தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆஸ்கர் விருதுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடு பல்வேறு மொழிகளில் இருந்து பல படங்கள் இந்த விருதுக்கு போட்டியிடுகின்றன.
எனவே இந்தியாவிலிருந்தும் படங்கள் அனுப்பி வைக்கப்படும்.
அதன்படி அடுத்தாண்டு 2022 ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ள விழாவுக்கு இந்தியா சார்பில் தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இருந்து 14 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஆஸ்கர் 94-வது அகாடெமி விருதுகள் 2022 அடுத்தாண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த ஆஸ்கர் விருது பட்டியலில் ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான’ பிரிவில் இந்திய திரைப்படங்களில் ஒன்றை தேர்வு செய்யும் பணி கடந்த சில தினங்களாக கொல்கத்தாவில் நடைபெற்றது.
ஹிந்தியில் ‘ஷெர்னி’ & மலையாளத்தில் ‘நாயாட்டு’ மற்றும் தமிழ் படங்களான ‘கூழாங்கல்’ ‘மண்டேலா’ உள்ளிட்ட 14 திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றன.
மலையாள படத் தயாரிப்பாளர் ஷாஜி என்.கருண் தலைமையில் மேற்கண்ட 14 திரைப்படங்களையும் மொத்தம் 15 நடுவர்கள் திரையிட்டு பார்வையிட்டனர்
யோகிபாபு நடித்த ‘மண்டேலா’ படத்தை அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியிருந்தார். இந்த தகவலை நேற்று நம் தளத்தில் பார்த்தோம்.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் சார்பில் ‘கூழாங்கல்’ தயாரிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா சார்பில் 2022ம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் ‘கூழாங்கல்’ தேர்வாகியுள்ளது.
இப்படத்தை பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார்.
இந்த ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவில் கூழாங்கல் திரைப்படத்துக்கு “டைகர் விருது” கிடைத்தது. டைகர் விருதை வென்ற முதல் தமிழ் படம் கூழாங்கல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் செல்லப்பாண்டி மற்றும் கருத்தடையான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த ஆனந்தமான ஆஸ்கார் தேர்வு தகவலை தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டார்.
இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடம் இந்தியா சார்பில் ஆஸ்கார் போட்டிக்கு மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வானது.
இதுவரை எந்தவொரு இந்திய திரைப்படமும் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதை வென்றதில்லை என்பதுதான் இங்கே வருத்தமான ஒன்றாகும்.
koozhangal will represent India at the Oscar Awards 2022