ரஜினியை எவ்ளோ பிடிக்குமோ *பேட்ட* அப்படியிருக்கும்.: விஜய்சேதுபதி

Makkal Selvan Vijay Sethupathi talks about Petta and Rajinikanthகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட.

சன் பிக்சர்ஸ் தயாரித்து இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, சசிகுமார், நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து நடிகர் விஜய்சேதுபதி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது….

பேட்ட படம் பற்றி எதுவும் சொல்லமுடியாது. ஆனால் படம் எப்படி இருக்கும் என்பதை சொல்கிறேன்.

ரஜினியிடம் ரசிக்க நிறைய விஷயங்கள். மாஸ், ஸ்டைல், ஈர்ப்பு இப்படி நிறைய. அவரை எந்தளவு பிடிக்குமோ அந்தளவு பேட்ட படம் மாஸாக இருக்கும். படம் பொங்கலுக்கு வருகிறது” என தெரிவித்துள்ளார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

பேட்ட படத்தில் ஜித்து என்ற கேரக்டர் பெயரில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இந்த போஸ்டர் நேற்று முன் தினம் வெளியானது.

Makkal Selvan Vijay Sethupathi talks about Petta and Rajinikanth

Overall Rating : Not available

Related News

பொங்கல் திருநாளும் அன்றைய தினத்தில் ரிலீசாகும்…
...Read More
சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவில்…
...Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த…
...Read More

Latest Post