சூரிக்கு இள வயது நடிகையை ஜோடியாக்கிய சிவகார்த்திகேயன்

சூரிக்கு இள வயது நடிகையை ஜோடியாக்கிய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சூரி நடிக்கும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தை ‘கூழாங்கல்’ புகழ் பி.எஸ். வினோத்ராஜ் இயக்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் மலையாள இளம் நடிகை அன்னா பென் கதாநாயகியாக நடிக்கிறார்.

‘ஹெலன்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘கப்பா’ உள்ளிட்ட மலையாளப் படங்களுக்காக பெரும் புகழைப் பெற்ற பிறகு, 27 வயதான அவரது முதல் தமிழ் முயற்சி இதுவாகும். இந்த அற்புதமான திட்டத்தின் கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

Sivakarthikeyan signs a famous young actress as Soori’s pair in new project

மாஸ் கமர்ஷியல் இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன் .. ஹாட் அப்டேட்ஸ் இதோ

மாஸ் கமர்ஷியல் இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன் .. ஹாட் அப்டேட்ஸ் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாஸ் கமர்ஷியல் ஆக்‌ஷன் படத்திற்காக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் உடன் சிவகார்த்திகேயன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன்-ஏஆர்எம் படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளதாக புதிய தகவல்கள் வருகின்றன.

ஆதாரங்களின்படி, பி. மது தனது லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பேனரின் கீழ் இந்த படத்தை தயாரிக்கிறார்.

முன்னதாக விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன் நடிப்பில் ‘அயோக்யா’ படத்தை தயாரித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது .

படம் 2023 ஆம் ஆண்டின் மத்தியில் திரைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 2024 கோடையில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

Sivakarthikeyan’s new film with mass commercial director ready to take off?

தனுஷ் படத்தில் இணைந்த பா ரஞ்சித் பட நடிகை…

தனுஷ் படத்தில் இணைந்த பா ரஞ்சித் பட நடிகை…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’.

இப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர் தனுஷ் தனது இரண்டாவது படத்தை இயக்க தயாராகிவிட்டார்.

விஷ்ணு விஷால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ள இப்படத்திற்கு D50 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் கடைசியாக நடித்த துஷாரா விஜயன், தனுஷ் இயக்கும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் முக்கிய வேடங்களில் நடிக்க காளிதாஸ் ஜெயராம் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

துஷாரா விஜயன்

Dushara Vijayan to star in Dhanush’s

அஜித்தின் ‘துணிவு’ படம் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

அஜித்தின் ‘துணிவு’ படம் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’.

இப்படத்தில் மஞ்சு வாரியர், மோகன சுந்தரம், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜனவரி 11 அன்று பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்குதிரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

‘துணிவு’ படத்தின் தமிழக வெளியிட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றது.

இப்படத்தின் OTT வெளியீட்டிற்கான நடவடிக்கைகளையும் தயாரிப்பாளர்கள் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், அஜித்தின் ‘துணிவு’ படம் பிப்ரவரி 10 முதல் OTT இல் ஸ்ட்ரீமிங் தொடங்கும் என்றும். மேலும், ‘துணிவு’ படம் அதன் 30வது நாள் முடிந்தவுடன் பிரபலமான OTT தளத்தில் கிடைக்கும் கூறப்படுகிறது.

Ajith’s ‘Thunivu’ OTT Release Date Announcement

அபர்ணா மேல் கைவைத்த மாணவர்.. வலுக்கும் எதிர்ப்பு.. மஞ்சிமா கடுப்பு.. மன்னிப்பு கேட்ட மாணவன்.!

அபர்ணா மேல் கைவைத்த மாணவர்.. வலுக்கும் எதிர்ப்பு.. மஞ்சிமா கடுப்பு.. மன்னிப்பு கேட்ட மாணவன்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் அபர்ணா பாலமுரளி.

இவர் இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.

இவர் தற்போது ‘தங்கம்’ என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இதற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் வினித் ஸ்ரீனிவாசனுடன் கலந்து கொண்டார்.

அப்போது சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் அபர்ணாவுக்கு பூங்கொடுத்து கொடுத்தார்.

அதனை பெற்றுக் கொள்ளும் போது திடீரென அந்த மாணவர் அபர்ணாவின் தோல் மீது கை வைத்தார்.. இதனால் தட்டி விட்டு விலகிச் சென்றார் அபர்ணா.

இதனையடுத்து அங்கு சலசலப்பு உண்டானது.

இதனால் மேடை ஏறி அந்த மாணவன் தான் தவறாக நடக்க முயற்சிக்கவில்லை என்றும், அபர்ணாவின் தீவிர ரசிகன் என்பதால் உணர்ச்சிவசப்பட்டு அப்படி நடந்தாகவும் விளக்கமளித்தார்.

ஆனாலும் மீண்டும் அபர்ணாவிடம் கை கொடுக்க வந்தார். ஆனால் நடிகையோ, கையைக் கொடுக்காமல் வேண்டாம் என சிரித்துக் கொண்டே பின்வாங்கினார்.

இதனால் மேடையிலேயே மன்னிப்பு கேட்டார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பதிவு செய்து நடிகை மஞ்சிமா மோகன் ‘Unbelievable and disgusting’ என கோபத்துடன் கூறியுள்ளார்.

Student misbehaves with Aparna Balamurali; Manjima Mohan reacts

தனி ஒருவன் 2 படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி மனம் திறந்த ஜெயம் ரவி

தனி ஒருவன் 2 படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி மனம் திறந்த ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் ஜெயம் ரவி தனி ஒருவன் 2 பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டார்.

ஜெயம் ரவியின் சகோதரர் மோகன் ராஜா இயக்கிய மிகவும் பாராட்டப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லரின் தொடர்ச்சி என்பதால் தனி ஒருவன் 2 மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும்.

“தனி ஒருவன் 2 கண்டிப்பாக இயக்கப்படும். நானும் என் சகோதரனும் இப்போது பிஸியாக இருக்கிறோம்.

எங்கள் அட்டவணைகள் ஒத்திசைந்ததும், நாங்கள்அப்பணியைத் தொடங்குவோம். படத்தின் கதை அசாதாரணமாக உருவாகியுள்ளது.

ஆம், தனி ஒருவன் 2 படத்தின் ஸ்கிரிப்ட் தயாராக உள்ளது என்றார் ரவி.

Here’s what Jayam Ravi has to say about his role in Thani Oruvan 2!

More Articles
Follows