‘மாவீரன்’ சிவகார்த்திகேயன் தியேட்டருக்கு வரும் நாளை அறிவித்தது படக்குழு

‘மாவீரன்’ சிவகார்த்திகேயன் தியேட்டருக்கு வரும் நாளை அறிவித்தது படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவான ‘மண்டேலா’ திரைப்படம் தேசிய விருதை பெற்றது.

இந்த படத்தை அடுத்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘மாவீரன்’.

இப்படத்தின் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க இவருடன் மிஷ்கின், சரிதா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில் ‘மாவீரன்’ திரைப்படம், ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவித்து சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.

My dear brothers and sisters, see u in theatres #MaaveeranFromAugust11th 😊👍

https://t.co/P3yWVCvk2r https://t.co/TRzMmRrXHM

maaveeran movie released date augest 11

இப்படி சம்பாதிப்பதை விட மலத்தை சாப்பிடலாம் பயில்வான் ரங்கநாதன் – இயக்குநர் பாலாஜி

இப்படி சம்பாதிப்பதை விட மலத்தை சாப்பிடலாம் பயில்வான் ரங்கநாதன் – இயக்குநர் பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி இயக்கி தயாரித்த படம் ‘ஜம்பு மகரிஷி’. இந்த படம் ஏப்ரல் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதனை அடுத்து ‘ஜம்பு மகரிஷி பார்ட் 2’ பட அறிவிப்பை தற்போது அறிவித்துள்ளனர்

ஜம்பு மஹரிஷி வெற்றி பட விழாவில் அப்படத்தின் நடிகர் ,தயாரிப்பாளர், இயக்குனர் பாலாஜி பூபாலன்,கேமராமேன் பகவதி பாலா, படவிநியோகஸ்தர் ஜெனிஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

இப்படத்தின் வெற்றி விழாவில் கேக் வெட்டி கொண்டாடினர்.

படத்திற்கு தாங்கள் நினைத்ததை விட நல்ல ரெஸ்பான்ஸ் உள்ளதென்றும் படத்தின் திரையரங்குகளின் எண்ணிக்கை 125 ஆக அதிகமாகி உள்ளது என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.

அப்போது பயில்வான் ரங்கநாதன் பற்றி ஒரு நிருபர் கேட்ட போது ஆவேசப்பட்ட இயக்குனர்.. “பெண்களை சாமி மாதிரி வணங்கும் நாடு நம்நாடு. பயில்வான் ரங்கநாதன் பெண்களைப் பற்றி இழிவாக பேசுவது தவறான செயல்.

இப்படி பேசி பணம் சம்பாதிப்பதை விட அவர் மலத்தை சாப்பிடுவதே மேல் என ஆதங்கப்பட்டார்.

பெண்கள் அனைவரையும் நாம் சகோதரிகளாக பார்க்கிறோம் எனவும் கூறினார். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கூறினார்.

பட வெற்றி விழாவில் ஜம்பு மஹரிஷி 2ம் படம் விரைவில் உருவாக உள்ளதாக இயக்குனரும் தயாரிப்பாளருமான பாலாஜி தெரிவித்தார்.

ஜம்பு மகரிஷி

Jambu Maharishi Part 2 update given director balaji

OFFICIAL விஷால் – ஹரி – கார்த்திக் சுப்புராஜ் புதிய கூட்டணி

OFFICIAL விஷால் – ஹரி – கார்த்திக் சுப்புராஜ் புதிய கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஹரி இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் ‘யானை’.

விஷால் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘லத்தி’. விரைவில் மார்க் ஆண்டனி என்ற படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் விஷால் மற்றும் ஹரி கூட்டணியின் புதிய பட அப்டேட் வெளியாகியுள்ளது.

விஷால் நடிப்பில் உருவான தாமிரபரணி (2007) மற்றும் பூஜை (2014) ஆகிய இரு படங்களை இயக்கியவர் ஹரி.

இந்த இரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ளது.

இந்த படத்திற்கு தற்காலிகமாக விஷால் 34 என தடைப்பிடப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மேலும் ஜி ஸ்டூடியோ நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று ஏப்ரல் 23ஆம் தேதி காலை வெளியானது.

Vishal and Hari alliance movie Karthik Subbaraj Producer

‘ருத்ரன்’ பட கதையைப் போலவே முதியோர்களுடன் கொண்டாட்டம்.; லாரன்ஸ் – சரத்குமார் பங்கேற்பு

‘ருத்ரன்’ பட கதையைப் போலவே முதியோர்களுடன் கொண்டாட்டம்.; லாரன்ஸ் – சரத்குமார் பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னணி தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்எல்பி பேனரில் தயாரித்து ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் உள்ளிட்டோரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ருத்ரன்’.

இப்படம் வெற்றி அடைந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக தொடர்ந்து இரண்டாவது வாரமாக தமிழகம் எங்கும் முத்திரை பதித்து வருகிறது.

இந்த வெற்றியை தொடர்ந்து சென்னை அம்பத்தூரில் உள்ள ஆனந்தம் முதியோர் இல்லத்திற்கு இன்று சென்ற ராகவா லாரன்ஸ், சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர், மற்றும் கலை இயக்குநர் ராஜு உள்ளிட்ட படக்குழுவினர், அங்கு வசிக்கும் சுமார் 300 மூத்த குடிமக்களுடன் உரையாடி அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கினர். ‘ருத்ரன்’ திரைப்படத்தின் வெற்றியை அங்குள்ளவர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியின் போது பேசிய ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார், ருத்ரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு திரைப்படத்தின் வெற்றியை இதுபோன்று பயனுள்ள முறையில் கொண்டாடுவது மிகுந்த மன மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிப்பதாக கூறினர்.

இப்படத்தின் மையக்கருவே வயது முதிர்ந்த பெற்றோர்களை அவர்களது பிள்ளைகள் முதியோர் இல்லத்தில் விட்டு விடாமல் நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என்பது தான் என்பதால் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுடன் திரைப்பட வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

‘காஞ்சனா’ வெற்றிக்குப் பின்னர் 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் இணைந்து ‘ருத்ரன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் தவிர, பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ், காளி வெங்கட் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன் கலந்த பொழுதுபோக்கு கதையான‌ ‘ருத்ரன்’ திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆண்டனி படத்தொகுப்பையும், ராஜு கலை இயக்கத்தையும், சிவா-விக்கி சண்டைக்காட்சிகளையும் கையாண்டுள்ளனர்.

இப்படத்தின் கதை, திரைக்கதையை கே.பி.திருமாறன் எழுதியுள்ளார். கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

Sarath Kumar and Raghava Lawrence attends Rudhran special event

தலைவர் 170 – 171 – 172 பட டைரக்டர்ஸ் அப்டேட்.; ரஜினியுடன் இணையும் KGF Team

தலைவர் 170 – 171 – 172 பட டைரக்டர்ஸ் அப்டேட்.; ரஜினியுடன் இணையும் KGF Team

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதன் பின்னர் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் இஸ்லாமியராக நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்க லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதன்பின்னர் ‘ஜெய் பீம்’ பட புகழ் தா.செ. ஞானவேல் இயக்கவுள்ள ‘தலைவர் 170 படத்தில் நடிக்கிறார் ரஜினி.

லைகா தயாரிக்கும் இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகவுள்ளது. இதிலும் ரஜினி இஸ்லாமியராக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தலைவர் 171’ படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தை தயாரிக்கும் நிறுவனம் எது என்பது இதுவரை முடிவாகவில்லை.

ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அல்லது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் / மைத்ரி மூவிஸ் மேக்கர் / தில் ராஜூ தயாரிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘தலைவர் 172’ படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தை ’கேஜிஎப்’ & ’காந்தாரா’ படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ரஜினி மற்றும் சுதா கொங்காராவை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவன தரப்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடந்தததாகவும் தகவல்கள் வந்துள்ளன.

KGF team joins Rajinikanth for his next

‘விளம்பரம்’ வெப்சீரிஸுக்கு திட்டமிட்டோம்.. மயில்சாமி மறைவால் குறும்படமானது – ராகுல்

‘விளம்பரம்’ வெப்சீரிஸுக்கு திட்டமிட்டோம்.. மயில்சாமி மறைவால் குறும்படமானது – ராகுல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராகுல் இயக்கத்தில் மயில்சாமி மற்றும் ரேகா நாயர் நடித்திருந்த குறும்படம் ‘விளம்பரம்’.

இந்த குறும்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குனர் A.ராகுல் பேசும்போது,

“இந்த படத்தை ஏழு எபிசோடுகள் கொண்ட ஒரு வெப்சீரிஸ் ஆக உருவாக்குவதற்கு தான் முதலில் திட்டமிட்டோம். ஆனால் இந்த முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த இரண்டாவது நாளில் மயில்சாமி இவ்வுலகை விட்டு மறைந்து விட்டார்.

இதைத்தொடர்ந்து எவ்வாறு இந்த படத்தை முன்னெடுத்துச் செல்வது என்கிற தயக்கத்திலேயே சில நாட்கள் இருந்தோம். எடுத்தவரை இதை மட்டுமே ஒரு குறும்படமாக வெளியிடலாம், மக்கள் முன் கொண்டுபோய் சேர்த்து விடலாம் என தயாரிப்பாளராக என் தந்தை ஆலோசனை கூறினார்.

அவர் கொடுத்த நம்பிக்கையில் தான் இதை குறும்படமாக மாற்றினோம். மயில்சாமி சாரிடம் இந்த கதையை கூறியபோது அவர் என்னிடம், எல்லோரும் எனக்கு பெரும்பாலும் ஒரே விதமான கதாபாத்திரங்களையே கொடுத்து நடிக்க வைக்கின்றனர்.

இதுபோன்ற கதாபாத்திரங்கள் நிறைய பண்ண வேண்டும்.. நிச்சயமாக நாம் இருவரும் இணைந்து ஜெயிப்போம் என்று சொன்னார்.. அவர் சொன்னது போல ஜெயித்து விட்டோம்” என்று கூறினார்.

நடிகர்கள்

மயில்சாமி, ரேகா நாயர், சுகைல், இப்ராஹீம்,ராம் மற்றும் பலர்

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு ; அசோக்குமார்

இயக்குனர் ; A.ராகுல்

இசை ; கார்த்திக் ராஜா

ஒளிப்பதிவு ; அசோகர்

படத்தொகுப்பு ; இம்ரான்.S

கலை ; பிரதீப்

மக்கள் தொடர்பு ; M.P.ஆனந்த்

Due to sudden demise of mayil samy vilambaram becomes short film – Rahul

More Articles
Follows