விஜய்யின் ‘லியோ’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்

விஜய்யின் ‘லியோ’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’.

இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30-ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த நிலையில் திடீரென ரத்தானது.

சமீபத்தில் ‘லியோ’ படத்தின் இரண்டாவது பாடலான `BADASS’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

‘லியோ’ திரைப்படத்தின் டிரைலர் அக்டோபர் 5-ம் தேதி நாளை மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ‘லியோ’ படத்தின் டிரைலரை ரோகிணி திரையரங்கின் பார்க்கிங்கில் வெளியிட காவல் ஆணையர் அனுமதி பெற வேண்டும் என்று கோயம்பேடு காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Big trouble for Vijays Leo Trailer screening

‘தலைவர் 170’ சூட்டிங் பூஜையுடன் ஆரம்பம்.; ரஜினி – மஞ்சுவுடன் இணைந்த டிவி நடிகர்

‘தலைவர் 170’ சூட்டிங் பூஜையுடன் ஆரம்பம்.; ரஜினி – மஞ்சுவுடன் இணைந்த டிவி நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தலைவர் 170’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க தயாராகிவிட்டார் ரஜினிகாந்த். இதன் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கப்பட உள்ள நிலையில் ரஜினிகாந்த் அங்கு சென்றுள்ளார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை ஞானவேல் இயக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங், உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று அக்டோபர் 4 தேதி ரஜினியின் லுக்கை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் ரஜினியின் ஹேர் ஸ்டைல் வித்தியாசமாக உள்ளது.

தலைவர் 170

பொதுவாகவே 1980 90 ஆண்டுகளில் ரஜினியின் ஹேர் ஸ்டைலை பின்பற்றி பல ரசிகர்கள் தங்கள் சிகை அலங்காரத்தை மாற்றி அமைத்து இருந்தனர்.

தற்போது இந்த பட பூஜை புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் ரஜினி, மஞ்சு & இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் உள்ளனர். இவர்களுடன் பிரபல டிவி நடிகர் ரக்சனும் பங்கேற்றுள்ளார்.

தலைவர் 170

TV Actor Rakshan joins with Thalaivar 170 team

செக்ஸ் இல்லாம குழந்தை பெத்துக்க சொன்ன ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ ஓடிடி ரிலீஸ் அப்டேட்

செக்ஸ் இல்லாம குழந்தை பெத்துக்க சொன்ன ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ ஓடிடி ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் அனுஷ்கா நடிப்பில் வெளியான படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’.

இந்த படத்தில் கதாநாயகனாக நவீன் பாலிஷெட்டி நடிக்க, ஜெயசுதா, முரளி சர்மா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படம் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ திரைப்படம் அக்டோபர் 5-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி

‘Miss Shetty Mr Polishetty’ movie OTT Release date revealed

JUST IN ‘தலைவர் 170’-ல் ரஜினியை புதிய லுக்கில் மாற்றிய ஹேர் ஸ்டைலிஸ்ட்

JUST IN ‘தலைவர் 170’-ல் ரஜினியை புதிய லுக்கில் மாற்றிய ஹேர் ஸ்டைலிஸ்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தலைவர் 170’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க தயாராகிவிட்டார் ரஜினிகாந்த். இதன் படபிடிப்பு கேரளாவில் தொடங்கப்பட உள்ள நிலையில் ரஜினிகாந்த் அங்கு சென்றுள்ளார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை ஞானவேல் இயக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங், உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று அக்டோபர் 4 தேதி ரஜினியின் லுக்கை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர் .இதில் ரஜினியின் ஹேர் ஸ்டைல் வித்தியாசமாக உள்ளது.

பொதுவாகவே 1980 90 ஆண்டுகளில் ரஜினியின் ஹேர் ஸ்டைலை பின்பற்றி பல ரசிகர்கள் தங்கள் சிகை அலங்காரத்தை மாற்றி அமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரஜினியின் இந்த லுக் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த ஹேர் ஸ்டைலை பிரபல ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆன ஆலிம் ஹக்கிம் செய்துள்ளார். அவரும் ரஜினியுடன் பணி புரிவது மகிழ்ச்சி. ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி” என பதிவிட்டுள்ளார்.

தலைவர் 170

Rajinis Thalaivar 170 new look goes viral

JUST IN OFFICIAL 32 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் அமிதாப்

JUST IN OFFICIAL 32 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் அமிதாப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடிப்பில் உருவாக உள்ள ‘தலைவர் 170’ படத்தில் இந்தியாவின் மிக பிரபல நட்சத்திரங்கள் இணைந்து வருவது திரையுலகை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

கடந்த ஓரிரு தினங்களில் ரஜினியுடன் நடிக்கும் கலைஞர்களை லைக்கா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

ஞானவேல் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் ரஜினியுடன் தெலுங்கு நடிகர் ரானா, மலையாள நடிகர் பகத் பாசில் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர்.

மேலும் நடிகைகள் மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங் முதன்முறையாக ரஜினியுடன் இணைகின்றனர்.

இந்த நிலையில் ஹாலிவுட் உச்ச நட்சத்திரமான அமிதாப்பச்சன் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான அமிதாப் பச்சனின் பல படங்களில் தமிழில் ரீமேக் செய்த ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மேலும் கடந்த 1991-ம் ஆண்டு இந்தியில் வெளியான ஹம் என்ற படத்தில் ரஜினிகாந்த் அமிதாப்பச்சன் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 32 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி அமிதாப்பச்சன் இணைந்து நடிக்க உள்ளநீர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் 170

Amitabh Bachchan on board for Thalaivar170 with Rajini

JUST IN பகத் & ராணா கூட்டணி.; ‘தலைவர் 170’ டைட்டில் – ஷூட்டிங் அப்டேட் தந்த ரஜினி

JUST IN பகத் & ராணா கூட்டணி.; ‘தலைவர் 170’ டைட்டில் – ஷூட்டிங் அப்டேட் தந்த ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.

ஓரிரு தினங்களாக ‘தலைவர் 170’ படத்தின் நடிக்கும் கலைஞர்கள் அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த படத்தை தயாரிக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க ஞானவேல் இயக்க அனிருத் இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தில் ரஜினியுடன் பகத்பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் 170

இப்பட சூட்டிங்கில் பங்கேற்க ரஜினிகாந்த் விமானம் மூலம் கேரளா திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது..

’ஜெயிலர்’ திரைப்படம் நான் எதிர்பார்த்தைவிட பெரும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது (ரஜினி 170) படப்பிடிப்பில் பங்கேற் செல்கிறேன். படத்துக்கு தலைப்பு பின்னர் அறிவிக்கப்படும்.

என்னுடைய 170-வது படம் நல்ல கருத்துள்ள, பிரம்மாண்டமான ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். இதனை ஞானவேல் இயக்குகிறார்.”

என்றார் ரஜினிகாந்த்.

தலைவர் 170

Thalaivar 170 Title and Shooting update

More Articles
Follows