மாரி 2 உடன் மோதும் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்

dhanush and vishnuபாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாரி 2’ படத்தை தயாரித்து நடித்துள்ளார் தனுஷ்.

இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப், டோவினோ தாமஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

அராத்து ஆனந்தி என்ற கேரக்டரில் ஆட்டோ டிரைவராக சாய் பல்லவி நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதே நாளில்தான் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்துள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படமும் திரைக்கு வருகிறது.

ரெஜினா கஸாண்ட்ரா நாயகியாக நடித்துள்ள இப்படத்தை எழிலிடம் உதவியாளராக இருந்த செல்லா இயக்கி உள்ளார்.

ஒதில் ஒரு பாடலுக்கு ஓவியா குத்தாட்டம் போட்டுள்ளார்.

சென்சாரில் இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

Overall Rating : Not available

Latest Post