ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் லாரன்ஸ்-சிவகார்த்திகேயன்

ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் லாரன்ஸ்-சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lawrance Sivakarthikeyanஜல்லிக்கட்டு நடத்திட வேண்டும் தமிழக இளைஞர்கள் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சென்னை மெரினாவில் இதற்கான போராட்டம் விடிய விடிய இரண்டு நாட்களாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர்கள் லாரன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் நேரிடையாக போராட்டக்களத்திற்கு சென்று தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களுக்காக ரூ. 1 கோடியை தருகிறேன் என லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் திரையுலகைச் சார்ந்த பலரும் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Lawrence and Sivakarthikeyan participated in Jallikattu Protest

‘சிங்கம்’ புரமோஷனுக்காக ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார் சூர்யா – பீட்டா

‘சிங்கம்’ புரமோஷனுக்காக ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார் சூர்யா – பீட்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya supports jallikattu to promote his singam movie says PETAஜல்லிக்கட்டை தடை செய்ய முக்கிய காரணமான அமைப்பு பீட்டா.

எனவே இந்த அமைப்பின் மீது ஒட்டு மொத்த தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது.

இதனிடையில் சிங்கம் பட புரமோஷனில் ஈடுப்பட்டு இருக்கும் சூர்யா, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.

மேலும் இது தொடர்பாக அறிக்கையை வெளியிட்டு இருநதார்.

இந்நிலையில், S3 படத்தின் புரொமோஷனுக்காக ஜல்லிக்கட்டை பயன்படுத்துவதாக கூறியுள்ளனர்.

ஜல்லிக்கட்டால் பல மாடுகளும், மக்களும் இறந்துள்ளனர்.

ஒரு பட புரொமோஷனுக்காக இதை பயன்படுத்துவது மிகவும் மோசமான செயல் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

Suriya supports jallikattu to promote his singam movie says PETA

இதோ அந்த அறிக்கை…

peta suriya

“ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் போராட்டம் பெருமையே” – நயன்தாரா

“ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் போராட்டம் பெருமையே” – நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayanthara sareeஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி, பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு ஆதரவு அளிப்பதாக நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது…

ஜல்லிக்கட்டுக்கான இளைய தலைமுறையின் அமைதி போராட்டம் பெருமைப்பட வைக்கிறது

இந்தப் போராட்டம் நமது கலாச்சாரத்துக்கு எதிரான அந்நிய நாட்டு நிறுவனத்துக்கு பலத்தை காட்டும்

தமிழகத்தில் பிறக்காவிட்டாலும் எனக்கு அங்கீகாரம், அடையாளம் தந்தது தமிழ்மண்ணும், மக்களும்தான்.” என்று தெரிவித்துள்ளார்.

Nayanthara statement to support Jallikattu

முதல்வர் பேசட்டும்; முடிவு பண்றோம்… ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அதிரடி

முதல்வர் பேசட்டும்; முடிவு பண்றோம்… ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jallikattu supporters waiting for TN chief Ministers statementஜல்லிக்கட்டை எதிர்க்கும் பீட்டா அமைப்பை தடை செய்யவும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நிரந்தரமாக நடத்திட வேண்டும் என தமிழக முழுவதும் உள்ள இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுடன் போலீசார் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஒன்றிணைந்து கலையாமல் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் மீன்வளத்துறை ஜெயக்குமார் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் இருவரும் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

இளைஞர்களுடன் இணைந்து தமிழகம் அரசு போராடும்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும்.

இதற்காக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசுவோம். என்றனர்.

முதலமைச்சர் கொடுக்கும் அறிக்கையை பொறுத்து போராட்டத்தின் அடுத்த கட்ட முடிவு இருக்கும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Jallikattu supporters waiting for TN chief Ministers statement

‘அந்த அமைப்பை அனுப்’பீட்டா’ தமிழ்நாட்டுக்கே சந்தோஷம்..’- விஜய்

‘அந்த அமைப்பை அனுப்’பீட்டா’ தமிழ்நாட்டுக்கே சந்தோஷம்..’- விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்திட வேண்டும் என்றும், தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என தன்னிச்சையாக தமிழக இளைஞர்கள் போராடி வருகின்றனர்.

அவர்களுக்காக விஜய் தன் ஆதரவை வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார். அதில்….

சட்டம் என்பது மக்களுக்காகதான். கலாச்சாரத்தை பாதுகாக்கதான். பறிக்க அல்ல.

எந்த ஒரு கட்சி ஆதரவும் பின்புலமும் இல்லாமல் தமிழன் என்ற உணர்வோடு இணைந்து போராடும் இளைஞர்களுக்கு தலை வணங்குகிறேன்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களை வீட்டுக்கு அனுப்’பீட்டா’ எனக்கு சந்தோஷம்.

அந்த அமைப்பை (பீட்டா) திருப்பி அனுப்’பீட்டா’ தமிழ்நாட்டுக்கே சந்தோஷம் என விஜய் அந்த வீடியோ பதிவில் பேசியுள்ளார்.

இளைஞர்களுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு கூறியுள்ளதாவது…

இன்று ஜனவரி 18ஆம் தேதி இரவு 8 மணிக்கு பொதுமக்கள் அனைவரும் அவர்கள் வசிக்கும் பகுதிகளின் ஒரு முக்கியமான ஜங்க்ஷனை தேர்ந்து எடுத்து அங்கு அமைதியாக அமர்ந்து போராட வேண்டும்.

மருத்துவமனை, மருந்து கடை ஆகியவற்றுக்கு இடையூறு கொடுக்காத படி போராடவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Vijay and Simbu supports Jallikattu and request to ban PETA

‘பாகுபலி-2’க்கு பிறகு ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்டம்

‘பாகுபலி-2’க்கு பிறகு ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajamouliமஹதீரா, நான் ஈ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தொடர்ந்து பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கினார் ராஜமவுலி.

இப்படம் இந்தியளவில் மாபெரும் வசூல் சாதனைகளை படைத்தது.

தற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிவிட்டது.

2017 ஏப்ரல் மாதம் இப்படம் ரிலீஸ் ஆவது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் இப்படத்தைதொடர்ந்து இந்தியாவின் இதிகாசமான மகாபாரதம் கதையை படமாக்கவிருக்கிறாராம் ராஜமவுலி.

எனவே இப்படம் பாகுபலியை விட பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

More Articles
Follows