‘தர்பார்’ படத்தில் சர்ச்சைக்குரிய சசிகலா டயலாக்ஸ் நீக்கம்

‘தர்பார்’ படத்தில் சர்ச்சைக்குரிய சசிகலா டயலாக்ஸ் நீக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyca removed Controversial Sasikala dialogues from Darbarரஜினி – முருகதாஸ் – அனிருத் கூட்டணியில் வெளியான படம் தர்பார்.

இதில் நீண்ட நாட்களுக்னு பிறகு ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

இப்பட ஒரு காட்சியில் மற்றொரு போலீஸ் இப்போ எல்லாம் ஜெயில் கைதி ஷாப்பிங் போகிறார்கள் என்பார்.

இந்த வசனம் சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக சிறையிலிருக்கும் சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

மேலும் சசிகலா தரப்பு வழக்கறிஞரும் இந்த வசனத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், அந்த சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க தயார் என்று லைகா அறிவித்துள்ளது.

அதில்…. எங்களின் தர்பார் திரைப்படத்தில் கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ அல்லது யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல.

இருப்பினும் அந்த குறிப்பிட்ட சில வார்த்தைகள் சிலரது மனதை புண்படுத்துவதுவாக தெரியவந்ததால், அது படத்திலிருந்து நீக்கப்படுவதாக தெரிவித்துக் கொள்கிறோம்’ இவ்வாறு லைகா நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Lyca removed Controversial Sasikala dialogues from Darbar

விக் இல்லாமல் நடிக்க ரஜினி ரெடியா.? பப்ஜி டைரக்டர் விஜய்ஸ்ரீ கேள்வி

விக் இல்லாமல் நடிக்க ரஜினி ரெடியா.? பப்ஜி டைரக்டர் விஜய்ஸ்ரீ கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sri asked Will Rajini act without Wig சாருஹாசன், ஜனகராஜ் நடிப்பில் வெளியான ‘தாதா 87’ படத்தை இயக்கியவர் விஜய்ஸ்ரீ ஜி.

இவர் தற்போது பிக்பாஸ் புகழ் பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG – பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இவரின் சமீபத்திய பேட்டியில் ரஜினி குறித்து பேசியுள்ளார்.

அதில்… நிறைய திறமையான சீனியர் நடிகர்களை நாம் மறந்துவிட்டோம். புதுமுகங்களை தேடியே பல இயக்குனர்கள் அலைகிறார்கள். நல்ல நடிகர்களை கண்டு கொள்வதில்லை.

தாதா 87 படத்தில் 87 வயது சாருஹாசனை நடிக்க வைத்தேன். ஜனகராஜை நடிக்க வைத்தேன்.

ஒருவேளை ரகுவரன் உயிரோடு இருந்தால் அவரையும் நடிக்க கேட்டு இருப்பேன். நடிகர் மோகனை நடிக்க அழைத்துக் கொண்டு இருக்கிறேன்.

அதுபோன்ற டான் படத்தில் ரஜினி சம்மதித்தால் அவரை நடிக்க வைத்திருப்பேன். ஆனால் ரஜினி விக் இல்லாமல் நடிக்க சம்மதிப்பாரா? என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Vijay Sri asked Will Rajini act without Wig

விந்து தானத்தை மையப்படுத்தும் ‘தாராள பிரபு’ ஹரிஷ் கல்யாண்

விந்து தானத்தை மையப்படுத்தும் ‘தாராள பிரபு’ ஹரிஷ் கல்யாண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vicky Donor Tamil remake titled Dharala Prabhu ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‛விக்கி டோனர்’.

ஆயுஸ்மான் குரானா, யாமி கவுதம் ஆகியோர் நடித்திருந்த இந்த படம் விந்து தானத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

தற்போது இந்த படத்தை தமிழில் ‛தாராள பிரபு’ என்ற பெயரில் ரீ-மேக் செய்ய ஹரிஷ் கல்யாண் மற்றும் தன்யா ஹோப் ஜோடியாக நடிக்கின்றனர்.

கிருஷ்ண மாரிமுத்து என்பவர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த போஸ்டரில் தாமரை மலரில் ஹரிஸ் கல்யாண் மூன்று தலைகளுடன் உள்ளார். அவருடன் நிறைய பச்சிளம் குழந்தைகள் உள்ளனர்.

இது கடவுள் பிரம்மாவை போன்று உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பட தலைப்பில் விந்து குறியீடும் இடம் பெற்றுள்ளது.

இந்த படம் நிச்சயம் சர்ச்சைகளை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

Vicky Donor Tamil remake titled Dharala Prabhu

ரஜினி மீது என் கண்கள்; அவர்தான் இந்திய சூப்பர் ஸ்டார்.. – குஷ்பூ

ரஜினி மீது என் கண்கள்; அவர்தான் இந்திய சூப்பர் ஸ்டார்.. – குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Khusboo talks about Rajini and his style in Darbar movieலைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உலகமெங்கும் வெளியானது.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தலைவர் 168 படத்தில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்துள்ள குஷ்பு மற்றும் மீனா, நைனிகா ஆகியோர் தர்பார் படத்தை பார்த்துள்ளனர்.

இந்த படம் குறித்து குஷ்பூ கூறியதாவது…

“ரஜினிகாந்த் காந்தம் போல ஈர்க்கிறார். அவர் மீதுதான் என் கண்கள் இருந்தன. அவர் தான் இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார். தர்பார் படம் பொங்கல் விருந்து. முருகதாஸுக்கு நன்றி” என குஷ்பு தெரிவித்துள்ளார்.

ச்சும்மா கிழி..பொங்கல் சமயத்தில் தீபாவளி விருந்து. தர்பார் விமர்சனம் இங்கே (4/5)

Khusboo talks about Rajini and his style in Darbar movie

பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ் பங்கேற்கும் ‘இருவர்’ என பெயரிடப்பட்டுள்ள ‘மடை திறந்து – 3’ இசை நிகழ்ச்சி

பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ் பங்கேற்கும் ‘இருவர்’ என பெயரிடப்பட்டுள்ள ‘மடை திறந்து – 3’ இசை நிகழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Srinivas Vijay Prakashபிரபல பின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ் ஆகியோர் ‘மடை திறந்து – 3’ ல் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சி வருகின்ற 11 ஜனவரி 2020, சனிக்கிழமை அன்று ‘கோர்ட்யார்ட்’, பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, சென்னையில் நடைபெறுகிறது.

‘மடை திறந்து’ என்பது ‘NOISE AND GRAINS’ நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற 12 இசை நிகழ்ச்சிகளைக் கொண்ட ஒரு தொடராகும். உங்களுக்கு பிடித்த பாடல்களுக்குப் பின்னால் இருக்கும் சுவையான, சுவராஸ்யமான சம்பவங்களை உங்களுக்கு பிடித்த பாடகர்களே பகிர்ந்துக் கொள்வார்கள் என்பது இந்த இசை நிகழ்ச்சி தொடரின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

‘NOISE AND GRAINS’, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நேரடி நிகழ்ச்சிகள், உண்மை நிகழ்ச்சிகள், மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சிகளுக்கு உருவாக்கம், தயாரித்து வழங்குவதில் ஈடுபட்டுவரும் ஒரு தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் ஏ ஆர் ரஹ்மானின் ‘நெஞ்சே எழு’, இளையராஜாவின் ‘இளையராஜா 75’, அனிருத்தின் ‘சிங்கப்பூர் லைவ்’, எஸ் பி பாலசுப்பிரமணியம் – யேசுதாசின் இசை நிகழ்ச்சிகள் மற்றும் ‘மடை திறந்து’ இசை நிகழ்ச்சி தொடர்களை நடத்தியவரும் பெருமைக்குரியது. பிப்ரவரி மற்றும் மார்ச் 2020 இல் பாடகர் சித் ஸ்ரீராமுடன் ஒரு தென்னிந்திய இசை சுற்றுப்பயணத்தையும் நடத்தவிருக்கிறது.

இந்த தொடரின் முதல் அத்தியாயத்தில் ஆண்ட்ரியா மற்றும் சின்மயி ஆகியோர் இடம் பெற்றிருந்த நிலையில் முன்னணி பாடகர் ஹரிஹரன் இரண்டாவது அத்தியாயத்தில் பங்கேற்றார்.

“இருவர்” என பெயரிடப்பட்டுள்ள இந்த மூன்றாவது அத்தியாயத்தில் தென்னிந்தியாவின் முக்கிய பாடகர்கள், சீனிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ் ஆகியோருடன் இணைந்து வளர்ந்து வரும் இளம் பாடகர்களான சரண்யா சீனிவாஸ் மற்றும் ஹரிப்ரியா ஆகியோர் இடம் பெறுகின்றனர். இந்த இசை நிகழ்ச்சி வருகின்ற 11 ஜனவரி 2020 ஆம் தேதி மாலை 06.00 மணிக்கு பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி கோர்டியார்டில் நடைபெறுகிறது.

இந்த இசை நிகழ்ச்சிக்கான உங்களது அனுமதி சீட்டுக்களை www.grabmyticket.com என இணையதளத்தில் பெறலாம்.

மூன்றாம் வாரத்தில் வெற்றிநடைபோடும் “வி1”

மூன்றாம் வாரத்தில் வெற்றிநடைபோடும் “வி1”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

V1 movieபுதிய முயற்சி பாராட்டும்படி இருந்தால் அதற்கான பாராட்டையும் அங்கீகாரத்தையும் என்றும் அளவில்லாமல் அளிப்பதில் முதன்மையானவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். அவர்களின் அன்பால் “வி1” திரைப்படம் தற்போது மூன்றாம் வாரத்தில் முன்னோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றது.

பல எதிர்பார்ப்புகளோடு இன்று வெளியாகியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “தர்பார்” படம் வெளியான இந்நாளிலும் “வி1” திரைப்படம் சில திரையரங்குகளில் திரையிடப்படுவது பெரும் மகிழ்ச்சி என்கின்றனர் “வி1” படக்குழுவினர்.

இந்த வெற்றிக்கு வித்திட்ட அனைத்து ரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை “வி1” படக்குழு தெரிவித்துக்கொள்கிறது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தங்களது புதிய பட அறிவிப்பை மிக விரைவில் “வி1” படக்குழு தெரிவிக்கவுள்ளது.

More Articles
Follows