பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்

பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஎஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ” தமிழரசன் ”

இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

மற்றும் சுரேஷ்கோபி ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன்,கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்..

ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர்

இசை – இளையராஜா

பாடல்கள் – பழனிபாரதி, ஜெய்ராம்

கலை – மிலன்

ஸ்டண்ட் – அனல் அரசு

எடிட்டிங் – புவன் சந்திரசேகர்

நடனம் – பிருந்தா சதீஷ்

தயாரிப்பு மேற்பார்வை – ராஜா ஸ்ரீதர்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் – பாபு யோகேஸ்வரன்

தயாரிப்பு – கெளசல்யா ராணி

படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடை பெற்றது…இரண்டு கட்டமாக நடை பெற்ற படப்பிடிப்பு முடிவடைந்தது…

அதிரடி ஆக்‌ஷன் படமாக தமிழரசன் உருவாகி வருகிறது… .

இந்த படத்திற்காக இளையராஜா இசையில்

ஜெயராம் எழுதிய

“பொறுத்தது போதும்

பொங்கிட வேணும்

புயலென வா ” என்ற புரட்சிகரமான பாடலை ஜேசுதாஸ் பாட இளையராஜா இசையில் பதிவானது…

2009ம் ஆண்டு மம்முட்டி நடித்த பழசிராஜா என்ற மலையாள படத்தில் பாடிய ஜேசுதாஸ் அதற்கு பிறகு எந்த சினிமாவிலும் பாடாமல் தவிர்த்து வந்தார். இந்த தமிழரசன் படத்தில் பாடியது எங்கள் படக்குழுவினருக்கு கிடைத்த மரியாதை என்கிறது படக்குழு.

ஜேசுதாஸுக்கு பூங்கொடுத்து இளையராஜாவும் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் g.சிவா ஆகியோர் வரவேற்றனர்..

படத்தில் விஜய் ஆண்டனி பாடும் புரட்சிகரமான பாடலாக ஒலிக்கப் போகிறது.

ராகுல் தேவ், இனியா, முக்தா கோட்சே நடிப்பில் ‘காபி’

ராகுல் தேவ், இனியா, முக்தா கோட்சே நடிப்பில் ‘காபி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)‘ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில், ராகுல் தேவ், முக்தா கோட்சே, சௌந்தரராஜன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து இனியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

ஏழ்மை நிலையிலிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், மிக இளம் வயதிலேயே தனது பெற்றோரை இழந்துவிடுகிறார். வாழ்வின் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு, சமாளித்து, இலட்சியத்துடன் தனது கனவை நனவாக்க முயலும் போதும், பொறுப்புணர்ச்சியுடன் தனது தம்பியை நன்கு படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்குகிறாள். இனி சுபிட்சமாக வாழலாம், கஷ்டங்கள் தீர்ந்துவிடும் காலம் வந்துவிட்டது எனும் போது,சற்றும் எதிர்பாராத பெரும் பின்னடைவுகளையும், அதிர்ச்சிகரமான நிகழ்வுகளையும் அவள் எதிர் கொள்ள வேண்டிய சூழல் அமைகிறது. அதை அதில் எப்படி வெற்றி பெற்றாள் என்பதே கதை.

நமக்கு தெரியாமலே நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சமூக அவலத்தை இத்திரைப்படம் தோலுரித்து காட்டியிருக்கும் விதம் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. மிகவும் அத்தியாவசியமான ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திவிடும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெங்கடேஷ் எஸ் ஒளிப்பதிவு பொறுப்புகளை ஏற்றுகொள்ள, மோகன் ராஜா பாடல்களை எழுத, வெங்கட்நாத் இசை அமைத்திருக்கிறார்.
வெகு நேர்த்தியாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம், விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
ராகுல் தேவ்
முக்தா கோட்சே
இனியா
இராமச்சந்திரன் துரைராஜ்
சௌந்தரராஜன்
தரணி வாசுதேவன்
தயாரிப்பு: ஓம் சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ்
ஒளிப்பதிவு: வெங்கடேஷ் எஸ்
இசை: வெங்கட்நாத்
படத்தொகுப்பு: வெங்கட் ராஜன்
கலை: துரைராஜ் ஜி
சண்டைப் பயிற்சி: டான் அசோக்
நடனம்: விஜி சதீஷ்
பாடல்கள்: மோகன் ராஜ்
வடிவமைப்பு: யுவராஜ்

புது முக நடிகர்களுடன் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்கும் ” தோள் கொடு தோழா “

புது முக நடிகர்களுடன் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்கும் ” தோள் கொடு தோழா “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)ரோஜா மாளிகை படத்தை தயாரித்த பர்ஸ்ட் லுக் மூவிஸ் பட நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படத்திற்கு “தோள் கொடு தோழா” என்று நட்பை கெளரவப் படுத்தும் விதமாக வைத்திருக்கிறார்கள்.

கதா நாயகனாக ஜெய் ஆகாஷ் போலிஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.

மூன்று புதுமுகங்களாக ஹரி,ராகுல் ,பிரேம் நடிக்கிறார்கள்.

கதா நாயகியாக மும்பையை சேர்ந்த அக்‌ஷிதா, பெங்களூரை சேர்ந்த ஜெயஸ்ரீ நடிக்கிறார்கள்.

மற்றும் நாசர், ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, சிங்கம்புலி, முத்துக்காளை ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – கே.எஸ்.செல்வராஜ்

இசை – லியோ பீட்டர்..

எடிட்டிங் – எல்.வி.கே.தாஸ்

கலை – செந்தில்

நடனம் – அசோக்ராஜா

ஸ்டண்ட் – தளபதி தினேஷ்.

பாடல்கள் – விவேகா,சுந்தர்.

தயாரிப்பு மேற்பார்வை – P. மனோகரன்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கெளதம்.

தயாரிப்பு.. பர்ஸ்ட் லுக் மூவிஸ்

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…

படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்கிற நினைப்பில் எல்லோரும் படிக்கிறார்கள் எல்லோருக்கும் அரசாங்கத்தால் வேலை கொடுக்க முடியாது…அப்படி வேலை கிடைக்காதவர்கள் தவறான பாதைக்கு மாறி விடுகிறார்கள். அப்படி படித்த நான்கு மாணவர்களின் வாழ்க்கை பதிவு தான் தோள் கொடு தோழா.

தன்னம்பிக்கை சிந்தனையை வளர்க்கும் விதமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது..

தமிழ் புத்தாண்டு அன்று துவங்கும் இப் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்குகிறது.

படப்பிடிப்பு சென்னை, பாண்டி, ஊட்டி, கொச்சின் மற்றும் மலேசியாவில் நடை பெற உள்ளது என்றார் இயக்குனர்.

இந்த படத்தின் துவக்க விழா தமிழ் புத்தாண்டு அன்று சிறப்பாக நடந்தது.

கலைப்புலி எஸ்.தாணு, பேரரசு, ஜாக்குவார் தங்கம், ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்க ஆரம்பமானது.

தல அஜித்துடன் மோத தயாராகும் ‘காப்பான்’ சூர்யா

தல அஜித்துடன் மோத தயாராகும் ‘காப்பான்’ சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)கேவி ஆனந்த் இயக்கத்தில் மோகன்லால், சூர்யா, ஆர்யா, சாயிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் காப்பான்.

இப்படத்தின் டீசர் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. இதில் மோகன்லால் பிரதமராக நடித்துள்ளார்.

சூர்யா பல கெட் அப்புகளில் வருகிறார். தீவிரவாதி, காமண்டர், விவசாயி என அசத்துகிறார்.

இப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். தேதி முறையாக அறிவிக்கப்பட இல்லை என்றாலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள நேர் கொண்ட பார்வை படத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட உள்ளனர். எனவே 2 படங்களும் மோத வாய்ப்பு இருக்கலாம் என பேசப்படுகிறது

ரஜினிக்கு எதிர்ப்பு.?; அரசுக்கு எதிர்ப்பு.? ‘காப்பான்’ டயலாக் சர்ச்சை

ரஜினிக்கு எதிர்ப்பு.?; அரசுக்கு எதிர்ப்பு.? ‘காப்பான்’ டயலாக் சர்ச்சை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் பட டீசர் நேற்று இணையத்தில் வெளியானது.

கே.வி. ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் முக்கிய கேரக்டர்களில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை பணியை ஹாரிஸ் ஜெயராஜ் செய்துள்ளார்.

இப்படத்தின் டீசரில் மக்கள் போராட்டமே தப்புன்னா போராடும் சூழ்நிலையை உருவாக்கியவதும் தப்புதான் என சூர்யா ஒரு டயலாக் பேசுவார்.

சில மாதங்களுக்கு முன், அடிக்கடி போராட்டம் செய்தால் நாடு சுடுகாடாகி விடும் என தூத்துக்குடி போராட்டம் பற்றி பேசியிருந்தார் ரஜினிகாந்த்.

அதுபோல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவே மக்கள் போராட்டம் நடத்தினர்.

அந்த ஆலைக்கு அனுமதி கொடுத்த்து அரசு தானே.. எனவே போராட்டம் நடத்த தூண்டியவர்களா? (சூழ்நிலை) அரசை எடுத்துக் கொள்ளலாமா? எனவும் பேசப்படுகிறது.

புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல்: ‘ஒளடதம்’ தயாரிப்பாளரின் கண்ணீர்க் கதை

புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல்: ‘ஒளடதம்’ தயாரிப்பாளரின் கண்ணீர்க் கதை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து ‘ஒளடதம்’ படத்தின் தயாரிப்பாளர் கண்ணீருடன் தன் அனுபவத்தைக் கூறுகிறார். அது திரைப்படத்தை மிஞ்சும் கதையாக இருக்கிறது. நீதிமன்றம் கயவர்களின் தலையில் சம்மட்டியடி கொடுத்து தயாரிப்பாளரைக் காப்பாற்றியுள்ளது.

”ஒளடதம்” திரைப்படத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை நீக்கம்..
கடந்த நான்கு மாதங்களாக
சென்னை உயர்நீதி மன்றத்தால் தடை செய்து வைக்கப்பட்டிருந்த
ஒளடதம் திரைப்படம்
அத்தடையிலிருந்து விடுதலை பெற்றுள்ளது.
ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் சார்பாக நேதாஜி பிரபு தயாரிப்பில் ரமணியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒளடதம்.
நான்கு மாதங்களுக்கு முன்னரே சென்சார் செய்யப்பட்டு வெளியிடத் தயாராகப் பத்திரிகைகளில் முறைப்படி தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சில கயவர்களின் உண்மைக்கு மாறான தவறான சித்தரிப்புகளால் சென்னை உயர் நீதி மன்றம் தடை விதித்தது.
பணத்தாசை பிடித்த அதுவும் சினிமாக்காரர்களை ஏமாற்றி பணம் பண்ணிவிடலாம் என்று எண்ணிய சில விஷக்கிருமிகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட சதிதான் இத்தடைக்குக் காரணம்.
இப்படத்தைத் தயாரித்த நேதாஜி பிரபு ஒரு சிறிய தயாரிப்பாளர்..அவரே கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துத் தயாரித்த படம் தான் ஒளடதம். தனது முதல் முயற்சி சிறிய பட்ஜெட் படம் என்றாலும் நல்ல கருத்துக்களுடன் ஒரு தரமான படமாக இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்து பாடுபட்டுத் தயாரித்த படம் இந்த ஒளடதம்.

இப்படத்தின் இயக்குநர் ரமணி மலையாளத் திரை உலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான டி.வி.சந்திரனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
தங்கள் கனவுகளையும் கற்பனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு போராடி வாழ்க்கையைத் துச்சமாக மதித்து சினிமா ஒன்றையே உயிர்மூச்சாக எண்ணிப் பாடுபடும் எத்தனையோ தயாரிப்பாளர் இயக்குநர் வரிசையில் இவரும் ஒருவர்.
அப்படித்தான் ஒளடதம் படமும் எடுக்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் குடும்ப வியாதி என்று சொல்லத்தக்க எழுபது மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சர்க்கரை வியாதிக்கான மாத்திரை தயாரிப்பில் நடைபெறும் சமூக விரோத நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் திரைப்படம்தான் ஒளடதம்.
தயாரிப்பாளரே இப்படத்தை வெளியிடத்தயாராய் இருந்த நிலையில் எங்கிருந்தோ வந்த சில புல்லுருவிகள் சமூகத்தின் விஷக்கிருமிகள்
உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துத்
தடை செய்து விட்டனர்…
கஷ்டப்பட்டு ஒரு திரைப்படத்தை எடுத்து முடித்து வைத்திருக்கும் புதிய தயாரிப்பாளர் ஒருவரைக் கபளீகரம் செய்து அப்படத்தைத் தனதாக்கிக் கொள்ளும் ஒரு ஏமாற்று வேலை சமீப காலமாக தமிழ்த்திரை உலகில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்தான் ஒளடதம் திரைப்படத்திற்குள்ளும்
எஸ்.அஜ்மல்கான் என்பவர் தலைமையில் விஷக்கிருமிகள் உள்ளே நுழைந்து தங்கள் ஆட்டத்தைத் தொடங்கினர்..
ஒரு ஏமாற்று எம் ஓ யு அடிப்படையில் மூன்று மாதத்திற்குள் படத்தை வெளியிடுவதாகவும் அதற்குள் பேசிய தொகையைக் கொடுத்து விடுவதாகவும் ஒப்புகொண்டு, பணத்தையும் கொடுக்காமல் மூன்று மாதத்திற்கு மேல் பல மாதங்களையும் கடத்தினர்..
சட்டப்படி அவர்களது ஒப்பந்தம் காலாவதியானபின் தயாரிப்பாளர் படத்தைத் தானே வெளியிட முன் வருகிறார்.

இந்த சமயத்தில்தான் கோடிகளில் ரூபாயைக் கொடுத்து படத்தை வாங்கியுள்ளதாகப் பொய்ப்பத்திரங்கள் தயார் செய்து, படம் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி மேற்படி அஜ்மல்கான் கோஷ்டியினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை வாங்கி விட்டனர்.
தயாரிப்பாளர் அளித்திருந்த லைசென்ஸ் போட்டோ காப்பியில் உள்ள அட்டஸ்டேஷன் கையெழுத்துக்கு மேல் கோடிகளில் ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதாக எழுதி நீதிமன்றத்தில் காட்டியுள்ளனர்..இப்படிப்பட்ட கிரிமினல் வேலைகள் நடப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதன்முறை..
எத்தனையோ போராட்டங்களுடன் படத்தை எடுத்து முடித்த நேதாஜி பிரபு சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதி அரசர் முன்னால் தனது பக்கத்தின் நியாயங்களை எடுத்துச் சொல்லி கடந்த நான்கு மாதங்களாகப் போராடி இப்பொழுது வெற்றி பெற்றிருக்கிறார்.

மேலும் குறிப்பிட்ட இந்த நபர் இதைப்போல் இன்னும் சில தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்களையும் ஏமாற்றியிருக்கிறார் என்பதை தக்க சாட்சியங்களுடன் நிரூபித்திருக்கிறார்.

இந்த விஷக்கிருமிகள் இதையே தங்களது தொழிலாக வைத்துக்கொண்டுள்ளனர் என்றும்
இனிமேல் குறிப்பிட்ட இந்த விஷக்கிருமிகளுடன் எந்தவிதத் தொடர்பும் தமிழ்த்திரையுலகினர் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் இவர்கள் கடைந்தெடுத்த ஏமாற்றுக்காரர்கள் எனவும் நீதி அரசர் தனது தீர்ப்பில் எழுதி அவர்களின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்..
இவ்வழக்கை சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள், கே.எஸ்.சாரநாத், D.வீரக்குமார் மற்றும் K.செல்வராஜ் ஆகியோர் மிகத்திறம்பட நடத்தி வெற்றி கண்டுள்ளனர்..

விரைவில் ஒளடதம் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைத் தொடங்க உள்ளதாகக் கூறுகிறார் நேதாஜி பிரபு.

More Articles
Follows