தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பரதன் இயக்கத்தில் தனது 60வது படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
இதில் விஜய்யுடன் முதன்முறையாக கீர்த்தி சுரேஷ் மற்றும் அபர்ணா வினோத் இருவரும் நடித்து வருகின்றனர்.
தற்போது இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக விரைவில் வெளிநாடுகளுக்கு செல்லவிருக்கின்றனர்.
இப்படத்தை முடித்துவிட்டு, சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்கக்கூடும் என செய்திகள் வந்தன.
ஆனால் விஜய் 61 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்யின் கத்தி படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.
தற்போது ரஜினியின் 2.ஓ மற்றும் கமலின் சபாஷ் நாயுடு படங்களை லைகா தயாரித்து வருவது தங்களுக்கு நினைவிருக்கலாம்.