ரஞ்சித் ஒரு பக்கம்.. முத்தையா & மோகன் மற்றொரு பக்கம்.; ‘அருவா சண்ட’ போடும் ஆதிராஜன்

ரஞ்சித் ஒரு பக்கம்.. முத்தையா & மோகன் மற்றொரு பக்கம்.; ‘அருவா சண்ட’ போடும் ஆதிராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் “அருவா சண்ட”.

பல தடைகளைத் தாண்டி இந்த படம் வருகிற டிசம்பர் 30-ம் தேதி உலகம் எங்கும் வெளியிடப்படுகிறது.

சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), இளையராஜா இசையில் நினைவெல்லாம் நீயடா ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், “அருவா சண்ட” படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

இப்படத்தை பற்றி இயக்குநர் கூறியதாவது:

என்னதான் நாகரிகம் வளர்ந்தாலும் ஜாதி சண்டைகளும் கௌரவக் கொலைகளும் தினசரி பத்திரிகைகளிலும் சேனல்களிலும் தலைப்புச் செய்தியாக வந்து கொண்டு தான் இருக்கிறது. சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் அமைப்போம் என்று வாய் கிழியப் பேசினாலும் சாதிக்கு ஒரு சங்கம் வைத்து வீதிக்கொரு பேனர் வைக்கும் கலாச்சாரத்தில் இருந்து தமிழகம் மீளவில்லை.

எனவே சமகால சமுதாயத்தின் பிரதிபலிப்பு தான் இந்த படம். இதில் புதுமுகம் ராஜா நடித்த கதையின் நாயகனாகவும், மாளவிகா மேனன் கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றனர்.

இருவரும் நடிப்பில் போட்டி போட்டு தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியிருக்கின்றனர். கபடி வீரரான ராஜா கபடி காட்சிகளில் தன் திறமையை காட்டியிருப்பதுடன் சண்டை காட்சிகளிலும் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். அவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் நிச்சயமாக ரசிகர்கள் கவனத்தை ஈர்ப்பது உறுதி.

தேசிய விருது பெற்ற நடிகை சரண்யா பொன்வண்ணன் இதுவரை நடிக்காத மாறுபட்ட கதாபாத்திரத்தில் வள்ளியம்மாவாக வாழ்ந்திருக்கிறார்.

இந்த படத்திற்காக தினமும் ஒன்றை மணி நேரம் டல் மேக்கப் போட்டு தன்னை ஒரு செங்கல் சூளை தொழிலாளியாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். இந்த கேரக்டரை வேறு யாராலும் இத்தனை சிறப்பாக கையாண்டிருக்க முடியாது.

அதேபோல ஆடுகளம் நரேன், சௌந்தர்ராஜா இருவரும் வில்லன்களாக வெளுத்து வாங்கி இருக்கிறார்கள். இருவருக்குமே இந்த படம் இன்னொரு “சுந்தரபாண்டியனாக” இருக்கும்.

கஞ்சா கருப்பு காதல் சுமார் விஜய் டிவி சரத் டைரக்டர் மாரிமுத்து மதுரை சுஜாதா வெங்கடேஷ் ரஞ்சன் யாசர் ரமேஷ் மூர்த்தி வீரா நிஷா ஆகியோரும் கேரக்டர்களாக மாறியிருக்கிறார்கள்.

இந்த படத்தில் பல கபடி போட்டிகள் இடம் பெறுகின்றன. நிஜமான கபடி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி இருக்கின்றார்கள். பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு கபடி போட்டிகளை விறுவிறுப்பாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பாண்டி.

தரண்குமார் இசையமைத்திருக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதி இருக்கிறார்.

“வீரத்தமிழன் விளையாட்டுடா…” என்ற கபடிக்கான சிறப்பு பாடலையும், அம்மா பாடலையும் நான் எழுதி இருக்கிறேன்.

வைரமுத்து எழுதிய “சிட்டு சிட்டு குருவி” பாடலை நடிகை ரம்யா நம்பீசன் பாடியிருக்கிறார்.

வி ஜே சாபுஜோசப் எடிட்டிங் செய்திருக்கிறார். தீனா, ராதிகா மாஸ்டர்கள் நடன காட்சிகளை வடிவமைத்துள்ளனர். தளபதி தினேஷ் சண்டைக்காட்சி அமைக்க சுரேஷ் கல்லேரி கலை ஆக்கத்தை கவனித்திருக்கிறார்.

படம் முழுவதும் வசனங்கள் வாள் சண்டை நடத்தும். கிளைமாக்ஸ் காட்சி உயிரை உலுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்திய சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் வந்ததே இல்லை.படம் முடிந்து போகும் போது கலங்காத நெஞ்சமும் கலங்கிவிடும்.

கசியாத விழிகளும் கசிந்து விடும்.இது சத்தியம். சரண்யா மேடத்திற்கு இந்த படம் பல விருதுகளை அள்ளித் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

இயக்குநர் பா.ரஞ்சித் ஒரு சமூகத்திற்காக படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இயக்குநர்கள் முத்தையா, மோகன் ஜி ஆகியோர் வெவ்வேறு சமுதாயத்தை முன்னிலைப்படுத்துகின்றனர்.

ஆனால் ‘அருவா சண்ட’ இரண்டு தரப்பு நியாயங்களையும் அநியாயங்களையும் உரக்கப் பேசும்…. அனல் பறக்கப் பேசும் என்பது உறுதி”

இவ்வாறு ஆதிராஜன் கூறினார்.

விஜய்தான் நம்பர் 1.. அமைச்சர் உதயநிதியை சந்திக்கும் ‘வாரிசு’ புரொடியூசர்.; டென்ஷனில் அஜித் ரசிகர்கள்

விஜய்தான் நம்பர் 1.. அமைச்சர் உதயநிதியை சந்திக்கும் ‘வாரிசு’ புரொடியூசர்.; டென்ஷனில் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த ‘வாரிசு’ மற்றும் அஜித் நடித்த ‘துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் 2023 பொங்கல் தினத்தில் வெளியாகி மோத உள்ளன.

இதனையடுத்து தமிழகத்தில் இந்த இரு படங்களுக்கும் தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

‘துணிவு’ பட வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் ரெட் ஜெயின் நிறுவனத்திற்கு அதிக தியேட்டர்களை ஒதுக்கி வருகின்றனர்.

இதறால் விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு குறைவான தியேட்டர்களே கிடைத்துள்ள நிலையில் ‘வாரிசு’ பட தயாரிப்பாளர் தில் ராஜூ பேசிய பேச்சு சர்ச்சையாகி உள்ளது.

இவர் அண்மையில் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில்.. “தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் 1. அஜித்தை விட விஜய் தான் கூடுதல் வியாபாரத்தில் உள்ளார். இதனால் வாரிசு திரை படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் ஒதுக்க வேண்டும்” என அவர் பேசி இருந்தார்.

மேலும் தான் உதயநிதியை சந்தித்து இது குறித்து பேச உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.

அவரின் பேச்சு அஜித் ரசிகர்களை டென்ஷன் ஆகியுள்ளது.்

‘துணிவு’ படத்தை தொடர்ந்து ‘வாரிசு’ படத்தையும் வாங்கினார் அமைச்சர் உதயநிதி

‘துணிவு’ படத்தை தொடர்ந்து ‘வாரிசு’ படத்தையும் வாங்கினார் அமைச்சர் உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ படத்தின் தமிழக வெளியிட்டு உரிமையை உதயநிதி ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

இதனால் ‘துணிவு’ படத்திற்கு மட்டும் தமிழகத்தில் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு வருவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இதனிடையில் விஜய்யின் ‘வாரிசு’ பட தமிழக வெளியீடு உரிமையை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக லலித் குமார் பெற்றுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 9 விநியோக ஏரியாக்களில் திருநெல்வேலி – கன்னியாகுமரி பகுதிக்கான உரிமையை முத்துக்கனி பெற்றுள்ளார்.

திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் பால முரளி வெளியிடுகிறார். மதுரையில் பைவ் ஸ்டார் நிறுவனமும், சேலத்தில் சேலம் கார்ப்பரேஷன் சார்பில் செந்தில் என்பவரும் வெளியிடுகின்றனர்.

இந்த நிலையில் சென்னை சிட்டி, செங்கல்பட்டு – தென் ஆற்காடு – வட ஆற்காடு – கோயமுத்தூர் ஆகிய ஐந்து ஏரியாக்களில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் ”வாரிசு’ படத்தை வெளியிடுகிறது.

இதனை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

We are making this a memorable #VarisuPongal for you!

Happy to announce our TN Distributors of #Thalapathy @actorvijay Sir’s #Varisu ?

@SVC_official @directorvamshi @iamRashmika @MusicThaman @RedGiantMovies_ @Jagadishbliss https://t.co/uXsvRZs1jP

கார்த்தியின் ஜப்பான் படத்தின் சூப்பர் அப்டேட் இதோ

கார்த்தியின் ஜப்பான் படத்தின் சூப்பர் அப்டேட் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தியின் அடுத்த படமான ஜப்பான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இப்போது இந்தப் படத்தைப் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.

‘ஜப்பான்’ படத்தின் முதல் ஷெட்யூலை வெற்றிகரமாக முடித்துவிட்டு, படக்குழு பிரேக் எடுத்து வருகிறது .

அடுத்த ஷெட்யூல் சென்னையில் ஒரு வாரத்திற்குப் பிறகு தொடங்கும், எனவும் படத்தின் முக்கிய நட்சத்திரங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் இரண்டாவது ஷெட்யூல் இல் படமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க, அனு இம்மானுவேல் நாயகியாக நடிக்கிறார்.

சினிமா பாஃர்முலாவை உடைத்த அஜித்.; ராஜமௌலி சொல்லுக்கு தலையாட்டிய கமல்

சினிமா பாஃர்முலாவை உடைத்த அஜித்.; ராஜமௌலி சொல்லுக்கு தலையாட்டிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில தினங்களுக்கு முன் கமல்ஹாசன், ராஜமௌலி, கௌதம் மேனன், லோகேஷ் கனகராஜ், பிரித்திவிராஜ் ஆகியோர் ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

அப்போது பலதரப்பட்ட விஷயங்களை அவர்கள் பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது.. “ஹீரோ ஒருவர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என ஒரு சினிமா ஃபார்முலா காலம் காலமாக இருந்து வந்தது. அதை மாற்றியமைத்தவர் அஜித் தான்.

ஹீரோ என்றால் கருப்பு தலைமுடி & தாடியுடன் தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. நரைத்த முடியுடன் தாடி தான் இருக்கலாம் என முதலில் செய்து காட்டியவர் அஜித் தான் என்று பேசினார் ராஜமௌலி.

அதற்கு ஆமாம் என்று தலையாட்டினார் கமல்ஹாசன்.

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Ajith who broke the cinema formula says Rajamouli

JUST IN என் இயக்கத்தில் அந்தோணி தாசன் ஹீரோ… – சீனுராமசாமி

JUST IN என் இயக்கத்தில் அந்தோணி தாசன் ஹீரோ… – சீனுராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாட்டுப்புறப் பாடல்களை பாடி பிரபலமானவர் அந்தோணி தாசன்.

கோயில் திருவிழாக்களிலும் கிராமிய நிகழ்ச்சிகளிலும் பாட்டு பாடி அசத்திய இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தன.

இதனை தொடர்ந்து திரையுலகில் பின்னணி பாடகர் ஆக நிறைய பாடல்களை பாடியுள்ளார். மேலும் ஓரிரு படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.

இவர் தற்போது ஒரு பாடல்கள் வெளியிடும் இசை நிறுவனத்தை நிறுவியுள்ளார்.

இதற்கான விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் பின்னணி பாடகி சின்னக்குயில் சித்ரா இயக்குனர் சீனுராமசாமி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

சீனு ராமசாமி மேடையில் பேசும்போது..

“நான் இயக்கிய ‘தர்மதுரை’ படத்தில் ஒரு காட்சியில் நாட்டுப்புற கலைஞர்கள் நடித்திருப்பார்கள். அவர்கள் அடிக்கும் ஒரு இசைக்கு தப்பாட்டம் அல்ல இதுதான் சரியான ஆட்டம் என்ற வசனத்தை வைத்திருப்பேன். நாட்டுப்புற கலைஞர்களை கௌரவப்படுத்தவே அந்த வசனம் எழுதப்பட்டது.

அந்தோணி தாசன் ஒரு பாடகர் மட்டுமல்ல. ஒரு அற்புதமான நடிகர் ஒளிந்து இருக்கிறார். அவரது நடிப்பை கண்டு நான் வியந்திருக்கிறேன்.

தற்போது இடி முழக்கம் படத்திலும் ஒரு பாடல் பாடியுள்ளார். விரைவில் அவரை நாயகனாக வைத்து நான் ஒரு படத்தை இயக்க உள்ளேன்.அது பெரிய படமாக இருக்கும்” என மேடையில் தெரிவித்தார் சீனு ராமசாமி.

சீனுராமசாமி

Seenu Ramasamy speech at Anthony Daasans Folk Marley Records Launch

More Articles
Follows