விஜய்-அட்லியுடன் மெர்சல் படத்தை பார்த்தார் கமல்

விஜய்-அட்லியுடன் மெர்சல் படத்தை பார்த்தார் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal vijay mersalமெர்சல் படத்தில் விஜய் பேசிய ஜிஎஸ்டி வசனங்கள் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜக.வினர் குரல் கொடுக்க, சென்சார் செய்யப்பட்ட படத்தை மறு தணிக்கை செய்யாதீர் என குரல் கொடுத்திருந்தார் கமல்ஹாசன்.

இந்நிலையில் கமலுக்கு நன்றி தெரிவிக்க விஜய், அட்லி மற்றும் மெர்சல் தயாரிப்பாளர்கள் ஆகியோர் அவரை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

அப்போது விஜய் மற்றும் படக்குழுவினருடன் ‘மெர்சல்’ திரைப்படத்தை பார்த்துள்ளார் கமல்ஹாசன்.

அவரது ப்ரைவேட் தியேட்டரில் இப்படம் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Kamalhassan watched Mersal movie along with Vijay and Atlee

mersal team with kamal

சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் மீனா; முதன்முறையாக இணையும் த்ரிஷா

சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் மீனா; முதன்முறையாக இணையும் த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

meena mohanlalமோகன்லால், விஷால், ஹன்சிகா நடித்துள்ள ‘வில்லன்’ படம் வருகிற அக். 27ஆம் தேதிக்கு திரைக்கு வரவுள்ளது.

இதனையடுத்து ‘ஒடியன்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் மோகன்லால்.

இந்நிலையில், அஜய் வர்மா என்ற அறிமுக இயக்குனர் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்.

இதில் நாயகியாக மீனா நடிக்கவுள்ளார்.

இவர்கள் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்து, சூப்பர் டூப்பர் ஜோடி என பெயர் எடுத்துள்ளனர்.

இந்நிலையில் மற்றொரு நாயகியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

மலையாளத்தில் த்ரிஷாவுக்கு இது 2-வது படம் என்றாலும் மோகன்லாலுடன் இணைவது இதுவே முதன்முறையாகும்.

முதல் படமாக ‘ஹேஜுட்’ என்ற படத்தில் நிவின்பாலியுடன் நடிக்கிறார் த்ரிஷா.

Meena and Trisha to play the female leads in Mohanlals next

முக்கியமான தலைப்பை பேசியிருக்கிறார்கள்… மெர்சலுக்கு ரஜினி பாராட்டு

முக்கியமான தலைப்பை பேசியிருக்கிறார்கள்… மெர்சலுக்கு ரஜினி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Important topic addressed Rajini praises Viay movie Mersalவிஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி.க்கு எதிரான வசனங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை பாஜக.வினர் எதிர்க்க, அவர்களுக்கு எதிராகவும் மெர்சலுக்கு ஆதரவாக நாட்டின் முக்கிய தலைவர்கள் பேச ஆரம்பித்தனர்.

தமிழக அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை கருத்து சுதந்திரம் தேவை. சென்சார் செய்யப்பட்ட படத்தில் காட்சிகளை நீக்கக் கூடாது என குரல் கொடுத்தனர்.

இந்நிலையில் இன்று சற்றுமுன் மெர்சலை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அப்படம் பற்றி தன் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில்…

`முக்கியமான தலைப்பை பேசியிருக்கிறார்கள். வெல்டன். மெர்சலுக்கு குழுவுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

Important topic addressed Rajini praises Viay movie Mersal

rajini tweet mersal

மெர்சலை பற்றி ரஜினி ஏன் பேசல? விஜய்யே இன்னும் பேசலையே! ரசிகர்கள் மோதல்

மெர்சலை பற்றி ரஜினி ஏன் பேசல? விஜய்யே இன்னும் பேசலையே! ரசிகர்கள் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Vijay fans clash in Mersal issueவிஜய் நடித்த மெர்சல் படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்று இருந்தன.

இதை தமிழக பாஜக.வினர் எதிர்க்க, மெர்சலுக்கும் தமிழர்களுக்கும் ஆதரவாக ராகுல் காந்தி பேச, தற்போது இது நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

மேலும் கமல்ஹாசன், பிரபு, சரத்குமார், விஷால், விஜய்சேதுபதி, உள்ளிட்ட பலரும் மெர்சலுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

ஆனால் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மௌனம் காத்து வருகிறார்.

இதனை கண்டிக்கும் வகையில்… பாஜக.வுக்கு பயந்து ஒதுங்கிறாரா ரஜினி? என விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கேட்டு வருகின்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஜினி ரசிகர்களும் களம் இறங்கியுள்ளனர்.

மெர்சல் படத்திற்கு ஆதரவாக பலரும் கருத்து சொல்வது இருக்கட்டும்.

உங்கள் ஹீரோ விஜய் நன்றி மட்டும்தானே சொன்னார்? பாஜக.வினர் பற்றி இதுவரை என்ன சொன்னார்? அட்லி என்ன பேசினார்? சம்பந்தப்பட்ட பட கலைஞர்களே இதுவரை பேசவில்லையே.

மெர்சல் பற்றி ரஜினி வாய்ஸ் கொடுத்தால் மெர்சலை மக்கள் மறந்துவிடுவார்கள்.

ரஜினி பற்றிதான் மக்கள் பேசுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

இவையில்லாமல் மெர்சலை விட மத்திய மாநில அரசுகளை கடுமையாக சாடிய படம் ஜோக்கர்.

அப்படத்தை எங்கள் தலைவர் ரஜினி அப்போதே பாராட்டியிருக்கிறார். என அவரின் ட்விட்டர் பக்க பதிவுகளையும் பதிவிட்டு விஜய் ரசிகர்களுக்கு ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Rajinikanth‏Verified account @superstarrajini 18 Aug 2016

I applaud the team of #joker, brilliant film !
437 replies 4,679 retweets 16,689 likes

மெர்சலை நெட்டில் பார்க்க வெட்கமா இல்லை..? எச்.ராஜாவுக்கு விஷால் கேள்வி

மெர்சலை நெட்டில் பார்க்க வெட்கமா இல்லை..? எச்.ராஜாவுக்கு விஷால் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal BJP h rajaமெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளுக்கு பாஜக.வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக.வின் தேசிய செயலாளர் எச். ராஜா, மெர்சல் படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் பார்த்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் கூறியுள்ளதாவது…

ஒரு தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் ‘நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாக பார்த்தேன்’ என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

ஒருவேளை பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தை சட்டபூர்வமாகவே ஆக்கிவிட்டதா அரசுகள்? அதனால்தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள் என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

எச். ராஜா அவர்களுக்கு…

மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்?

உங்களை போன்ற ஒரு அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டு பிரதியை பார்ப்பது என்பது ஒரு உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவும், எதை செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

இது மிகவும் தவறான முன்னுதாரணம். இது எங்கள் மனதை கடுமையாக பாதித்துள்ளது. தங்களது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு பைரசியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என விஷால் கேட்டுக் கொண்டுள்ளார்.

Dont you feel ashame to support piracy Vishal question to BJP Raja

யார் தடுத்தாலும் நிறுத்த மாட்டோம்… மெர்சல் ரசிகர்கள் நியூ ரூட்

யார் தடுத்தாலும் நிறுத்த மாட்டோம்… மெர்சல் ரசிகர்கள் நியூ ரூட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay fans found new route in Mersal GST dialogue issueமெர்சல் படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே அப்படத்தை எதிர்பார்த்து கொண்டாட்டத்திற்கு தயாராக இருந்தவர்கள் விஜய் ரசிகர்கள்.

கடந்த அக். 18ல் தீபாவளிக்கு வெளியாகி பல சாதனைகளை மெர்சல் படைத்து வருகிறது.

அதே வேளையில் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் வசனங்களை நீக்க வேண்டும் என பாஜக.வினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

மேலும் தங்கள் மருத்துவ தொழிலை விஜய் அவமதித்து விட்டார் என மருத்துவ சங்கமும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க நாங்கள் தயாராகவுள்ளோம் என மெர்சல் தயாரிப்பாளரே அறிவித்துவிட்டார்.

இதனைக் கண்ட விஜய் ரசிகர்கள், தங்கள் தளபதி சரியாக கருத்தை தான் பேசியுள்ளார்.

ஒருவேளை அந்த காட்சிகளை நீக்கினால், அந்த காட்சிகளை நாங்கள் வாட்ஸ் அப்பில் மக்களிடையே பகிர்வோம்.

எங்களை யாரும் தடுக்க முடியாது என புது ரூட்டில் பயணிக்கின்றனர் இந்த தளபதி ரசிகர்கள்.

Vijay fans found new route in Mersal GST dialogue issue

More Articles
Follows