தமிழகத்தில் பிறந்த தெலுங்கு நடிகரின் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட லிங்குசாமி

தமிழகத்தில் பிறந்த தெலுங்கு நடிகரின் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட லிங்குசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஆனந்தம்’, ’ரன்’ ’சண்டக்கோழி’ ’பையா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் லிங்குசாமி.

இவர் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தனேனியை நாயகனாக வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு … ‘RAPO-19’ என்ற டைட்டிலோடு ஹைதராபாத்தில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

போலீஸ் டிபார்ட்மெண்ட் பின்னணியில் இந்த படம் உருவாகிறது.

இந்த பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியானது.

இந்த படத்திற்கு ’தி வேரியர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ராம் பொத்னேனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ‘மிருகம்’ ஆதி பினிஷெட்டி இதில் முரட்டுத்தனமான வில்லனாக நடிக்கிறார்.

பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்னேனி முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளதாம்.

‘ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்’ பேனர் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி – பவன் குமார் இருவரும் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறார்கள்.

‘கிருத்தி ஷெட்டி’ தான் ஹீரோயினாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் ‘அக்ஷரா கவுடா’ நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்திற்கு பிளஸ் ஆக இருக்கும்.

இந்தாண்டு ஏப்ரல் மாதம் ‘தி வாரியர்’ படம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் ராம் பொத்தினேனி என்பது குறிப்பிடத்தக்கது.

Lingusamy released Ram Pothneni’s movie first look poster

‘பீஸ்ட்’ ரிலீஸ் தேதி இதான்ப்பா…; கன்பார்ம் செய்த காமெடியன்

‘பீஸ்ட்’ ரிலீஸ் தேதி இதான்ப்பா…; கன்பார்ம் செய்த காமெடியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’பீஸ்ட்’.

நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, ரெடின் கிங்ஸ்லி. விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இப்பட சூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

இன்னும் ஓரிரு மாதங்களில் திரைக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் இதில் நடித்துள்ள காமெடியன் ரெடின் கிங்ஸ்லி இத்ன் ரிலீஸ் தகவலை தெரிவித்துள்ளார்.

பிரபல டிவிக்கு அவர் பேட்டி அளிக்கும்போது ’’பீஸ்ட்’ ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் திரைக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

கேஜிஎஃப் 2 உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸை குறிவைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Beast actor reveals movie release date

வஉசி.. பாரதியார், வேலு நாச்சியாரை தெரியாது..; தென்னிந்தியாவில் கர்நாடகாவுக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி

வஉசி.. பாரதியார், வேலு நாச்சியாரை தெரியாது..; தென்னிந்தியாவில் கர்நாடகாவுக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா இந்தியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் அந்தந்த மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம்.

இதில் சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களின் போராட்டங்கள் குறித்த சிறப்புகளை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் இடம்பெறும்.

இந்த அலங்கார ஊர்திக்காக இந்திய மாநிலங்கள் மாடல்களை அனுப்பியிருந்தன.

அதில் 12 மாநிலங்களின் மாடல்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மாநில மாடல்களுக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழக அரசு சார்பிலும் குடியரசு தினவிழாவில் இடம் பெற அலங்கார ஊர்தி மாடல்கள் அனுப்பப்பட்டுள்ளது.

4வது சுற்று வரை சென்ற நிலையில் தமிழக அரசின் அலங்கார வாகனம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதில், சுதந்திர போராட்டத் தியாகிகளான கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி, வீரமங்கை வேலு நாச்சியார், பாரதியார் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றன.

ஆனால் இந்த தலைவர்கள் தேசிய அளவில் மிகவும் பிரபலமானவர்கள் இல்லை என கூறி மத்திய அரசு நிராகரித்துவிட்டதாம்.

தென்னிந்தியாவில் தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கர்நாடகா அரசின் அலங்கார ஊர்திக்கு மட்டும் மத்திய அனுமதி அளித்துள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசே கர்நாடகாவிலும் ஆட்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Rejection of Tamil Nadu Tableau Vehicle In the Republic Day Prade 2022

வின்னர் ராஜூவுக்கு கிடைத்த லட்சங்கள் எவ்ளோ.?.. 5 சீசன் போட்டியாளர்கள் பங்கேற்க இனி 24 மணி நேரமும் ‘பிக்பாஸ்’-தான்

வின்னர் ராஜூவுக்கு கிடைத்த லட்சங்கள் எவ்ளோ.?.. 5 சீசன் போட்டியாளர்கள் பங்கேற்க இனி 24 மணி நேரமும் ‘பிக்பாஸ்’-தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகமானது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க ஆரம்பித்தார். அவரின் பேச்சுக்காகவும் மேனரிசத்துக்காவும் பலர் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில், ஆரவ் 2017 டைட்டில் வின்னர் ஆனார். இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார்.

இரண்டாவது சீசனில் ரித்விகா 2018, மூன்றாவது சீசனில் முகேன் 2019, நான்காவது சீசனில் ஆரி 2020, ஐந்தாவது சீசனில் ராஜுவும் 2021 டைட்டில் வின்னர்களாக அறிவிக்கப்பட்டனர்.

நேற்று நடந்து முடிந்த பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் சீரியல் நடிகர் ராஜூ பிக்பாஸ் டைட்டிலை கைப்பற்றினார். அவருக்கு பரிசாக ரூ.50லட்சம் கிடைத்துள்ளது.

மேலும் 16 வாரங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கு ஊதியமாக அவருக்கு ரூ.21 லட்சம் கிடைத்துள்ளது. ஆக மொத்தம் ரூ.71 லட்சத்துடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து ராஜு வெளியேறியிருக்கிறார்.

பிரியங்கா இரண்டாவதாகவும், பாவ்னி மூன்றாவதாகவும் இந்த போட்டியில் வெற்றி பெற்றனர்.

பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தன்னுடைய நினைவு பரிசை வழங்கினார் கமல்.

ராஜூவுக்கு பேனா, பிரியங்காவுக்கு மைக் ட்ராஃபி, நிரூப்க்கு தொப்பி, அமீருக்கு ஷூ, பாவ்னிக்கு கைக்கடிகாரம் ஆகியவை வழங்கப்பட்டன.

இந்த நிலையில் ஹிந்தியைப் போல தற்போது தமிழிலும் ஓடிடி-க்கென பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர். இது விடிய விடிய ஒளிப்பரப்பாகவுள்ளது.

இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார். கூடவே பிக்பாஸும் இணைகிறார். அவருக்குத்தான் இனி நிறைய வேலை இருக்கும் என கமல்ஹாசன் புரோமோவில் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் பைனலில் இதன் அறிவிப்பை அதற்கான லோகோவுடன் BIGG BOSS ULTIMATE வெளியிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.

இதனை முன்னிட்டு இதுவரை நடந்து முடிந்த 5 சீசன்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி அனிதா சம்பத், ஜூலி, வனிதா, பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

Bigg Boss Tamil OTT to stream on Disney+ Hotstar from this date

பிக்பாஸ் சீசன் 5 ஓவர்..; மீண்டும் ஆஸ்பத்திரியில் கமல்ஹாசன் அனுமதி

பிக்பாஸ் சீசன் 5 ஓவர்..; மீண்டும் ஆஸ்பத்திரியில் கமல்ஹாசன் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2021 நவம்பரில் அமெரிக்கா சென்று திரும்பினார் நடிகர் கமல்ஹாசன்.

திரும்பிய நாள் அன்றே நவம்பர் 22ம் தேதியன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் கமல்.

எனவே, சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா நம்மை விட்டு ஓடவில்லை. இங்கே தான் இருக்கிறது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தினார் கமல்ஹாசன்.

இவர் ஆஸ்பத்திரியில் இருந்த காலத்தில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

பின்னர் தீவிர சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து நேராக கமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

தமிழக சுகாதாரத்துறையும் கமலிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது.

இதன்பின்னரும் கமல்ஹாசன் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

105 நாட்கள் நடைபெற்ற நிலையில் நேற்று ஜனவரி 16 பிக்பாஸ் சீசன் 5 இறுதிப் போட்டி நடைபெற்றது.

இதில் ராஜூ வின்னராக அறிவிக்கப்பட்டு வெற்றிக்கோப்பையும் 50 லட்சத்திற்கான காசோலையும் அவருக்கு வழங்கப்பட்டது.

பிரியங்கா இரண்டாவதாகவும், பாவ்னி மூன்றாவதாகவும் இந்த போட்டியில் வெற்றி பெற்றனர்.

பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தன்னுடைய நினைவு பரிசை வழங்கினார் கமல். ராஜூவுக்கு பேனா, பிரியங்காவுக்கு மைக் ட்ராஃபி, நிரூப்க்கு தொப்பி, அமீருக்கு ஷூ, பாவ்னிக்கு கைக்கடிகாரம் ஆகியவை வழங்கப்பட்டன.

பிக்பாஸ் 5 சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் நடிகர் கமல்ஹாசன் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது வழக்கமான பரிசோதனை தான்.. இன்று மாலைக்குள் வீடு திரும்புவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Kamal Hassan admitted to Ramachandra Hospital for check-up

கமல் படத்தை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி் – பொன்ராம் இயக்கங்களில் ‘பிக்பாஸ்’ ஷிவானி

கமல் படத்தை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி் – பொன்ராம் இயக்கங்களில் ‘பிக்பாஸ்’ ஷிவானி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதையின் நாயகியாக நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை சரவணனுடன் சேர்ந்து இயக்கி இருந்தார் இப்பட நாயகன் ஆர்ஜே பாலாஜி.

இப்படம் கடந்த 2020-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பாதாய் ஹோ’ (2018) என்ற படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்துள்ளார் ஆர்ஜே பாலாஜி்

இப்படத்துக்கு ‘வீட்ல விசேஷங்க’ என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதே பெயரில் பாக்யராஜ் இயக்கி நடித்த படம் 1994ல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இதில் பிக்பாஸ் பிரபலம் ஷிவானி ஹீரோயினாக நடித்துள்ளார் என்பதை ஷிவானியே தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தி உள்ளார்.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் ஷிவானி.

இத்துடன் விஜய் சேதுபதி – பொன்ராம் கூட்டணியில் உருவாகும் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

ஷிவானி நாராயணன் நடிப்பில் தற்போது 3 படங்கள் உருவாகினாலும் இன்னும் எந்தப் படங்களும் ரிலீசாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Shivani team up with RJ Balaji and Director Ponram

More Articles
Follows