிட முடியாது என தெரிவித்துள்ளனர்.

We regret to inform that #Naachiyaar will not be screened in our premises due to non-agreement in terms between distributor and us!

— Ruban Mathivanan (@GKcinemas)

முதன்முறையாக சந்தானம் படத்தின் 2ஆம் பாக படம்

முதன்முறையாக சந்தானம் படத்தின் 2ஆம் பாக படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor santhanamலொள்ளு சபா’ புகழ் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம்

‘தில்லுக்கு துட்டு’.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இதன் முதல்பாகத்தை ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்து இருந்தது.

ஆனால் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ராம் பாலா சொந்தமாக தயாரிக்கவிருக்கிறாராம்.

ராம்பாலா இப்போது ‘கயல்’ சந்திரன் நடிப்பில் ‘டாவு’ படத்தை இயக்குகிறார்.

சந்தானம் ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் தங்கள் படங்களை முடித்துவிட்டு விரைவில் தில்லுக்கு துட்டு 2ஆம் பாகத்தில் இணைவார்கள் என தெரிய வந்துள்ளது.

நாயகனாக நடிக்க தொடங்கிய பின் ‘தில்லுக்கு துட்டு’ தான் சந்தானம் நடிக்கும் முதல் இரண்டாம் பாகப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

விமல்-வரலட்சுமி ஜோடிக்கு கன்னி ராசி ஒர்க் அவுட் ஆகுமா..?

விமல்-வரலட்சுமி ஜோடிக்கு கன்னி ராசி ஒர்க் அவுட் ஆகுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kanni rasi movie stillsதயாரிப்பில், எஸ்.முத்துக்குமரன் இயக்கும் இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக, வரலட்சுமி நடித்து வருகிறார்.

பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, கதைக்களத்தை அமைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.முத்துக்குமரன். இப்படத்திற்கான ஒளிப்பதிவு பணிகளை எஸ்.செல்வகுமார் மேற்கொள்ள, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ராஜா முகமது எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார்.

இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுத, கலா மற்றும் விஜி நடனம் அமைக்கின்றனர்.

இப்படம் குறித்து பேசிய இயக்குநர் “படத்தில் கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னிராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார். இந்த நிலையில் விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரூம் சந்தித்து கொள்ளும் என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள். இப்படத்தில் விமலும், வரலட்சுமியும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். படம் முழுவதுமே விமலும், வரலட்சுமியும் செய்கின்ற காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் மக்களின் பேராதரவைப் பெறுவது நிச்சயம்.” என்கிறார் இயக்குநர்.

கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் நட்சத்திரப் பட்டாளங்களுடன் கூடிய மற்றொரு படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது

தன் 3வது படத்தலைப்பை கார்த்திக் நரேன் வெளியிட்டார்

தன் 3வது படத்தலைப்பை கார்த்திக் நரேன் வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DWEjS3PV4AAssoM‘துருவங்கள் பதினாறு ‘ இயக்குநர் கார்த்திக் நரேனின் புதிய படத்தின் பெயர் இன்று 5 மணிக்கு வெளியிடப்பட்டது.

சென்ற ஆண்டில் 100 நாள் ஓடி மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த படம் ‘துருவங்கள் பதினாறு’. இப்படம் விமர்சன ரீதியிலும் வசூலிலும் பேசப்பட்ட படம் என்ற பெருமையைப் பெற்றது.

இப்படத்தை இயக்கிய கார்த்திக் நரேனின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு கூடியது. அவர் தனது அடுத்த படமாக ‘நரகாசுரனை’ இயக்கி உள்ளார் . அரவிந்த்சாமி , ஸ்ரேயா , சந்தீப் கிருஷ்ணா , ஆத்மிகா நடித்துள்ளனர். இதன் இறுதிக்கட்ட தொழில் நுட்பப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

இந்நிலையில் தன் மூன்றாவது படத்தின் அறிவிப்பைத் தனது ட்விட்டரில் கார்த்திக் நரேன் இன்று மாலை 5.00 மணிக்கு வெளியிட்டார். படத்தின் பெயர் ‘நாடக மேடை ‘ .இப்படத்தை இயக்கி
தன் ‘நைட் நாஸ்டால்ஜியா பிலிமோடெய்ன்மெண்ட் ‘ பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

ஒளிப்பதிவு – சுஜித் சரங், இசை- ரோன் ஈத்தன் யோகன் , எடிட்டிங் – ஸ்ரீஜித் சரங் , கலை – சிவசங்கர், தயாரிப்பு நிர்வாகம் – மணிகண்டன் என்று தன் பரிவாரங்களுடன் களம் இறங்கும் கார்த்திக் நரேன் ,நடிப்பவர்கள் யார் யார் என்பதை விரைவில் அறிவிக்கவுள்ளார்.
அது யாரும் எதிர்பாராத யூகிக்க முடியாத நட்த்திரக் கூட்டணியாக இருக்குமாம்.

வாய்ப்பு கேட்ட நடிகர் ராஜ்கமலை திட்டிய டைரக்டர் மிஷ்கின்

வாய்ப்பு கேட்ட நடிகர் ராஜ்கமலை திட்டிய டைரக்டர் மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajkamal and mysskinடிவி சீரியல்களில் பிரபலமானவர் நடிகர் ராஜ்கமல். இவர் டிவி நடிகை லதாராவ்வின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சண்டி குதிரை என்ற படத்தை தொடர்ந்து நாயகனாக நடித்துள்ள மேல்நாட்டு மருமகன் என்ற திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

எனவே செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது…

பல மேடைகளில் தொகுப்பாளராக இருந்துள்ளேன். ஆனால் இங்கு ஒரு நடிகராக உங்கள் நண்பனாக, தம்பியாக, மகனாக இங்கு வந்துள்ளேன்.

சினிமாதான் என் வாழ்க்கை. அது தவிர எனக்கு எதுவும் தெரியாது.

நான் டிவி சீரியல்களில் நடித்தது பெரும் குறையாக போய்விட்டது. இப்போதும் கூட 40 சீரியல்கள் வாய்ப்புகள் வந்தன.

ஆனால் சினிமாவில் நடிக்கவேண்டும் என்பதால் அதை மறுத்துவிட்டேன்.

நிறைய டைரக்டர்களிடம் வாய்ப்பு கேட்டு என் போட்டோக்களை அனுப்புவேன்.

மிஷ்கின் ஒருமுறை என்னை திட்டியே விட்டார். டேய் உனக்கு வேற வேலையே இல்லையடா? என்று கூட திட்டி இருக்கிறார்.

நான் நடிகன். நான் வாய்ப்புத்தானே கேட்க முடியும். வேற என்ன செய்ய முடியும்.” என்று உருக்கமாக பேசினார்.

More Articles
Follows