தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
விழாவின் இறுதியாக கமல்ஹாசன் பேசியபோது…
தமிழ் படத்தை தூக்கி நிறுத்துவது தமிழ் படம் தான். தமிழ் படத்தை கெடுப்பதும் தமிழ் படம் தான்.
நல்ல படம் நாம் கொடுக்க வேண்டும். மக்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள்.
தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகரும் இல்லை. அது ரசிகர்கள் மட்டுமே. புதிதாக கொடுக்க கொடுக்க ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள்.
கமல்ஹாசன் நடித்த படங்களில் எந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என சிம்பு கேட்ட கேள்விக்கு.
நீங்கள் நிறைய படம் நடிக்க வேண்டும். ஆனால் ஒரு படம் நடிக்க வேண்டும் என்றால் அது என்னுடன் தான் நடிக்க வேண்டும்.
இந்த படத்தின் வெற்றி விழாவில் சிம்பு ஆனந்த கண்ணீர் விடுவதை நான் பார்க்க வேண்டும்.” என்று பேசினார் கமல்ஹாசன்.
Kamal talks about Simbu and Tamil Cinema
@SilambarasanTR_
#VendhuThanindhathuKaadu #KamalHaasan #SilambarasanTR
#கமல்ஹாசன்
#VendhuThanindhathuKaadu #KamalHaasan #SilambarasanTR