காஷ்மோரா டிரைலர் & இசை வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

காஷ்மோரா டிரைலர் & இசை வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi kaashmoraஜோக்கர் படத்தை தொடர்ந்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் காஷ்மோரா.

கோகுல் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசையை அக்டோபர் 7ஆம் தேதி வெளியிடவுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

‘தானா சேர்ந்த கூட்டம்’ டைட்டிலை உறுதி செய்த சூர்யா

‘தானா சேர்ந்த கூட்டம்’ டைட்டிலை உறுதி செய்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya 35 movieவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க அனிருத் இசையமைப்பில் புதிய படம் விரைவில் உருவாக உள்ளது.

இதில் சூர்யாவுடன் சதீஷ், மொட்டை ராஜேந்திரன், கேஎஸ். ரவிக்குமார், சரண்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு தலைப்பை சற்றுமுன் உறுதி செய்துள்ளனர்.

நாம் முன்பே கூறியது போல ரஜினியின் பாட்ஷா பட பன்ச் டயலாக்கான ‘ தானா சேர்ந்த கூட்டம்’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

இப்படத்தை ஞானவேல் ராஜா தன் ஸ்டூடியோ கிரீன் சார்பாக தயாரிக்கிறார்.

‘சில சமயங்களில்’ படம் உருவாக என்ன காரணம்? – பிரியதர்ஷன் பேச்சு

‘சில சமயங்களில்’ படம் உருவாக என்ன காரணம்? – பிரியதர்ஷன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

priyadharshanபிரபு தேவா ஸ்டூடியோஸ்’ மற்றும் ‘திங்க் பிக் ஸ்டுடியோஸ்’ சார்பில் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குனர் விஜய் இருவரும் இணைந்து தயாரித்து இருக்கும் படம் ‘சில சமயங்களில்’

இதில் பிரகாஷ்ராஜ், நாசர், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன், வருண், சண்முகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை வெறும் 23 நாட்களில் படமாக்கியுள்ளார் பிரியதர்ஷன்.

இளையராஜா பிண்ணனி இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவை சமீர் தாஹிர் செய்ய, கலையை சாபு சிரில் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரியதர்ஷன் பேசியதாவது….

“திரைப்படம் உருவாக்குவதில் இரண்டு முறைகள் இருக்கிறது. ஒன்று, நம்முடைய திறமையை வெளிப்படுத்துவதற்காக திரைப்படத்தை உருவாக்குவது.

மற்றொன்று, நம் உள்ளத்தில் உதயமான கதையை நமக்காகவே உருவாக்குவது.

‘காஞ்சிவரம்’ படத்திற்கு பிறகு என் உள்ளத்தில் இருந்து இரண்டாவது முறையாக உருவானதே ‘சில சமயங்களில்’ என்று கூறினார் இயக்குனர் பிரியதர்ஷன்.

ரஜினிகாந்த்-விருச்சிக காந்த் வரிசையில் ‘ரெமோ’வில் வரும் ‘காந்த்’ யார்?

ரஜினிகாந்த்-விருச்சிக காந்த் வரிசையில் ‘ரெமோ’வில் வரும் ‘காந்த்’ யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan keerthyரஜினிகாந்த் என்ற பெயர் பாப்புலர் ஆனவுடன் நிறைய பெயர்கள் காந்த் என்ற பெயருடன் தொடர்பு கொண்டு வந்தது.

விஜயகாந்தை தொடர்ந்து நளினிகாந்த் என்றொரு நடிகர் இருந்தார்.

90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் அண்மையில் வெளியான யாமிருக்க பயமே படத்தில் பேய் பங்களாவில் வசிக்கும் முதியவராக நடித்திருப்பார்.

சில வருடங்களுக்கு முன்பு வெளியான முண்டாசுப்பட்டி படத்தில் கூட ராம்தாஸின் கேரக்டர் பெயர் முனீஷ்காந்த்தான்.

அட காதல் படத்துல கூட விருச்சிக காந்த் இருப்பாரே. அது ஞாபகம் உள்ளதுதானே.

இந்நிலையில் ரெமோ படத்தில் கூட இப்படியொரு பெயர் உள்ளதாம்.

இதில் சதீஷின் கேரக்டர் பெயர் வள்ளிகாந்த் என்று தெரியவந்துள்ளது.

சிவகார்த்திகேயன் அருண் என்ற ஆண் கேரக்டரிலும் ரெமோ என்ற பெண் நர்ஸ் கேரக்டரிலும் நடித்துள்ளார்.

டாக்டர் காவ்யா கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

ஸ்ரீதிவ்யா மற்றும் கே.எஸ். ரவிகுமார் ஆகியோர் அவர்களுடைய சொந்த பெயரிலேயே இதில் நடித்துள்ளனர்.

அஞ்சலியை தொடர்ந்து சூர்யாவுடன் ஆட்டம் போடும் நடிகை

அஞ்சலியை தொடர்ந்து சூர்யாவுடன் ஆட்டம் போடும் நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya danceஹரி இயக்கத்தில் எஸ் 3 படத்தில் நடித்து வருகிறார்.

இது சிங்கம் படத்தின் 3வது பாகம் என்பது நாம் அறிந்ததே.

இதன் 2ஆம் பாகத்தில் அனுஷ்கா, ஹன்சிகா நடித்திருந்தாலும், ஒரு பாடலுக்கு அஞ்சலி ஆட்டம் போட்டார்.

தற்போது இந்த பாகத்தில் இடம் பெறவுள்ள ‘ஓ சோன சோனாசூப்பர் சோனிக்’ என்ற பாடலில் பிரபல நடிகை நீதுசந்திரா ஆட்டம் போடவிருக்கிறாராம்.

தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை, யாவரும் நலம், ஆதிபகவன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபுதேவா உடன் மோதும் சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி

பிரபுதேவா உடன் மோதும் சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prabu devaவிஜயதசமி நாட்கள் என்றாலே கொண்டாட்டம்தான்.

நிறைய நாட்கள் விடுமுறையோடு புதுப்படங்களும் பட்டைய கிளப்பும்.

எனவே இந்த விடுமுறை நாட்களை முன்னிட்டு, அக்டோபர் 7ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ ரிலீஸ் ஆகிறது.

இதே நாளில் ரத்னசிவா இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள றெக்க படமும் வெளியாகிறது.

தற்போதைய தமிழ் சினிமாவில் இவர்கள் இருவருக்கும் பலத்த போட்டி நிலவுகிறது என்ற நிலையில், இருவரது படங்களும் வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர்களுடன் பிரபுதேவா தயாரித்து நடித்துள்ள தேவி என்ற படமும் வெளியாகிறது.

தமன்னா நாயகியாக நடித்துள்ள இப்படத்தை விஜய் இயக்கியுள்ளார்.

ஒரே நேரத்தில் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகிறது.

இந்த படங்களுடன் ஜீவாவின் கவலை வேண்டாம் படமும் ரிலீஸ் ஆகவுள்ளது.

More Articles
Follows