ஹீரோவானார் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி; ஹீரோயின் யார்?

Legend Saravana stores owner Aruls debut movie launchசென்னை தி.நகர் என்றாலே பெரும்பாலும் பலரின் நினைவுக்கு வருவது லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஷாப்பிங் தான்.

இந்நிறுவனத்தின் விளம்பர படங்களில் அதன் உரிமையாளர்களுள் ஒருவரான அருள் நடித்து வருகிறார். இவரை கிண்டல் செய்து பல மீம்ஸ்கள் வந்தாலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அவர் விரைவில் சினிமாவில் நடிக்க கதை கேட்டு வருவதாகவும் பல முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அடிக்கடி தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் இன்று எளிமையாக அருள் தயாரித்து நடிக்கும் முதல் பட பூஜை சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஏ.வி.எம் சரவணன் நடிகர் பிரபு, விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏ.வி.எம் சரவணன் குத்து விளக்கு ஏற்ற, எஸ்.பி. முத்துராமன் கிளாப் அடித்து சூட்டிங்கை துவக்கி வைத்தார்.

இப்படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்குகின்றனர். இவர்கள் அஜித், விக்ரம் நடித்த உல்லாசம் படத்தை இயக்கியுள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கு இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

நாயகி யார்? என்றுதானே கேட்கிறீர்கள். டாப் ஹீரோயின்ஸ் யாரும் ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் கீர்த்திகா திவாரி என்பவர் நடிக்கிறார். 2வது நாயகியாக பிரபல நடிகை ஒருவர் நடிப்பார் எனத் தெரிகிறது.

முக்கிய வேடங்களில் பிரபு, நாசர், விவேக், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா ஆகியோர் நடிக்கின்றனர்.
வைரமுத்து முதல் பாடலை எழுத, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.

இந்த படத்தில் எதிர்பாராத்தை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் இயக்குனர்கள் ஜேடி அண்ட் ஜெர்ரி.

Legend Saravana stores owner Aruls debut movie launch

Overall Rating : Not available

Latest Post